Related Posts Plugin for WordPress, Blogger...

சென்னையில் இரைப்பை குடலியல், ஈரலியல் கருத்தரங்கம்

View previous topic View next topic Go down

சென்னையில் இரைப்பை குடலியல், ஈரலியல் கருத்தரங்கம்

Post  ishwarya on Fri May 03, 2013 12:39 pm


இந்தியன் சொசைட்டி ஆஃப் கேஸ்ட்ரோ எண்டராலஜி, தமிழ்நாட்டுப் பிரிவு மற்றும் மியாட் மருத்துவமனை இணைந்து நடத்தும் மேஜிகான் 2010 எனும் இரைப்பைக் குடலியல் மற்றும் ஈரலியல் கருத்தரங்கு சென்னையில் நடைபெறவுள்ளது.

இந்தக் கருத்தரங்கில் இப்பிரிவில் ஏற்பட்டுள்ள சமீபத்திய தொழில்நுட்ப மேம்பாடுகள், நவீன மருத்துவ மற்றும் அறுவை சிகிச்சை முறைகள் ஆகியவை பற்றி விளக்குவதாய் அமையும் என்று மயோட் மருத்துவமனை வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில் கூறப்பட்டுள்ளது.

இங்கிலாந்தில் உள்ள பர்மிங்ஹாம் பகுதியின் குவீன் எலிசபெத் மருத்துவமனையின் கல்லீரல் மாற்று பிரிவின் தலைவரும் பேராசிரியருமான எல்வின் எலியாஸ், ஆஸ்ட்ரேலியாவிம் அடிலெய்டில் உள்ள குவீன் எலிசபத் மருத்துவமனையின், இரைப்பை துறையின் தலைவர் மற்றும் பேராசிரியர் திரு. இயன் ராபர்ட்ஸ் தாம்சன் மற்றும் நிபுணர்கள் அடங்கிய குழுவினர் இக்கருத்தரங்கில் பயிற்றுவிக்க உள்ளனர்.

முதுநிலை பட்டப்படிப்பு மாணவர்களுக்கும் பயிற்றுனர்களுக்கும் இக்கருத்தரங்கில் நிகழவுள்ள சொற்பொழிவுகள் பயனளிக்கும் என்று மியாட் மருத்துவமனையின் செய்தி அறிக்கை கூறுகிறத

ishwarya

Posts : 24602
Join date : 01/02/2013

View user profile

Back to top Go down

View previous topic View next topic Back to top


 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum