Related Posts Plugin for WordPress, Blogger...
Keywords


பெரும்பலம் தரும் பீட்ரூட் கீரை

View previous topic View next topic Go down

பெரும்பலம் தரும் பீட்ரூட் கீரை

Post  ishwarya on Tue May 07, 2013 2:24 pm

பெரும்பாலான கிழங்கு வகைகளில் நார்சத்துக்கள் அதிகம் காணப்படுவதில்லை. வெறும் கார்போஹைட்ரேட் சத்துகள் மட்டுமே பெருமளவு காணப்படுகின்றன. அதிலும் நாம் சமையலில் பயன்படுத்தும் பெரும்பாலான கிழங்குகள், வெறும் ருசிக்காக மட்டுமே பயன்படுகின்றன. கார்பாஹைட்ரேட் அதிகம் நிறைந்த கிழங்குகளை சிப்ஸ், வறுவல், பொரியல் என எண்ணெய் சேர்த்து பயன்படுத்துவதால் அதில் தங்கியுள்ள உயிர்சத்துகள் அழிந்து விடுகின்றன. கிழங்கு மற்றும் விதை வகைகளை உணவாக உட்கொள்ளும் பொழுது அத்துடன் அதன் மேல் பாகங்களான இலை, விதை மற்றும் தண்டுகளையும் சேர்த்து உட்கொள்வது நல்லது. நாம் அடிக்கடி சமையலில் பயன்படுத்தும் காரட், முள் ளங்கி, பீட்ரூட், நூல்கோல், வெந்தயம், சீரகம், ஓமம், வெங்காயம், பூண்டு போன்றவற்றின் கீரைப் பகுதிகளையும் உணவில் சூப் அல்லது அரைத்த விழுதாக சேர்த்து பயன்படுத்தலாம். ஏனெனில் கிழங்குகளில் இல்லாத சில உயிர்சத்துக்களும், கனிமங்களும், அத்தியாவசிய உப்புகளும், நார்சத்துகளும் இந்த கீரைகளில் பெருமளவு உள்ளன. நாம் உண்ணும் கிழங்குகளில் பீட்ரூட்டின் பங்கு இன்றியமையாதது. சமையலில் ருசியையும்,உணவுகளுக்கு கவர்ச்சியான தோற்றத்தையும் தருவதுடன், அனைத்து உறுப்புகளையும் சீராக இயங்க செய்வதற்கு பீட்ரூட் பெரும் பங்கு வகிக்கிறது. பீட்ரூட்டிலிருந்து சாயம் தயாரிக்கப்பட்டு, பலவிதமான உணவுப் பொருட்களும் நிறமேற்றப்படுகின்றன. பீட்டா வல்காரிஸ் என்ற தாவரவியல் பெயர் கொண்ட கீனோபோடியேசியே குடும்பத்தைச் சார்ந்த இந்த கிழங்குச்செடிகள் உணவுக்காக பயிரிடப்படுகின்றன. கிழங்குகளைவிட இதன் இலைகள் ஏராளமான மருத்துவக் குணங்களை கொண்டுள்ளன. கிழங்கு மற்றும் இலைகளில் மெக்னீசியம், சோடியம், பொட்டாசியம், போரான், கால்சியம், இரும்பு, பாஸ்பரஸ், துத்தநாகம், பீட்டைன், வைட்டமின் சி மற்றும் ஏராளமான வைட்டமின்களும், கனிமங்களும் காணப்படுகின்றன. இதிலுள்ள பீட்டைன் என்னும் ஆல்கலாய்டு இருதயத்தை பாதுகாப்பதுடன், போலிக் அமிலம், ஏ வைட்டமின், பி வைட்டமின்கள் மற்றும் புரொஜஸ்டிரோன் என்னும் ஹார்மோனின் செயல்பாட்டிற்கும் பெருமளவு உதவுகின்றன. இலை மற்றும் கிழங்குகள், சிறுநீரை நன்கு பெருக்கி, இதய வீக்கத்தை குறைக்கின்றன. பீட்ரூட்டிற்கு இனிப்பு சுவை இருந்த போதிலும் இதன் இலை மற்றும் கிழங்கு சாறானது ரத்த சர்க்கரையளவை குறைக்கின்றன. கல்லீரலின் கொழுப்பை கரைக்கின்றன. பீட்ரூட்டிலுள்ள நைட்ரேட், நைட்ரிக் ஆக்சைடாக மாற்றமடைந்து, மென்மையான சதைப்பகுதிகளை சுருங்கி, விரியச் செய்கின்றன. இதனால் ரத்த ஓட்டம் சீராகிறது. பீட்ரூட் கிழங்குகளை உணவில் அதிகமாக உட்கொள்ளும் பொழுது தற்காலிகமாக சிறுநீர் மற்றும் மலம் சிவப்பாக செல்வதுண்டு. உணவில் உள்ள சத்து, உடலால் முழுவதும் கிரகிக்கப்பட்டதும், இந்நிலை மாறி விடுவதுண்டு. செரிமான கோளாறுகளை நீக்கி, உணவுப்பாதையில் தோன்றிய அழுகல் மற்றும் கழிவுகளை நீக்கும் தன்மை பீட்ரூட்டுக்கு உண்டு. பூண்டு உட்கொள்ளும் பொழுது ஏற்படும் வாய் நாற்றத்தை நீக்கவும் பீட்ரூட் துண்டுகளை வாயில் போட்டு மென்று வரலாம். சாலட், பொரியல், ஜாம், ஊறுகாய், சூப் என பலவகைகளில் உட்கொள்ளப்படுகிறது. பீட்ரூட் இலை மற்றும் கிழங்கை வேகவைத்து, சூப் தயார் செய்யலாம். பீட்ரூட் இலை2 கைப்பிடியளவு, பீட்ரூட் கிழங்கு200 கிராம், தக்காளி2, பெரிய வெங்காயம் அரிந்தது2 மேசைக்கரண்டி, பச்சை மிளகாய்2, சீரகம் மற்றும் சோம்பு அரைத்த கலவைஒரு கரண்டி, தேங்காய் துருவல்2 மேசைக்கரண்டி ஆகியவற்றை எடுத்துக்கொள்ள வேண்டும். பீட்ரூட் இலைகளை ஓடும் நீரில் அலசி சிறு சிறு துண்டுகளாக வெட்டிக் கொள்ள வேண்டும். பீட்ரூட் கிழங்கையும் தோல் சீவி சிறு, சிறு துண்டுகளாக வெட்டிக்கொள்ள வேண்டும்.
வெட்டிய வெங்காயம், தக்காளி, மிளகாய் மற்றும் சோம்பு, சீரக கலவை ஆகியவற்றை வதக்கி, அத்துடன் பீட்ரூட் இலை மற்றும் கிழங்கு துண்டுகளை கலந்து 500மி.லி., நீரில் போட்டு வேகவைத்து, வெந்ததும், அரைத்த தேங்காய் துருவலை கலந்து, மீண்டும் 250 மி.லி., நீர் ஊற்றி நன்கு கொதிக்கவைத்து, வடிகட்டி எடுத்துக்கொள்ள வேண்டும். இதை வாரம் ஒருமுறை குடித்து வர ரத்த ஓட்டம் சீராகும்; சிறுநீர் நன்கு பெருகும்; ரத்த சோகையினால் பெண்களுக்கு தோன்றும் மாதவிலக்கு தடை நீங்கும். கல்லீரல் பித்தப்பையில் தோன்றும் கற்கள் மற்றும் மண்ணீரல் வீக்கம் நீங்கும்.

ishwarya

Posts : 24602
Join date : 01/02/2013

View user profile

Back to top Go down

View previous topic View next topic Back to top


 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum