Related Posts Plugin for WordPress, Blogger...
Keywords


கிட்னியில் அமிலம் சேர்வதைத் தடுக்கும் பழங்கள், காய்கறிகள்!

Go down

கிட்னியில் அமிலம் சேர்வதைத் தடுக்கும் பழங்கள், காய்கறிகள்!

Post  ishwarya on Fri May 03, 2013 12:04 pm


நீண்ட நாளைய சிறுநீரக நோய்வாய்ப்பட்டவர்கள் தங்கள் உணவுமுறையில் நிறைய காய்கறிகளையும் பழங்களையும் சேர்த்துக் கொண்டால் அதில் அமிலம் சேர்வதை தடுக்க முடியும் என்று அமெரிக்க ஆய்வு ஒன்று தெரிவித்துள்ளது.

மேற்கத்திய நாடுகளிலும், இந்தியாவிலுமே கூட மாமிச உணவு வகைகளுக்கு கிராக்கி அதிகரித்து வருகிறது. இத்தகைய உணவுகள் அமிலம் சேர்வதை ஊக்கப்படுத்துகிறது.

சிறுநீர் மூலம் அமிலத்தை வெளியேற்றும் பணியைச் செய்வது கிட்னி. அங்கு இந்தப் பணி நடைபெறாமல் போகும்போது அமிலச் சேர்க்கையினால் மரணம் கூட ஏற்பட வாய்ப்புள்ளதாக இந்த ஆய்வு ஒரு முக்கியமான தகவலை வெளியிட்டுள்ளது.

கடுமையான மெடபாலிக் அசிடோசிஸ் உள்ள கிட்னி நோயாளிகள் தங்கள் உணவில் நிறைய பழங்களையும், காய்கறிகளையும் சேர்த்துக் கொண்டால் இந்த ஆபத்தான அமில சேர்ப்பு நடவடிக்கையிலிருந்து தப்பிக்கலாம்.

டெக்ஸாசில் மருத்துவர்கள் கடுமையான சிறுநீர்க பாதிப்பு நோயாளிகளை வைத்து இந்தப் பழச்சோதனையை நடத்தியுள்ளனர். சுமார் 71 நோயாளிகளுக்கு ஒரு ஆண்டுக்கு பழங்களும் காய்கறிகளும் கொடுக்கப்பட்டு வந்துள்ளது. ஒரு ஆண்டுக்குப் பிறகு அமிலத்தின் அளவு பாதியாக குறைந்ததாக ஆய்வில் தெரியவந்தது.

பழங்கள் காய்கறிகளும் பொட்டாசியம் சத்து மிக்கது என்றாலும், ரத்தத்தில் அபாயகரமாக பொட்டாசியம் அளவை இது அதிகரிக்ககூடும் என்று எதிர்பார்க்கப்பட்டாலும். ஆய்வு செய்த நோயாளிகளில் பொட்டாசியம் அளவு அதிகமாகவில்லை என்பதும் தெரியவந்துள்ளது.

இது பற்றிய விரிவான ஆய்வுக்கட்டுரை அமெரிக்கன் சொசைட்டி ஆஃப் நெஃப்ராலஜியில் வெளிவரவிருக்கிறது.

ishwarya

Posts : 24602
Join date : 01/02/2013

View user profile

Back to top Go down

Back to top


 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum