Related Posts Plugin for WordPress, Blogger...
Keywords


மாற்றுத் திறனாளிகளுக்காக சேவையாற்றும் சோபனா!

View previous topic View next topic Go down

மாற்றுத் திறனாளிகளுக்காக சேவையாற்றும் சோபனா!

Post  ishwarya on Tue May 07, 2013 12:33 pm

வாய் பேச முடியாதவர்கள், காது கேட்காத வர்கள், மற்றவர்களின் பார்வைக்கு வேண்டுமானால் பரிதாபத்திற்குரிய தோற்றத்தில் காட்சி தரலாம். ஆனால், அவர்களிடமும் நிறைய திறமைகள் இருக்கு, எதிர்பார்ப்புகளும் இருக்கு. அவர்களுக்கு நம்மால் முடிந்த உதவிகளைச் செய்ய வேண்டும். அவர்களுக்கு செய்யும் உதவியில் நமக்கு திருப்தி கிடைக்கிறது. அவர்களுக்கு உதவினால்தான் அதை அனுபவிக்க முடியும்…என்று, உள்ளத்தில் இருந்து வார்த்தை களைக் கோர்த்து பேசும் 25 வயது ஷபானா ஒரு வழக்குரைஞர்.

சென்னை உயர்நீதிமன்றத்தில் பணியாற்றி வரும் இவரை காது கேட்காத, வாய் பேச முடியாதவர்கள், வழக்கு விஷயங்களுக்காக தேடி வந்துவிட்டால் போதும்; பார்த்து பார்த்து கவனிப்பார்கள்’ என் பார்களே… அப்படியொரு கவனிப்போடு விசாரித்து, அவர்களுக்காக நீதிமன்றத்தில் கட்டணம் பெறாமல் வாதாடி நீதியைப் பெற்றுக் கொடுக்கிறார்.

சமூகசேவையில் ஆர்வம் வந்தது குறித்து உணர்வுப்பூர்வமாக பேசத் தொடங்கினார்.

2009ஆம் ஆண்டில் ஒருநாள், தனது தந்தையை மீட்டுத் தருமாறு ஹேபியஸ் கார்பஸ் (ஆட்கொணர்வு) மனு செய்திருந்தார் ஒருவர். வாய் பேச முடியாத, காது கேட்காத தனது தந்தையை சொத்துக்காக அவரது உறவினர்கள் சிலர் அவர்களது வீட்டில் அடைத்து வைத்திருப்பதாகவும், தனது தந்தை பெயரில் இருந்த சொத்துக்களை வெள்ளைத்தாளில் கையெழுத்து வாங்கி எழுதிக்கொண்டதாகவும் அந்த நபர் தனது ஹேபியஸ் கார்பஸ் மனுவில் கூறியிருந்தார். நீதிமன்ற உத்தரவின் பேரில், வீட்டில் சிறை வைக்கப்பட்டிருப்ப தாக கூறப்பட்ட காது கேட்காத, வாய் பேச முடியாத பெரியவர் நீதிமன்றத்துக்கு அழைத்து வரப்பட்டார். வழக்கை விசாரித்த நீதிபதி, அவரிடம் மகனுடன் செல்கிறீர்களா? அல்லது, சொந்தக்காரர்களுடன் செல்கிறீர்களா? என்று கேட்டார். ஆனால் அவரால் சரியாக பதில் சொல்ல முடியவில்லை. நீதிபதி அவருக்கு அருகில் இறங்கி வந்து கேட்டபோதும் அவரால் சரியான பதில் சொல்ல முடியாமல் திணறினார்.

அப்போதுதான் அவருக்காக பேசும் வாய்ப்பு என்னைத் தேடி வந்தது. வாய் பேச முடியாத, காது கேட்காதவர்களிடம் எப்படி சைகை மூலம் பேசுவது என்பது எனக்குத் தெரியும் என்பதால், நீதிபதி கேட்ட கேள்விகளை அந்தப் பெரியவரிடம் நான் கேட்டேன். உங்கள் பெயர் என்ன என்று கேட்டபோது, அங்கே பக்கத்தில் இருந்த பூ ஜாடியின் பச்சை இலைகளை காண்பித்தார். தனது பெயர் பச்சையப்பன் என்று சொல்ல அப்படி சுட்டிக்காட்டி இருக்கிறார். தொடர்ந்து, யாருடன் வாழ ஆசைப்படுகிறீர்கள் என்று கேட்ட போது, மகனுடன் வாழ ஆசைப்படுவதாக சொன்னார். மேலும், தனி அறையில் தான் அடைத்து வைக்கப்பட்டு, உறவினர்களால் கொடு மைக்கு உள்ளாக்கப்பட்டதை யும், தன் பெயரில் இருந்த சொத்துக்களை அவர்கள் வெள்ளைப் பேப்பரில் எழுதி வாங்கிவிட்டதாகவும் சைகை மொழியில் கூறினார். அவர் கூறியதை நீதிபதியி டம் எடுத்துக்கூறி நல்ல தீர்ப்பு வாங்கிக் கொடுத் தேன். நான் இந்த வழக்கில் சிறப்பாக வாதாடியதற்காக தமிழ்நாடு மாநில சட்ட ஆணையம் சார்பில் எனக்கு விருது கிடைத்தது.

இந்த வழக்கிற்குப் பிறகு, தமிழகத்தில் உள்ள எந்த நீதிமன்றத்திலும் வாய் பேச முடியாத, காது கேட்காத வர்களுக்காக நான் ஆஜராகி வாதாடும் சிறப்பு அனுமதிக்காக எனது பெயரை நீதிபதி பரிந்துரை செய்தார். ஆனால் அதற்கான உத்தரவுதான் ஏனோ இன்னும் வரவில்லை… என்றார்.

உங்களது இந்த சமூக சேவையின் பின்னணி…

எனது தந்தையும், ஜோசப் மாமாவும் நெருங்கிய நண்பர்கள். ஜோசப் மாமாவுக்கு வாய் பேச முடியாது, காதும் கேட்காது. அவரது மனைவியும் அப்படித்தான். ஜோசப் மாமாவின் மடியில் வைத்துதான் எனக்கு பெயர் சூட்டினார்கள். மேலும், அவரது வீட்டில்தான் நான் வளர்ந்தேன். அதனால் அவரும், அவரது மனைவியும் எனக்கு இன்னொரு அப்பா-அம்மா மாதிரி. அவர்களது வீட்டிலேயே நான் வளர்ந்ததால் அவர்களின் சைகை மொழி எனக்கு நன்றாகத் தெரியும். மேலும், எனது தந்தையும் அவர்களுக்கு நிறைய உதவிகள் செய்வார். அதைப் பார்த்து வளர்ந்த நானும், எனது அப்பா வழியில் இப்போது என்னால் முடிந்த உதவிகளை மற்றவர்களுக்கு செய்து வருகிறேன்.

சமூக சேவை பலன் என்னவென்று நினைக் கிறீர்கள்?

மனநிறைவுதான்! வாய் பேசவும், காது கேட்கவும் முடியாதவர்கள் கண்டிப்பாக பொய் பேச மாட்டாங்க என்பது என்னுடைய நம்பிக்கை. அப்படிப்பட்டவர் களுக்கு மனமுவந்து உதவுவதில் மனநிறைவு பெறுவ தாக உணர்கிறேன். ஒரு பெண்ணாய் சமூகசேவை செய்வது கடினமாக இல்லையா?

இல்லை. பெண் என்றாலே சேவை மனப்பான்மை உள்ளவள்தானே? ஒரு பெண் பிறந்தது முதல் சாகும்வரை குடும்பத்தின ருக்கு சேவை செய்கிறாள். கணவன், குழந்தை, பேரன்-பேத்திகள் என்று அவளது சேவை மனப்பான்மை தொடர்ந்து கொண்டேதான் இருக்கிறது. ரத்த சொந்தம் உள்ளவர்களுக்கு சேவை செய்வது நம் கடமை. ரத்த சம்பந்தம் இல்லாதவர்களுக்கு சேவை செய்வது மனநிறைவு.
வாய் பேச முடியாத, காது கேட்காதவர்களுடன் நெருங்கிப் பழகியதில் என்ன கற்றுக்கொண்டீர் கள்?

நம்மால் வாய் பேச முடியும், காதால் கேட்க முடியும். அப்படியிருந்தும் நம்முடைய பேச்சில் சில நேரங்களில் தவறு ஏற்பட்டு விடலாம். ஆனால், வாய் பேச முடியாத, காது கேட்காதவர்கள் அப்படி கிடையாது. அவர் களுக்கு ஒரு விஷயத்தை உள்வாங்கும் திறன், கவனிக்கும் திறன் அதிகம். அதேநேரம் கோபப்படவும் செய்வார்கள். அவர்களிடம் எந்த எதிர்பார்ப்பும் இருக்காது. தங்களது வேலையை தாங்களே செய்து கொள்வார்கள். நிறைய விஷயங்களை தெரிந்து வைத்திருப்பார்கள். எந்த முடிவு எடுத்தாலும் நல்ல முடிவாக எடுப்பார்கள். இவர்களுக்காக நான் எப்பொழுதும் உதவி செய்ய காத்திருக்கிறேன். அவர்களது வழக்குகளுக்காக கண்டிப்பாக பணம் வாங்கமாட்டேன் என்று பெருந்தன்மையுடன் கூறும் ஷபானா, இந்த சின்ன வயதிலேயே ஒரு முன் மாதிரியாக திகழ்கிறார்.
ஷபானாவின் தந்தை முகமது பர்காத் தபால் துறையில் பி.ஆர்.ஓ.வாக பணியாற்றுகிறார். அம்மா சித்திக் பதுரியா குடும்பத் தலைவி மற்றும், இரு தம்பிகள் உள்ளனர்.

ishwarya

Posts : 24602
Join date : 01/02/2013

View user profile

Back to top Go down

View previous topic View next topic Back to top


 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum