Related Posts Plugin for WordPress, Blogger...
Keywords


எண்ணெய் கத்திரிக்காய் மசாலா

View previous topic View next topic Go down

எண்ணெய் கத்திரிக்காய் மசாலா

Post  ishwarya on Sat Apr 13, 2013 1:31 pm

தேவையானப்பொருட்கள்:

கத்திரிக்காய் -6-8
வெங்காயம் -1
தக்காளி -2
கடுகு –சிறிதளவு
கறிவேப்பிலை –சிறிதளவு
எண்ணெய் -2 குழிக்கரண்டி
உப்பு -தேவைகேற்ப

மசாலா அரைக்க:

இஞ்சி -ஒரு துண்டு
பூண்டு -ஆறு பற்கள்
மிளகாய்த் தூள் -ஒரு தேக்கரண்டி
குழம்பு பொடி -3 டேபிள் ஸ்பூன்
மஞ்சள் தூள் -அரைத் தேக்கரண்டி
துருவிய தேங்காய் -ஒரு கோப்பை
வறுத்த வேர்க்கடலை -ஒரு மேசைக்கரண்டி
வறுத்த எள்ளு – இரண்டு தேக்கரண்டி
கொத்தமல்லி -ஒரு பிடி
உப்பு -தேவைகேற்ப

செய்முறை:

அரைக்க தேவையான பொருட்களை மிக்சியில் மைய அரைக்கவும்.
கத்திரிக்காயை நான்காக வகுந்து அதன் நடுவில் அரைத்த மசாலாவை அடைத்து ஊற வைக்கவும்.
தக்காளி வெங்காயத்தை தனியே அரைத்து வைக்கவும்.
கடாயில் எண்ணெயை காயவைத்து கடுகு கறிவேப்பிலை போட்டு பொரிந்ததும் தக்காளி வெங்காய விழுதைப் போட்டு நீர் முழுவதும் வற்றும் வரை வதக்கவும்.
பின்பு அதில் கத்திரிக்காயைப் போட்டு சிறிது உப்பைத் தூவி கிளறி வேகவிடவும்.
காய் பாதியாக வெந்ததும் மீதியுள்ள அரைத்த மசாலாவில் சிறிது நீரை சேர்த்து கரைத்து ஊற்றி காய் முற்றிலும் வெந்ததும் இறக்கி கொத்தமல்லியைத் தூவி பரிமாறவும்.
சுவையான எண்ணெய் கத்திரிக்காய் மசாலா தயார்.

ishwarya

Posts : 24602
Join date : 01/02/2013

View user profile

Back to top Go down

View previous topic View next topic Back to top


 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum