Related Posts Plugin for WordPress, Blogger...

அல்சைமர் (Alzheimer) நோயை தடுக்கும் மஞ்சள்!

View previous topic View next topic Go down

அல்சைமர் (Alzheimer) நோயை தடுக்கும் மஞ்சள்!

Post  ishwarya on Tue May 07, 2013 12:40 pm

தெற்காசிய நாடுகளின் அன்றாட உணவில் சேர்த்துக் கொள்ளப்படும் மஞ்சளின் மருத்துவ குணங்கள் ஏற்கெனவே நன்கு அறியப் பட்டிருந்தாலும், சமீபத்திய ஆய்வின் முடிவுகள் புதிய தகவல்களை கண்டறிந்துள்ளன. இந்திய உணவு வகைகளில் மஞ்சள் தாராளமாக பயன்படுத்தப்படுகிறது என்பது குறிப்பிடத்தக்கது.

அதாவது குழம்பு மஞ்சளில் இருக்கும் குர்குமின் என்கிற உட் பொருள், அல்சைமர் மற்றும் டெமெண்டியா என்கிற மூளை அழுகல் மற்றும் நினைவாற்றல் குறையும் நோய்களை குணப்ப டுத்தும் தன்மை கொண்டது என்று அமெரிக்காவின் வட கரோலினாவில் இருக்கும் டியூக் பல்கலைக்கழக பேராசிரியர்கள் கண்டறிந்திருக்கிறார்கள்.

அதாவது மூளைக்குள் இருக்கும் நரம்பு மண்டலத்தில் உருவாகும் ஒருவகை புரோட்டீன் அமிலத்தன்மையின் பரவல் காரணமாக நினைவாற்றல் இழப்பதாக மருத்துவ ஆய்வாளர்கள் கூறுகிறார்கள். மஞ்சளில் இருக்கும் குர்குமின் என்கிற உட்பொருள் இந்த புரோட்டீன் அமிலத்தன்மையின் பரவலை தடுக்க வல்லது என்கிறார் இந்த ஆய்வை மேற்கொண்டவர்களில் ஒருவரான பேராசிரியர் முரளி துரைசாமி.

ஒரு வாரத்தில் குறைந்தது மூன்று முறை மஞ்சள் கலந்த குழம்பை தங்களது உணவில் சாப்பிடுபவர்களுக்கு மூளை அழுகல் மற்றும் நினைவாற்றல் குறையும் நோய்கள் தாக்கு வதற்கான வாய்ப்புகள் குறைவதாக அவர் கூறுகிறார். இது தொடர்பாக சுண்டெலிகளில் செய்யப்பட்ட ஆய்வின் முடிவுகள் ஊக்கமளிப்பதாக இருப்பதாகவும், மனிதர்கள் மத்தியில் அடுத்த கட்ட ஆய்வுகள் செய்யப்பட வேண்டும் என்றும் அவர் கூறினார்.

புற்றுநோய், மூட்டுவாதம் உள்ளிட்ட நோய்களை தடுப்பதில் மஞ்சளுக்கு இருக்கும் பங்களிப்பு குறித்து ஏற்கெனவே ஆய்வுகள் நடந்துவரும் நிலையில் மூளை அழுகல் நோயை தடுப்பதிலும் மஞ்சள் முக்கிய பங்காற்றலாம் என்கிற செய்தி மஞ்சளை தினமும் தங்களின் உணவில் சேர்த்துக்கொள்ளும் தெற்காசிய நாடுகளை சேர்ந்தவர்களுக்கு உற்சாகமளிக்கும் செய்தியாக இருக்கும்.

ishwarya

Posts : 24602
Join date : 01/02/2013

View user profile

Back to top Go down

View previous topic View next topic Back to top


 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum