Related Posts Plugin for WordPress, Blogger...
Keywords


மருந்தாகும் மூலிகைகள்

View previous topic View next topic Go down

மருந்தாகும் மூலிகைகள்

Post  ishwarya on Wed May 08, 2013 11:46 am

அந்த காலத்திலெல்லாம் இவ்வளவு பிணிகளும் இல்லை; மருத்துவ மனைகளும் இல்லை. மூலிகை நாட்டு மருந்துகளின் மூலமாகவே மக்கள் நிவாரணம் பெற்றனர். பெரிய நோய்களைத் தவிர அன்றாடம் வாழ்வில் சாதாரணமாக ஏற்படும் உடல் சீர்கேடுகளை வீட்டில் செய்யப்படும் கை வைத்தியத்தின் வாயிலாக போக்கிக் கொண்டனர். எல்லாமே இயற்கையாக இருந்ததால் நோய்களும் குறைவாகவே வந்தது. நாமோ அவற்றின் மகிமைகளை மறந்துவிட்டோம். இத்தகைய சூழலில் மக்கள் நல்வாழ்க்கையை பெற மூலிகைகளே துணை என்னும் நோக்கில் சில மூலிகைகளையும் அதன் பயன்களையும் இங்கு காண்போம்.

சுக்கு

தினம் காலையில் சுக்குக் காப்பி பருக மூக்கடைப்பு உடல் பித்தம் குணமாகும். தலைவலி மற்றும் பிரசவ கால குமட்டலுக்கு முதல் மருந்து. பசியை தூண்டவும் அஜிரணத்தை போக்கவும் வல்லது.

மிளகு.

சளி, பசியின்மையைப் போக்குகிறது. திடீர் அரிப்பு தடிப்புக்கு ஆஸ்துமா சைணுசைட்டிஸ்க்கு (நீர்கோவையுடன் மூக்கடைப்பு) சிறந்த நிவாரணமாகிறது.

திப்பிலி

திப்பிலியை வெற்றிலை துதூவாழை சாறில் ஊறவைத்து பொடி ஒரு சிட்டிகை அளவு தேனில் குழைத்து சாப்பிட இருமல் குணமாகும். அதனுடன் தண்ணீர் சேர்த்து 20 மில்லியாக சுண்ட வைத்து இளஞ்சூட்டில் காலை மாலை வாய்கொப்பளிக்க வாய் நாற்றம், பல் கூசுதல், தொண்டை புண் தொண்டை சளி குணமடையும்.

ஆடாதொடை

டஸ்ட் அலர்ஜி சீரடைய கொதிக்க வைத்த 500 மிலி வெந்நீரில் 5 ஆடாதொடை இலைகளைப் போட்டு வரும் நீராவியை மூக்கினால் சுவாசித்தால் குணமாகும். இதிலுள்ள புரோம்ஹெக்சின் ஆஸ்துமா நோயாளிகளின் சளியை இளக்குகிறது. மூச்சுக்குழலில் உள்ள சளியை இளக்கி வெளியேற்றவும் இருமலுக்கும் சிறந்தது.

தூதுவளை

இதன் இலையை கசக்கி சாறு எடுத்து 2 சொட்டு தினசரி காதில் விட காது அடைப்பு குணமாகும். எப்போதும் இருமல் சளியுடன் இருப்பவர்கள் இதன் பழங்களை தேனில் குழைத்து சாப்பிட சளி நீங்கும். இதிலுல்ல சொலுயூசன்ஸ் சளியை அறுத்து வெளியே தள்ளும் ஆற்றல் மிக்கது. இதனை ரசம் சைத்தும் சாப்பிட பயன்படுத்தலாம்.

நொச்சி

நொச்சி இலையை 1/2 கைப்பிடி அளவெடுத்து நீரில் கழுவி சந்தனம் போல அரைத்து காலையில் வெறும் வயிற்றில் உட்கொண்டு வர ஈரல் வீக்கம் இயல்பு நிலையையடையும். இலைகளை 2 கைப்பிடி 1 லிட்டர் நீரில் போட்டு கொதிக்க வைத்து இலைகளை எடுத்து விட்டு குளிக்கும் வெந்நீரில் கலந்து குளித்தால் உடல்வலி மறையும். தொடர் தும்மல் மூக்கடைப்பு, தலைவலி, இவற்றிற்கு இதன் இலைகளை போட்டு ஆவி பிடிக்க நீர் வெளியேறி சுவாசம் புத்துணர்வு பெறும். இதன் இலைகளை வதக்கி வலியுள்ள இடங்களில் ஒத்தடமிடும் போது மூட்டுவலியைப் போக்குகிறது.

நஞ்சறுப்பான்

நஞ்சறுப்பான் கொடியின் இலை விஷத்தை முறிக்கும் இலையுடன் 1 மிளகு சேர்த்து காலையில் சாப்பிட இரைப்பு நேய்(வீசிங்) கட்டுப்படும். உடல் நோய் எதிர்ப்பாற்றலைச் சீர்படுத்தும்.

கீழாநெல்லி

தண்டு மற்றும் கீரையை இடித்து துணியில் வைத்துப் பிழிந்து சாறு எடுத்து சம அளவு விளக்கெண்ணெய் கலந்து காலை மாலை கண்களில் ஒன்றிரண்டு சொட்டுகள் விட்டு வர கண்புரை கரையும். மஞ்சள் காமாலை ரத்தமின்மைக்கு நல்மருந்து. ஹெபடைடில் பி எனும் கொடிய வைரசால் பாதிப்புற்ற கல்லீரலை மீட்கிறது.

துளசி

மன அழுத்தத்தைக் குறைக்க துளசி டீ ஏற்றது. வைரஸை எதிர்த்தும் பாக்டீரியாவை செயலிழக்கவும் செய்யவல்லது. ஆன்டி ஆக்ஸிடண்டுகள் அதிகம் கொண்டது தோல் வியாதி ரத்தத்தை சுத்திகரிக்க தலைவலி போக்க சீரணத்தை அதிகரித்து அஜீரணத்தை போக்க வல்லது. சளியுடன் வரும் இன்புளுயன்சா காய்சலுக்கு சிறந்த மருந்து நோய் எதிர்ப்பு திறன் கொண்டது. ஆஸ்துமா நோயாளிகளின் நண்பன் 20 துளசி இலைகளை 100மி தண்ணீரில் சேர்த்து 20 மில்லியாக சுண்ட வைத்து இளஞ்சூட்டில் காலை மாலை வாய் கொப்பளிக்க வாய் நாற்றம் பல் கூசூதல் தொண்டை புண் தொண்டைச்சளி குணமடையும்.

கரிசலாங்கண்ணி

கல்லீரலில் ஏற்படும் புண் வீக்கம் மற்றும் ரத்தகசிவை குணப்படுத்தும். இதிலுல்ல இரும்பு சத்து ரத்தத்தில் சிவப்பணுக்களை பெருக்கி ரத்த சோகையை நீக்குகிறது. தலைமுடி பல், கண் தோலுக்கு ஊட்டத்தை தரவல்லது. ஜீரணத்தை அளிக்க வல்லது. ஹெபடைடில் ஏ.பி மஞ்சள் காமாலையை குணப்படுத்தும். இருமலை மட்டுபடுத்தும் அடிக்கடி சளி பிடிக்கும் தன்மை உள்ளோர் பச்சையாகவோ அல்லது வற்றலாகவோ வாரமிருமுறை உண்டு வர சளி பிடிக்காது. தொண்டை வலி இதய பலவீனத்தைப் போக்கும். இலைகள் கைப்பிடியளவு சிறிது உப்பு சேர்த்து மண் பானையிலிட்டு வதக்கி நாய் கடித்த இடத்தில் ஒத்தடம் கொடுத்து அதே இலையை வைத்து கட்டினால் நச்சு முறிந்து விடும்.

பிரண்டை

பிரண்டை சாறு கருப்பைக் கட்டிக்கு மருந்து பைலோரி என்னும் கிருமி உண்டாக்கும் வயிற்றுபுண்னை ஆற்ற வல்லது. பசியை தூண்டும்.

அதிமதுரம்.

நாவறட்சி தொண்டைக்கட்டு வறட்டு இருமலுக்கு "டாக்டர்". குடல் புண்னை ஆற்றும். இனிப்பு, சர்க்கரைக்கு பதிலாக அதிமதுரத்தை பயன்படுத்தலாம்.

அருகம்புல்

ரத்த கொலஸ்டிராலைக் குறைக்க உடல் எடை குறைய உதவும். நச்சுக்களால் உடலில் ஏற்படும் திடீர் அரிப்பு நோய் ஒவ்வாமை நோய்க்கு அருகம்புள் சாறு 100மி தினமும் 2 வேளை சாப்பாட்டுக்கு முன் சாப்பிட 15 நாளில் பலனுன்டு

ishwarya

Posts : 24602
Join date : 01/02/2013

View user profile

Back to top Go down

View previous topic View next topic Back to top


 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum