Related Posts Plugin for WordPress, Blogger...
Keywords


ஹேங் ஓவர் உருவாக்கி 'குடி'யைக் கெடுக்கும் புதிய வாக்சைன்!

View previous topic View next topic Go down

ஹேங் ஓவர் உருவாக்கி 'குடி'யைக் கெடுக்கும் புதிய வாக்சைன்!

Post  ishwarya on Fri May 03, 2013 12:07 pm

குடிகாரர்களின் மிகப்பெரிய பிரச்சனை மறுநாள் காலையில் ஏற்படும் இனம்புரியாத தலைவலி, குமட்டல் மற்றும் சிந்தனை நின்று பிளாங்காக இருப்பது. இதற்கு மருந்து உண்டா என்று பல குடிமகன்களும் ஏங்கி வருகின்றனர். ஆனால் இந்த நிலையில் குடிகாரர்களை மது அடிமைத்தனத்திலிருந்து விடுவிக்க ஹேங் ஓவரை ஏற்படுத்தும் புதிய வாக்சைன் ஒன்று ஆராய்ச்சியில் உள்ளது.

முதல் கட்டமாக இந்தியாவில் இந்த வாக்சைனின் திறன் ஆய்வு செய்யப்பட்டுவருகிறது. ஆய்வுகள் முடிந்து குடிமகன்களுக்கு கொடுத்துப் பார்த்து மது அருந்தியவுடன் கடுமையான ஹேங் ஓவரை கிளப்புகிறதா என்று பரிசோதித்து வருகிறார்கள். சோதனை வெற்றியடைந்தால் 2 ஆண்டுகளில் இது இந்தியாவில் விற்பனைக்கு வருமாம்!

சிலியில் இந்த ஆய்வை மேற்கொண்டு வரும் மருத்துவர் யுவான் அசெஞ்ஜோ இதனை கூறியுள்ளார்.

இந்த வாக்சனை ஊசிமூலம் ஒரு முறை ஏற்றினால் 6 மாதம் முதல் ஒரு ஆண்டு வரை குடிக்க முடியாது. அதாவது லிவரில் ஆல்கஹாலை மெடபாலைஸ் செய்வதற்கான செய்தியை இந்த ஊசிமருந்து தடுத்து நிறுத்துமாம்.

இந்த ஊசிமருந்தை எடுத்துக் கொண்டு மது அருந்தினால் உடனே கடும் தலைவலி, வாந்தி, குமட்டல், இருதய துடிப்பு அதிகரிப்பு ஆகியவை ஏற்படுமாம்!

மேலும் ஒருமுறை இந்த ஊசிமருந்தை ஏற்றிவிட்டால் போதும் அதன் விளைவை நிவர்த்தி செய்ய முடியாதாம்!

ஆனாலும் இது அனைத்து குடிமகன்களையும் மாற்றிவிடும் என்பது தெரியவில்லை என்கிறார் அசெஞ்ஜோ.

கடுமையான ஹேங் ஓவரையே இரண்டு பெக்குகள் போட்டு அடக்கி உற்சாகமடையும் இந்திய நாட்டில் இந்த வாக்சின் என்ன செய்து விடப்போகிறது? இருப்பினும் பொறுத்திருந்து பார்ப்போம் என்கிறார் ஆராய்ச்சியாளர்.

ishwarya

Posts : 24602
Join date : 01/02/2013

View user profile

Back to top Go down

View previous topic View next topic Back to top


 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum