Related Posts Plugin for WordPress, Blogger...
Keywords


இந்தியாவில் நிமோனியா நோய்க்கு 3 லட்சம் குழந்தைகள் பலியாகின்றனர்

View previous topic View next topic Go down

இந்தியாவில் நிமோனியா நோய்க்கு 3 லட்சம் குழந்தைகள் பலியாகின்றனர்

Post  ishwarya on Fri May 03, 2013 12:26 pm

மருத்துவத்தில் பன்னாட்டு நிறுவனங்களும், அதி உயர்தர மருத்துவமனைகளும் உள்ள இந்தியாவில் ஆண்டொன்றுக்கு 3 லட்சம் குழந்தைகள் புளூ தொடர்பான நிமோனியா நோய்க்குப் பலியாகின்றனர்.

வெளியாகியுள்ள புதிய ஆய்வுகளின் படி 14 லட்சம் சாவுகள் உலகம் முழுதும் நிமோனியாவால் நிகழ்கிறது. இதில் 3,70,00 குழந்தைகள் ஆண்டொன்றிற்கு இந்தியாவில் மட்டும் மரணமடைகின்றனர். இது எய்ட்ஸ், மலேரியா, டி.பி. மரணங்களை விட அதிகம் என்பது குறிப்பிடத்தக்கது.

இந்தியாவின் எய்ம்ஸ் மருத்துவமனை உதவியுடன் எடின்பர்க் பல்கலைக் கழகம் நடத்திய இந்த ஆய்வை பிரபல லான்செட் மருத்துவ இதழ் வெளியிட்டுள்ளது.

5 வயதுக்கும் குறைவான குழந்தைகளுக்கு பருவகால புளூ காய்ச்சல் உலகம் முழுதும் சுமார் 9 கோடி குழந்தைகளை பாதிக்கிறது. இதில் 2 கோடி நிமோனியா தொடர்பானது இதில் 10 லட்சம் மருத்துவமனையில் அனுமதிக்கப்படும் அளவுக்கு மோசமடைவதாக இந்த ஆய்வுகள் தெரிவிக்கின்றன.

குறிப்பாக இந்தியாவில் ஹரியானா மாநிலத்தில் நிமோனியா சாவுகள் அதிகமிருப்பதாகவும் இந்த ஆய்வுகள் தெரிவிக்கின்றன.

உலகச் சுகாதார மையத்தின் கருத்தின் படி நிமோனியாக் காய்ச்சலை ஆண்ட்டி-பயாடிக்குகள் கொண்டு சிகிச்சை அளிக்கலாம் ஆனால் தேவையான ஆண்ட்டி-பயாடிக்குகள் 30% குழந்தைகளுக்கே கிடைத்து வருகிறது.

ishwarya

Posts : 24602
Join date : 01/02/2013

View user profile

Back to top Go down

View previous topic View next topic Back to top


 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum