Related Posts Plugin for WordPress, Blogger...
Keywords


ஸ்ரீவில்லிப்புத்தூர் சக்கரத்தாழ்வார் கோவில்

View previous topic View next topic Go down

ஸ்ரீவில்லிப்புத்தூர் சக்கரத்தாழ்வார் கோவில்

Post  ishwarya on Sat May 04, 2013 1:04 pm

ஸ்தல வரலாறு......

ஸ்ரீவில்லிப்புத்தூர் கீழக்கோவில் என்னும் பெருமை பெற்ற வட பத்திரசாயி கோவில் வளாகத்தில் ஆண்டாள் அவதார நந்தவனத்திற்கு வடபுறம் சக்கரத்தாழ்வார் கோவில் உள்ளது. இவரின் மகிமை அறிந்து தொலை தூரத்திலிருந்தெல்லாம் இங்கு வந்து தரிசிக்கின்றனர். கோவிலில் ஏதோ ஓர் மாய சக்தி அனைவரையும் ஈர்க்கின்றது என்பதில் சந்தேகம் இல்லை.

மகா விஷ்ணுவின் அறுகோண சக்கரத்தையே வடிவமாக்கி, சக்கரத்தாழ்வார் முன் எட்டுத் திருக்கரத்துடனும், பின்னால் யோக நரசிம்மராக எட்டுத், திருக்கரத்துடனும் பதினாறு கை, பதினாறு ஆயுதங்களுடன் அருள்பாலிக்கிறார். கோவில் கர்ப்ப கிரகம் வெளிச்சுற்றுப்பிரகாரம், அர்த்த மண்டபத்துடன் அழகிய சுதை வேலைப்பாடுடன் விதானமும் உள்ளது.

சக்கரத்வாழ்வாருக்கு புதன், சனிக்கிழமைகள் மிக உகந்த நாட்கள், அவரை 48 நாள் வணங்கினால் பில்லி, சூனியம், ஏவல், நாள்பட்ட கொடிய வியாதிகள் தீரும். கல்வி கற்பதில் மேன்மை, திருமணம், புத்திரபாக்கியம், வழக்கில் வெற்றி பெறுவார்கள். மக்கள் விரோதம் நீங்க. சுதர்சன வழிபாடு நல்லது. ஆனால் குரு முறையுடன் வழிபடுவது நல்லது எனக் கூறப்படுகிறது.

சக்கரத்தாழ்வார் மூலவர் சிலை இங்கு கிடையாது. உயர்ந்த பஞ்சலோக தாமிரத்தில் திருமேனியைச் சிற்பமாக வார்த்துள்ளதைப் பிரதிஷ்டை செய்துள்ளனர். சக்கரத்தாழ்வார் பெருமை, திருமால் அறுகோணத்திற்கு நடுவே சக்கர வடிவமாக எழுந்தருளிய தத்துவம் சுதர்சன சதகம் நூலில் விரிவாக விளக்கப்பட்டுள்ளது.

ஒரு சமயம் பிரம்மதேவனின் சிரசுகளில் (தலை) ஒன்றை பரமசிவன் கொய்ததினால் ஏற்பட்ட பாதகத்தைப் போக்க, பரமசிவன் திருமாலை வேண்டி வணங்குகிறார். திருமால், பத்திரிகா ஆசிரமத்தில் சுதர்சன வழிபாட்டை விளக்கிக் கூறுகிறார். அதன்படி சக்கரத்தாழ்வாரை வழிபடும்படி அருளினார்.

பரமசிவன் கைலாயத்தில் வழிபட பிரம்மதேவன் சிரசினைக் கொய்த பாதங்கள் நிவர்த்திக்கப்பட்டன. இதை அறிந்த தேவர்கள், ரிஷிகள் பரமசிவனிடமிருந்து முறைப்படி சுதர்சன வழிபாட்டை அறிந்து சக்கரத்தாழ்வாரை வழிபட்டனர். இவ்வூரில் ஆலயங்கள் பலவற்றுள் மன்னர் திருமலை நாயக்கர் தமது இரு மனைவியருடன் கைகூப்பிய நிலையில் நிற்பதை சிலைகளில் காணலாம்.

சக்கரத்தாழ்வார் சன்னிதி முன் அர்த்த மண்டபதூண்களில் கேரள நாட்டு மன்னர் இருவர் நின்ற நிலையில் சிலைகளில் உள்ளனர். ஆகவே கோவில் திருமலை நாயக்கர் காலத்திற்கும் முன்னர் மிகப் பழமையான திருக்கோவிலாக நிர்மாணிக்கப்பட்டிருக்கலாம். மேலும் ஆதியில் சக்கரத்தாழ்வார், வடபத்திரசாயி கோவிலின் கீழ் தளத்திலிருந்து மேல் தளம் போய், மீண்டும் இப்பொழுதுள்ளபடி கீழ்தளத்திற்கு வந்தது எனக் கூறுவார்கள்.

சில அரசர்கள் யுத்தத்தின் போது அருள்தரும் தெய்வ சிக்ரகங்களை, சிலைகளை கொள்ளையிலிருந்து பாதுகாப்புக்காக வேற்று நாட்டுக்கு எடுத்துச் செல்வார்களாம். இவ்வாறு சண்டையின் போது ஆண்டாள் விக்கிரகம், கேரள மன்னர்களிடம் அங்கேயே இருந்தது. பின்னர் கலகம் முடிந்த பின்னர் ஆண்டாள் வேண்டுகோளுக்கிணங்க இங்கே கொண்டு வந்தார்களாம்.

கேரளத்தில் கோவில் கொண்டிருந்த சக்கரத்தாழ்வார் அங்கே உக்கிரமாக இருந்துள்ளார். ஆண்டாள் அங்கு சென்ற போது உக்கிர நிலை தணிந்து சாத்வீக நிலையில் இருந்துள்ளார். ஆண்டாள் திரும்பி இங்கே வந்த பின்னர் மீண்டும் உக்கிரமாகவே மாறிவிட்டார். எனவே ஆண்டாள் இருக்கும் இடத்திலேயே இவரைக் கொண்டு வந்து கேரளத்தினரே பிரதிஷ்டை செய்துள்ளனர் என்று சொல்கிறார்கள்.

இதற்கு ஓர் ஆதாரம் கூறப்படுகிறது. மூலஸ்தான சிற்பத்தின் சக்கரத்தில் மலையாள மொழி எழுத்துக்கள் உள்ளன. சமஸ்கிருத மொழில் எழுத்துக்கள் உள்ளன. தமிழலில் எழுத்துக்கள் இல்லை என்று கூறுகிறார்கள். கேரளத்தினர் ஆண்டாளின் மீது பக்தி கொண்டவர்கள், கேரளத்தில் ஓர் நதி நீர் ஆற்றுக்கு கோதையாறு என்று பெயர் வைத்துள்ளனர்.

கோவில் அர்த்த மண்டபத்தூண்களில் கேரள மன்னர் இருவர் சிலை அழகிய நுண்ணிய வேலைப்பாடுடன் செதுக்கப்பட்டிருந்ததை அந்நாளில் (யுத்த காலத்தில்) தலை சேதமாக்கப்பட்டுள்ளன. ஈசான்ய மூலையை நோக்கியவாறு காவல் தெய்வமாக அருள்தரும் வேம்படிக் கருப்பசாமி உருவமில்லா சிலை வடிவில் உள்ளார்.

அவரை வணங்கிய பின்னரே மூலவரை வணங்க வேண்டும். சக்கரத்தாழ்வார் பின்புறம் சுவற்றில் 24 துவாரம் ஏற்படுத்திய ஜன்னல் வழியாக யோக நரசிம்மரைத் தரிசிக்கலாம் இதன் முன்னர் அற்புதமான மண்டபம் நிர்மாணிக்கப்பட்டுள்ளது.

ishwarya

Posts : 24602
Join date : 01/02/2013

View user profile

Back to top Go down

View previous topic View next topic Back to top


 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum