Related Posts Plugin for WordPress, Blogger...
Keywords


வெயிலுக்கு இதமான வெள்ளரி

View previous topic View next topic Go down

வெயிலுக்கு இதமான வெள்ளரி

Post  ishwarya on Tue May 07, 2013 6:13 pm

சென்னையில இப்பவே வெயிலோட தாக்கம் அதிகமாயிடுச்சு. வெயிலின் தாக்கத்திலிருந்து தப்பிக்க இயற்கை நமக்கு ஏராளமானவற்றை தந்திருக்கு. அந்தவகையில், வெயிலுக்கு இதமான வெள்ளரியில் அதிக நன்மைகள் உள்ளன. வைட்டமின் பி சத்துள்ள இந்த வெள்ளரியில் நீர்சத்து அதிகம் உள்ளது.

100 கிராம் வெள்​ள​ரியை அப்​ப​டியே சாப்​பிட்​டால் நமக்கு,​​
கார்​போ​ஹை​டி​ரேட் -​ 3.63 கிராம்
சர்க்​கரை -​ 1.67 கிராம்
நார்ச்​சத்து -​ 0.5 கிராம்
​​ கொழுப்​புச்​சத்து -​ 0.11 கிராம்
​புரோட்​டின் -​ .65 ராம்
விட்​ட​மின் பி1 -​ 0.027 மில்லி கிராம்
​விட்​ட​மின் பி2 -​ 0.033 மில்லி கிராம்
விட்​ட​மின் பி3 -​ 0.098 மில்லி கிராம்
​விட்​ட​மின் பி5 -​ 0.259 மில்லி கிராம்
​விட்​ட​மின் பி6- 0.040 மில்லி கிராம்
​விட்​ட​மின் ​ இ​ -​ 2.8 மில்லி கிராம்
கால்​சி​யம் -​ 16 மில்லி கிராம்
இரும்​பு​சத்து -​ 0.28 மில்லி கிராம்
மெக்​னீ​சி​யம் -​ 13 மில்லி கிராம்
​பாஸ்​ப​ரஸ் -​ 24 மில்லி கிராம்
​பொட்​டா​சி​யம் -​ 147 மில்லி கிராம்
சிங்க் 0.20 மில்லி கிராம் போன்ற சத்​துக்​கள் சத்​த​மின்றி வந்து சேரும்..

​வெள்​ள​ரியை தொடர்ந்து சாப்​பிட்டு வந்​தால் பிர​ஷர் சம​நி​லைப்​ப​டும்.​ நெஞ்​சக எரிச்​சல்,​​ வயிற்று எரிச்​சல்,​​ அல்​சர்,​​ வாயுத்​தொல்​லை​க​ளும் குண​ம​டை​ யும்.​ மேலும் வெள்​ளரி,​​ கேரட் கலந்த ஜூ�ஸ குடித்து வந்​தால் வாத சம்​பந்​த​மான நோய்​கள் குண​ம​டை​யும்.​ கண்​க​ளைச் சுற்றி வெள்​ளரி துண்​டு​களை வைப்​ப​தன் மூலம் கண் எரிச்​சல் மாறு​வ​து​டன் வீக்​க​மும் குண​ம​டை​யும்.​

உடல் சூட்டை தணிக்கும் தன்மை கொண்டது. கண் எரிச்சலில் இருந்து நம்மை காக்கிறது. வெள்ளரியை சாப்பிட்டு வந்தால் செரிமான சக்தி அதிகரிக்கும். கேன்சர் வராமல் தடுக்கிறது. தலைவலியில் இருந்து காக்கிறது. உடலை குளிர்ச்சியாக வைத்திருக்கிறது. கொழுப்பை குறைக்கும் தன்மை வெள்ளரிக்கு உண்டு. தோல் மற்றும் முடியை பாதுகாக்கிறது. ரத்த அழுத்தத்தை கட்டுப்படுத்தும் தன்மை கொண்டது வெள்ளரி. இதுபோன்ற ஏராளமான நன்மைகள் கொண்ட வெள்ளரியை நாமும் சாப்பிட்டு பயன்பெறலாமே.

ishwarya

Posts : 24602
Join date : 01/02/2013

View user profile

Back to top Go down

View previous topic View next topic Back to top


 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum