Related Posts Plugin for WordPress, Blogger...

29-ந்தேதி உலக பக்கவாத நாள்

View previous topic View next topic Go down

29-ந்தேதி உலக பக்கவாத நாள்

Post  ishwarya on Fri May 03, 2013 12:37 pm

மூளை‌க்கு‌ச் செ‌ல்லு‌ம் நர‌ம்‌பி‌‌ல் ஏ‌ற்படு‌ம் பா‌தி‌ப்புதா‌ன் பக்கவாதமாகு‌ம். ப‌க்கவாத‌த்தா‌ல் பா‌தி‌க்க‌ப்ப‌ட்டவ‌ர்களு‌க்கு ‌சி‌கி‌ச்சை அ‌ளி‌ப்பத‌ற்கு‌ம், ப‌க்கவாத‌ம் வராம‌ல் தடு‌‌ப்பத‌ற்கு‌ம் ‌வி‌ழி‌ப்புண‌ர்வை ஏ‌ற்படு‌த்து‌ம் ‌விதமாக வரு‌ம் 29ஆ‌ம் தே‌‌தி உலக ப‌க்கவாத ‌தினமாக கடை‌பிடி‌க்க‌ப்படு‌கிறது.

நர‌ம்‌பிய‌ல் தொட‌ர்பான மரு‌த்துவமனைக‌ளி‌ல் ப‌க்கவாத‌ம் கு‌றி‌த்த ‌வி‌ழி‌ப்புண‌ர்வு ‌பிர‌ச்சார‌ங்களு‌ம், க‌ரு‌த்தர‌ங்குகளு‌ம் நடைபெறு‌ம்.

அத‌னடி‌ப்படை‌யி‌ல் செ‌ன்னை‌யி‌ல் உ‌ள்ள த‌னியா‌ர் மரு‌த்துவ‌க்க‌ல்லூ‌ரி மரு‌த்துவமனை‌யி‌ல், 29ஆ‌ம் தே‌தி ப‌க்கவாத‌ம் தொட‌ர்பாக தொட‌ர் மரு‌த்துவ கரு‌த்தர‌ங்கு நடைபெற உ‌ள்ளது. பக்கவாதம் வருவதற்கு வாய்ப்பு உள்ளதா? என்பதை அறிய இலவச பரிசோதனை முகாம் 30-ந் தேதி நடைபெற உள்ளது. 31-ந் தேதி இதே பரிசோதனை முகாம் அருகில் உள்ள கிராமங்களிலு‌ம் நடத்தப்பட உள்ளது.

இது கு‌றி‌த்து நரம்பியல் நிபுணரும், பேராசிரியருமான மரு‌த்துவ‌ர் எம்.ஆர்.சிவகுமார் செ‌ய்‌தியாள‌ர்க‌ளிட‌ம் பேசுகை‌யி‌ல், மூளைக்கு செல்லும் ரத்தக்குழாயில் அடைப்பு ஏற்பட்டு அது, மூளைக்கு சென்று பாதிப்பை ஏற்படுத்தினால் அது பக்கவாதம் என்றும், ஆங்கிலத்தில் ஸ்ட்ரோக் என்றும் அழைக்கப்படுகிறது.

இதனால் கை அல்லது கால் செயல் அற்றுப்போகும். சரியாக பேச்சு வராது. மூளையின் ஒரு பகுதி செயல்படாததால் ஞாபகசக்தி இருக்காது. பக்கவாதம் வந்ததற்கு அறிகுறிகளாக வாய் கோணல் ஏற்படும். வார்த்தைகள் குளறும். இவற்றில் ஏதாவது அறிகுறி தெரிந்தால் உடனே அருகில் உள்ள மரு‌த்துவ‌ரிட‌ம் செல்ல வேண்டும்.

உடனே சி.டி.ஸ்கேன் எடுத்துப்பார்த்து மூளை பாதிக்கப்பட்டு இருந்தால் உடனடியாக ஆர்.டி.பி.ஏ. என்ற ரிகாம்பினன்ட் டி‌ஸ்யூ பிளாஸ்மினோஜன் ஆக்டிவேட்டர் என்ற ஊசி மருந்தை செலுத்த வேண்டும். அது செலுத்தினால் பாதிக்கப்பட்ட மூளையின் பகுதி மீண்டும் செயல்படும். இந்த ஊசி மருந்தின் விலை ரூ.44 ஆயிரம். இந்த ஊசி மருந்தை பக்கவாதம் ஏற்பட்ட 4 மணி நேரத்திற்குள் போட்டுக்கொண்டால் மூளையில் உறைந்த ரத்தம் முழுவதும் அகற்றப்பட்டு பக்கவாதம் 100 ‌விழு‌க்காடு குணமடைந்துவிடும்.

40 வயதுக்கு மேற்பட்டவர்கள் கொலஸ்ட்ரால் அளவை பரிசோதனை செய்து கொள்ள வேண்டும். ரத்தத்தில் உள்ள சர்க்கரை அளவை சரியாக சீராக வைத்துக் கொள்ளுதல் நல்லது. உயர் ரத்த அழுத்தம் வராமல் பார்த்துக் கொள்ள வேண்டும்.

சீரான உடற்பயிற்சி அவசியம் தேவை. அளவுக்கு அதிகமாக சாப்பிடக்கூடாது. எல்லாவற்றுக்கும் மேலாக அதிகமாக மது அருந்தக்கூடாது. பீடி, சிகரெட் பிடிக்கக்கூடாது. மேற்கண்டபடி நடந்தால் பக்கவாதம் வராமல் தடுக்க முடியும் எ‌ன்று ‌சிவ‌க்குமா‌ர் பொதும‌‌க்களு‌க்கு ஆலோசனை கூ‌றினா‌ர்.

ishwarya

Posts : 24602
Join date : 01/02/2013

View user profile

Back to top Go down

View previous topic View next topic Back to top


 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum