Related Posts Plugin for WordPress, Blogger...
Keywords


சர்க்கரை நோயாளிகளில் இந்தியா நம்பர் 1

Go down

சர்க்கரை நோயாளிகளில் இந்தியா நம்பர் 1

Post  ishwarya on Fri May 03, 2013 12:16 pm


இன்று சர்க்கரை நோய் தினம் என்பதையொட்டி உலக சுகாதார மையத்தின் தகவல்களின் படி சர்க்கரை நோயால் அதிகம் பாதிக்கப்பட்டவர்கள் பட்டியலில் இந்தியா முதலிடத்தில் உள்ளது.

2009ஆம் ஆண்டு தரவுகளின் படி சுமார் 5 கோடி பேர் இந்தியாவில் நீரிழிவு நோய்க்கு ஆளாகியுள்ளனர். இதனால் முதலிடத்தில் உள்ளது.

சீனா 4 கோடி சர்க்கரை நோயாளிகளுடன் இரண்டாம் இடத்திலும் 2 கோடியே 60 லட்சம் சர்க்கரை நோயாளிகளுடன் அமெரிக்கா 3ஆம் இடத்திலும் உள்ளது.

மத்திய கிழக்கு மற்றும் வட ஆப்பிரிக்க நாடுகளில் 2030ஆம் ஆண்டுக்குள் சர்க்கரை நோயாளிகளின் எண்ணிக்கை இரட்டிப்பாகும் என்று உலக சர்க்கரை நோய் அறக்கட்டளை அமைப்பு தெரிவித்தது.

சர்க்கரை நோய்க்கு இன்று பெரிய ஆபத் பாந்தவனாக திகழும் இன்சுலினைக் கண்டுபிடித்தவர்கள் பிரெடெரிக் பேன்டிங் மற்றும் சார்ல்ஸ் பெஸ்ட் ஆகியோராவர். இவர்களில் பேன்டிங்கின் பிறந்த தினமான இன்று (நவ.14) உலக சர்க்கரை நோய் தினமாக அனுசரிக்கப்படுகிறது. இன்சுலின் 1922ஆம் ஆண்டு கண்டுபிடிக்கப்பட்டது.
சர்க்கரை நோய் தினம், இந்தியா, நீரிழிவு

ishwarya

Posts : 24602
Join date : 01/02/2013

View user profile

Back to top Go down

Back to top


 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum