Related Posts Plugin for WordPress, Blogger...
Keywords


ரூ.1,230 கோடியில் புற்றுநோய், நீரிழிவு, இதய நோய்கள் தடுப்பு திட்ட‌ம் : அமைச்சரவை ஒப்புதல்

Go down

ரூ.1,230 கோடியில் புற்றுநோய், நீரிழிவு, இதய நோய்கள் தடுப்பு திட்ட‌ம் : அமைச்சரவை ஒப்புதல்

Post  ishwarya on Fri May 03, 2013 12:49 pm


11வது ஐந்தாண்டுத் திட்டத்தின் எஞ்சிய காலத்தில் ரூ.1,230.90 கோடி மதிப்பில் தேசிய புற்றுநோய், நீரிழிவு, இதய நோய்கள் மற்றும் பக்கவாதம் ஆகிய நோய்களின் பல்வேறு வகைகளை தடுத்தல் மற்றும் கட்டுப்படுத்தும் திட்டத்திற்கு பொருளாதார விவகாரங்களுக்கான மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது.

இத்திட்டத்தி‌ன்படி மத்திய மற்றும் மாநில அரசுகள் 80:20 என்ற விகிதத்தில் செலவுகளை பகிர்ந்து கொள்ளும்.

ஒரே நோயின் ஒரு வகையில் இருந்து மற்றொரு வகைக்கு அதிகபட்சமாக 10 சதவீதத்திற்கு உட்பட்டு திட்ட நிதியை மாற்றிப் பயன்படுத்துவதற்கும் அமைச்சரவை ஒப்புதல் வழங்கியது. இந்த உச்சவரம்பை தாண்டி நிதி மாற்றப்படுவது குறித்து அதிகாரம் பெற்ற திட்டக் குழு மற்றும் திட்ட ஆய்வுக் குழு முடிவு செய்யும்.

இந்தத் திட்டமானது நாடு தழுவிய அளவில் 15 மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களின் 100 மாவட்டங்களில் உள்ள சமூக சுகாதார மையங்கள் மற்றும் 20,000 துணை மையங்களில் நடைமுறைப் படுத்தப்படும். பெருமளவிலான சுகாதாரக் கல்வி மற்றும் பொது மக்களுக்கு பரிசோதனைகள், தொற்றுநோய்களுக்கு அல்லாத கிளினிக்குகள் அமைத்தல், போன்ற நடவடிக்கைகள் மூலம் இத்திட்டம் நடைமுறைப் படுத்தப்படவுள்ளது.

நீரிழிவு, ரத்தக்கொதிப்பு ஆகிய நோய்களுக்கு 30 வயதுக்கு மேற்பட்ட 7 கோடி பேருக்கு பரிசோதனைகள் நடத்தப்படும். இந்த நோய்களை துவக்கத்திலேயே கண்டறிவதற்கு பல்வேறு நிலைகளில் 32,000 சுகாதாரப் பணியாளர்களுக்கு பயிற்சி அளிக்கப்படும். இத்திட்டத்தை வெற்றிகரமாக நடைமுறைப் படுத்துவதன் மூலம் உணவு முறைகள், வாழ்க்கை முறைகள் போன்றவற்றில் நல்ல மாற்றங்களை ஏற்படுத்தி புகையிலைப் பொருட்களை உட்கொள்ளுதல், மது அருந்துதல் போன்றவற்றை குறைப்பது இதன் நோக்கமாகும்.

ishwarya

Posts : 24602
Join date : 01/02/2013

View user profile

Back to top Go down

Back to top


 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum