Related Posts Plugin for WordPress, Blogger...
Keywords


கம்மல் போட்டால் தைராய்டு தாக்காது!

Go down

கம்மல் போட்டால் தைராய்டு தாக்காது!

Post  ishwarya on Tue May 07, 2013 1:17 pm

உலகில் மனித இனம் தவிர்த்து வேறெந்த உயிரினத்துக்கும் கிடைக்காத சொத்து, சிரிப்பு. அந்த சிரிப்பை சிறப்பாக்குவது பற்கள். அந்தப் பற்களைப் பதம் பார்க்கும் பிரச்னைகளும் அக்கு பிரஷர் தருகிறபோது பல்லிளித்து ஒதுங்கிவிடுகின்றன. பொதுவாக பற்கள் முக அழகைக் கூட்டும் என்பது எல்லோருக்கும் தெரியும். ஆனால், அதே பற்கள் உடல் உள்ளுறுப்புகளின் ஆரோக்கியத்தைக் காட்டும் இண்டிகேட்டர் என்பது தெரியுமா?

ஆம், மேல் வரிசையோ... கீழ் வரிசையோ... முன் நான்கு பற்கள் கிட்னி, சிறுநீர்ப்பை ஆகியவற்றின் ஆற்றலை வெளிப்படுத்துகின்றன. அதே போல, அதற்கடுத்துள்ள சிங்கப்பல் எனப்படும் ப்ரீமோலார் பற்கள் இரண்டும் கல்லீரல், பித்தப்பையின் சக்தியை உணர்த்துகின்றன. அதற்கடுத்த இரண்டு பற்களும் பெருங்குடல் மற்றும் நுரையீரலைப் பிரதிபலிக்கின்றன. கடைவாய்ப் பற்களுக்கு முந்தைய இரண்டு பற்களால் முறையே வயிறு, மண்ணீரல் ஆகியவற்றின் சக்தியும், கடைவாய்ப் பற்களால் இதயம், சிறுகுடலின் சக்தியும் எதிரொலிக்கப்படுகிறது. மேற்சொன்ன உள்ளுறுப்புகளில் ஏதேனும் பாதிப்பு ஏற்பட்டால், அது சம்பந்தமான பற்கள் தாமும் பாதிக்கப்பட்டு அபாய சங்கு ஊதும். எனவே பல் பாதிப்புக்கு உள்ளானவர்கள், பல்லுக்கு மட்டும் சிகிச்சை எடுத்துக் கொள்ளாமல் சம் பந்தப்பட்ட உள்ளுறுப்புகளையும் சோதிப்பது நல்லது.

பற்கள் தொடர்பான அக்கு பிரஷர் சிகிச்சை, குழந்தைகளுக்கும் செய்யக்கூடிய அளவில் எளிமையானது. சில குழந்தைகளுக்கு பால் பற்கள் விழுந்து மறுபடி முளைக்க தாமதமாகலாம். அந்தக் குழந்தைகளின் குதிகால்களில் உள்ள ‘கிட்னி சக்தி புள்ளி’களை தினசரி மூன்று வேளை விட்டுவிட்டு அழுத்தி வந்தால் போதும், பலமான பற்கள் முளைக்கத் துவங்கும்.

எல்லோரும் பரவலாகச் சந்திக்கும் பல் சம்பந்தப்பட்ட அடுத்த பிரச்னை, தீராத பல்வலி. இதைக் குணப்படுத்த ‘விரல்நுனி அழுத்தம்’ கைகொடுக்கிறது. முன் நான்கு பற்களுக்கு கட்டை விரலின் நுனியை தொடர்ச்சியாக இரு நிமிடங்கள் அழுத்தி விடவும். அடுத்த நான்கு பற்கள் வலித்தால், ஆட்காட்டி விரலையும், அடுத்த நான்கு பற்களுக்கு முறையே நடு, மோதிர விரலையும், கடைவாய்ப் பற்களுக்கு சுண்டுவிரலையும் தொடர்ந்து அழுத்தி வந்தால் பல்வலியைக் குணப்படுத்தலாம்.

பொதுவான ஒரு முறையும் உண்டு. அதாவது கட்டைவிரல் மற்றும் ஆள்காட்டி விரல்களுக்கு இடைப்பட்ட பகுதியில் சிறிய ஐஸ்கட்டியை வைத்து தொடர்ந்து இரு நிமிடம் அழுத்தினால், பல்வலி பறந்துபோகும்.

அடுத்ததாக பற்குழி. பல் மருத்துவரிடம் சென்று பற்குழிகளை சுத்தம் செய்து அடைத்துக் கொள்வதுதான் இதற்கு சிறந்த வழி. ஆனால், எதைக்கொண்டு அடைக்கிறோம் என்பது முக்கியம். தற்போது இதற்கு ‘அமால்கம்’ முறையில் வெள்ளி:பாதரசக் கலவை (30:70) பயன்படுத்தப்படுகிறது. இந்த முறைக்கு உலகின் பல்வேறு நாடுகள் தடை விதித்துள்ளன. காரணம், இம்முறையால் ‘பாதரச ஆக்சைடு’ என்கிற விஷம் நம் உடலுக்குள் செல்கிறது. சாப்பிடும்போது உணவோடு உணவாகக் கரைந்தும், சூடான பானங்களை அருந்தும்போது ஆவியாக மாறியும் உடலுக்குள் இது சென்றுவிடுகிறது. இதனால் நரம்பு மண்டலம் பாதிப்புக்குள்ளாகிறது. பாதரசம் இல்லாமல், ‘செராமிக்’ முறையில் அடைத்துக் கொள்வது நல்லது.

இனி சற்று கீழிறங்கி கழுத்து பிரச்னைகளைப் பார்க்கலாம். ‘எலும்பு தேய்வதாலேயே கழுத்து வலிக்கிறது’ என்பதுதான் தற்போதைய பரவலான கருத்து. அந்த எண்ணத்துடனேயே ‘நெக் காலர்’, ‘டிராக்ஷன்’ என சிகிச்சை எடுக்கக் கிளம்பி விடுகிறார்கள். கழுத்து எலும்பின் அமைப்பானது முன், பின், பக்கவாட்டில் திரும்புவதற்கு வசதியாகவே அமைக்கப்பட்டுள்ளது. அதை மேல்நோக்கி இழுக்கும் ‘டிராக்ஷன்’ சிகிச்சையால் ‘ரைநெக்’ (wry neck) என்ற பிரச்னை ஏற்படலாம். அதாவது, ‘டிராக்ஷன்’ செய்து கொண்டபின் கழுத்தை பக்கவாட்டில் முழுமையாகத் திருப்புவதற்குச் சிரமப்பட வேண்டியிருக்கும்.

கட்டைவிரலைத் தொடர்ந்து சுழற்றியும், கழுத்துக்கும் தோள்பட்டைக்கும் இடைப்பட்ட சதைப் பகுதியை மெதுவாக அழுத்தி விட்டும் கழுத்து வலியைக் குணப்படுத்தலாம் என்கிறது அக்கு பிரஷர். ‘சூஜோக்’ வளையமும் கழுத்துவலி தீர்ப்பதில் பயன்படுகிறது.

பெண்கள் அதிகளவில் கழுத்தில் சந்திக்கும் பிரச்னை, ‘காய்டர்’ எனப்படும் ‘முன்கழுத்துக் கழலை’. தைராய்டு குறைவு பிரச்னையான இது, மரபு ரீதியாகவோ சரிவிகித உணவு கிடைக்காததாலோ ஏற்படுகிறது.

அக்கு பிரஷரில் ‘தைராய்டு பாதிப்பு’ இருக்கிறதா அல்லது ஏற்படலாமா என்பதைக்கூட முன்கூட்டியே தெரிந்து கொள்ள முடியும். கட்டை விரலின் கீழ்ப் பகுதியை ஒட்டிய உள்ளங்கையில் அழுத்தும்போது வலி இருந்தால் பாதிப்பு இருக்கிறதென்பதைத் தெரிந்துகொள்ளலாம். இதற்கு சிகிச்சையும் அதே ‘கட்டைவிரல் - உள்ளங்கை’ அழுத்தமே.

காதில் உள்ள தைராய்டுக்கான அக்கு புள்ளியைத் தூண்டியும் இந்தக் கழலை நோயைக் குணப்படுத்தலாம். இதற்கு காதணி/ தோடு போன்ற அணிகலன்களே போதுமானது. இந்த இடத்தில் ஒரே கல்லில் இரு மாங்காய். காதுக்கு அழகு சேர்த்த மாதிரியும் ஆச்சு; பிரச்னையைக் காத தூரம் விரட்டிய மாதிரியும் ஆச்சு!

ஈசி எக்ஸ்ட்ரா டிப்ஸ்

* பல் துலக்கும்போது பிரஷ்ஷை நீள்வட்டமாக சுழற்றி துலக்குவது நல்லது.

* அதிகாலையில் வெறும் வயிற்றில் நல்லெண்ணெய் கொப்பளித்தால், பற்கள் ஆரோக்கியம் பெறும்.

* பல் சொத்தை, ஈறு வீக்கம் போன்ற பிரச்னைகளுக்கு கிராம்பு தைலத்தை பஞ்சில் நனைத்து சம்பந்தப்பட்ட இடத்தில் வைக்க, குணமாகும்.

* கீரை வகைகள், சுண்டக்காய், பால் பொருட்கள் பற்களுக்கு வலிமை சேர்ப்பவை.

* படிக்கிறபோது எழுத்துகள் இரு புருவங்களுக்கு மையத்தில் இருக்குமாறு படித்தால், கழுத்து வலியிலிருந்து தப்பிக்கலாம்.

* தைராய்டு பிரச்னை உள்ளவர்கள், முட்டைக்கோஸ், காலிஃபிளவர் போன்றவற்றைத் தவிர்ப்பது நல்லது.

ishwarya

Posts : 24602
Join date : 01/02/2013

View user profile

Back to top Go down

Back to top


 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum