Related Posts Plugin for WordPress, Blogger...
Keywords


தேவ அன்னையின் காட்சிகள்

View previous topic View next topic Go down

தேவ அன்னையின் காட்சிகள்

Post  birundha on Sat Apr 13, 2013 8:49 pm


இயேசுவின் தாயான அன்னை மரியா உலகின் பல்வேறு பகுதிகளில் மக்களுக்கு காட்சியளித்துள்ளார். அவரது காட்சி நடந்த இடத்தை வைத்து அவரை பல்வேறு பெயர்களில் அழைக்கிறார்கள். அவர் காட்சியளித்த இடங்கள் இதோ...

குவாடலூப்பே அன்னை............

1531ஆம் ஆண்டு, மெக்சிகோ நாட்டின் குவாடலூப்பே நகரில் அன்னை மரியா காட்சி அளித்தார். அப்பகுதியில் வாழ்ந்த விவசாயிகளான யுவான் டியகோ, யுவான் பெர்னார்டினோ ஆகியோருக்கு டிசம்பர் 9ந்தேதி முதல் 12ந்தேதி வரை அன்னை தோன்றினார். "வாழ்வளிக்கும் உண்மை கடவுளின் தாய் நான். என்னைத் தேடி வரும் அனைவருக்கும் தாயன்பையும் கனிவையும் தருவேன்.

மக்கள் திருப்பயணமாக வந்து செல்ல இங்கு எனக்கு ஓர் ஆலயம் கட்ட வேண்டும்'' என்று மரியன்னை கூறினார். இது பற்றி அப்பகுதி ஆயரிடம் யுவான் டியகோ கூறியபோது, அன்னை ஓர் அடையாளம் காட்ட வேண்டுமென அவர் கேட்டார்.

அந்த பருவத்தில் பூக்காத மலர்கள் சிலவற்றைப் பறித்துச் சென்று ஆயர் முன் கொட்டியபோது, யுவானின் துண்டில் அன்னையின் உருவம் அற்புதமாக பதிந்திருந்தது. 20 ஆண்டுகளில் இற்றுப் போகக்கூடிய கற்றாழை நாரால் நெய்யப்பட்ட அந்த துணி 500 ஆண்டுகளாக அழியாமல் உள்ளது.

லூர்து அன்னை.........

1858ஆம் ஆண்டு, பிரான்ஸ் நாட்டின் லூர்து நகரில் அன்னை மரியா காட்சி அளித்தார். அப்பகுதியில் விறகு பொறுக்கச் சென்ற பெர்னதெத் என்ற இளம்பெண்ணுக்கு பிப்ரவரி 11ந்தேதி முதல் ஜுலை 16ந்தேதி வரை 18 முறை அன்னை தோன்றினார்.

"நானே அமல உற்பவம்'' அதாவது `பாவமின்றி பிறந்தவர்' என்று தன்னை அறிமுகம் செய்து கொண்ட மரியன்னை, அங்கு ஓர் ஆலயம் கட்டப்பட வேண்டுமெனவும், பாவிகள் மனம் மாற செபிக்க வேண்டுமென்றும் கேட்டுக் கொண்டார்.

மரியன்னையின் காட்சியை பெர்னதெத் பார்த்துக் கொண்டிருந்த வேளையில் அரை மணி நேரம் நெருப்பால் சுட்டும், அவருக்கு தீக்காயமோ வலியோ ஏற்படவில்லை. அன்னையின் அறிவுறுத்தலுக்கு ஏற்ப பெர்னதெத் தோண்டிய நீரூற்று, இன்றளவும் பலரது தீராத நோய்களை குணப்படுத்தும் அருமருந்தாக திகழ்கிறது.

புனித பெர்னதெத்தின் உடலும் அழியாமல் உள்ளது. நாள்தோறும் ஆயிரக்கணக்கான வெளிநாட்டினர் தேடி சென்று தரிசிக்கும் புண்ணியத் தலமாக லூர்து நகர் விளங்குகிறது. அதைப் போன்றே, திரளான பக்தர்களை ஈர்த்து வருவதால்தான் வேளாங்கண்ணி கீழை நாடுகளின் லூர்து நகர் என்று அழைக்கப்படுகிறது.

பாத்திமா அன்னை..........

1917ஆம் ஆண்டு, முதல் உலகப் போர் நடந்து கொண்டிருந்த வேளையில் போர்ச்சுக்கல் நாட்டின் பாத்திமா நகரில் மரியன்னை காட்சி அளித்தார். அப்பகுதியில் ஆடு மேய்த்துக் கொண்டிருந்த லூசியா, ஜெசிந்தா, பிரான்சிஸ்கோ என்ற 3 சிறாருக்கு மே 13ந்தேதி முதல் அக்டோபர் 13ந்தேதி வரை 6 முறை அன்னை தோன்றினார்.

"நான் செபமாலை அன்னை'' என்று தன்னை அறிமுகம் செய்து கொண்ட மரியன்னை, பாவிகள் மனம் திரும்ப தவ முயற்சிகள் மேற்கொள்ள வேண்டுமென்றும், செபமாலை செபிக்க வேண்டுமெனவும் அறிவுறுத்தினார். மீண்டும் ஓர் உலகப்போர் தோன்றும், ரஷ்யா கம்யூனிச கொள்கைகளை விட்டு விலகும், கிறிஸ்தவ மக்களுக்கு எதிரான துன்புறுத்தல்கள் அதிகரிக்கும் - என்றாலும் இறுதியில் தனது மாசற்ற இதயம் வெற்றிபெறும் என்று முன்னறிவித்தார்.

இவற்றில் முதல் 2 அறிவிப்புகளும் நிறைவேறி விட்டன. மூன்றாவதாக அன்னை அறிவித்த வெற்றிக்காக கிறிஸ்தவர்கள் செபித்து வருகிறார்கள்.

சூரியனின் அற்புதம்..........

அன்னை மரியா பாத்திமாவில் காட்சி அளித்தபோது, சூரியனின் அற்புதம் ஒன்று நிகழ்ந்தது. 1917 அக்டோபர் 13ந்தேதி, அன்னையின் காட்சியைக் காண 70 ஆயிரம் பேர் கூடி இருந்தனர். அப்போது வானில் இருந்து பல வண்ணங்கள் தோன்றி மக்கள் மேல் ஒளிர்ந்தன. பெரிய மழைப் பெய்த வேளையிலும் அன்னை மரியா காட்சி அளித்த புதரும் 3 சிறார்கள் இருந்த இடமும் மட்டும் உலர்ந்தே காணப்பட்டது.

திடீரென குளிர்ந்த நிலவு போன்று மக்களுக்கு தோன்றிய சூரியன் சுழன்று கொண்டே, சிறிது நேரம் அங்கும் இங்கும் தள்ளாடியது. பின்னர் பூமியை விழுங்குவது போன்று பெரிதாகிக் கொண்டே சென்ற சூரியனைப் பார்த்து மக்கள் பயந்து நடுங்கினர்.

சிறிது நேரத்தில் அனைத்தும் இயல்பு நிலைக்கு திரும்பின. விஞ்ஞானிகளால் விளக்க முடியாத இந்த நிகழ்வை அங்கிருந்த அனைவரும் பார்த்தனர். இச்செய்தி போர்ச்சுக்கல் நாட்டு பத்திரிகைகள் அனைத்திலும் புகைப்படங்களுடன் வெளிவந்தது.

ஜெய்ட்டூன் அன்னை........

1968ஆம் ஆண்டு ஏப்ரல் 2ந்தேதி, எகிப்து நாட்டிலுள்ள கெய்ரோ நகரின் ஜெய்ட்டூன் என்ற இடத்தில் மரியன்னை காட்சி அளித்தார். அப்பகுதியில் அமைந்துள்ள புனித டெமியானா ஆலயத்தின் மேல் பகுதியில் அன்னை ஒளி வடிவில் தோன்றினார்.

கரங்களை விரித்தபடி காட்சி அளித்த அன்னையின் தலைக்கு மேல் தூய ஆவியை குறிக்கும் புறாவின் தோற்றமும் காணப்பட்டது. அன்னையின் காட்சியை முதலில் பார்த்தவர் பரூக் முகம்மது என்ற இஸ்லாமியர். வியப்பில் அவர் குரல் எழுப்பியதைக் கேட்டு, அங்கு திரண்ட நூற்றுக்கணக்கான மக்கள் அந்த காட்சியைக் கண்டனர்.

அந்த அதிசயத்தை பலர் புகைப்படமும் எடுத்தனர். அவற்றில் ஒரு புகைப்படத்தைதான் நீங்கள் இங்கு பார்க்கிறீர்கள். அதன் பிறகும் அதே ஆலயத்தில் அன்னை மரியா பலமுறை காட்சி அளித்துள்ளார்
avatar
birundha

Posts : 2495
Join date : 17/01/2013

View user profile

Back to top Go down

View previous topic View next topic Back to top


 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum