Related Posts Plugin for WordPress, Blogger...
Keywords


மன அழுத்தம் விலக ஆசனப் பயிற்சிகள்

Go down

மன அழுத்தம் விலக ஆசனப் பயிற்சிகள்

Post  ishwarya on Wed May 08, 2013 1:33 pm

மனம் விரிந்து குவிந்தது மாதவ
மனம் விரிந்து குவிந்தது வாயு
மனம் விரிந்து குவிந்தது மன்னுயிர்
மனம் விரைந்துரை மாண்டது முத்தியே.

மனம் நிம்மதி, மன அமைதி பெற ஒரு சில யோகப் பயிற்சிகள், பிராணாயமாப் பயிற்சிகள் குறிப்பாக சாந்தி ஆசனம் அத்துடன் நெற்றி ஈரத்துணிப்பட்டி, வயிற்று ஈரத்துணிப் பட்டி செய்திட மிக மிக நல்ல பலனை இலகுவாக, சுலபமாக செலவில்லாமல் செய்யலாம். உடல் களைத்தும், சோர்வாகவும் இருக்கும் சமயம் 10 நிமிடம் செய்தால் இரண்டு மணி நேரம் தூங்கியதன் பலன கிட்டி நாம் நல்ல புத்துணர்ச்சி பெறலாம்.

அற்புதமான காற்று, ஆகாயம் என்ற இரு பஞ்ச பூதங்கள் இணைந்த சிகிச்சையாகவும் உள்ளது. அனைவரும் தினமும் அவசியம் செய்யவேண்டும்.சாந்தி ஆசனம் செய்முறை:&காலை, மாலை செய்யலாம். உணவுக்கு முன் செய்யலாம். களைந்த போது மன அழுத்தம், இரத்த அழுத்தம் மிகும் சமயம் செய்யலாம்.காற்றோட்டம் உள்ள இடத்தில் செய்யலாம். வெறும் தரையில் செய்யாமல் விரிப்பு, பாய் மேல் செய்யலாம். படுத்த நிலை ஆசன & எனிளய குறைந்த உடையுடன் செய்யலாம்.

பாயின் மேல் அமர்ந்து கால்களை நீட்டவும். இருகைகளையும் இடப்புறம் வைத்திடவும். அதே நிலையில் மெதுவாக இடது கையை பின்னால் இறக்கி இடது புறமாக ஒருக்களித்துப் படுக்கவும். பின் உடலைத் திருப்பி மல்லாக்கப் படுக்க வேண்டும். முகம் வானம், கூரையைப் பார்த்த நிலை, கால்கள் கைகள் உடலைத் தொடாதவாறு ஒரு அடி இடைவெளியில் இயல்பாக விரிந்து இருக்கலாம். உள்ளங்கை வானத்தைப் பார்த்த நிலை. கண் மூடி இருக்கலாம். ஒவ்வொரு உறுப்புகளும் அற்புதமாக ஓய்வு பெறும். கால் முதல் உச்சந்தலை வரை 60 புள்ளிகள் தயார் செய்து ஒவ்வொரு புள்ளியாக மூன்று நிமிடம் வரை நினைவுப் பயணம் செய்ய வேண்டும். இதுபேல் 7 முறை செய்ய வேண்டும். தலையணை இல்லாமல் படுத்துப் பழகவும். சிலருக்கு தூக்கம் வரலாம். அதனால் தவறில்லை. பலர் இந்நிலையில் ஆழ்மனது நிலை சென்று வருவர். தன்னை மறந்த நிலை, உயர்ந்த நிலைக்கு செல்லும் வல்லமை பெறுவர். இது பார்ப்பதற்கு எளிதான ஆசனம் எனினும் பொறுமையாக, இயல்பாக தனித்து செய்திட சிறிது சிரமம் இருக்கும். தியானத்தை செய்ய இவ்வாசன நிலைமிக நல்ல நிலை. கோபம் உடன் மட்டுப்படும். அதிக குருதி அழுத்தம் குளிர்ச்சி பெறும். தூங்கியும் தூங்காத நிலை கிட்டும். இவ்வாசனம் செய்யும் சமயம் ஒரு நிமிட நேரம் கூட ஒரு மணி நேரம் ஆனது போல் இருக்கும்
.
முதுகுத்தண்டு தரையில் நன்றாகப் படிந்து ஓய்வு தர வேண்டும். அதிக குருதி அழுத்தம், மன அழுத்தம் உள்ளவர்களுக்கு இதுவே மருந்து. இதைச் செய்ய செய்ய தூக்க மாத்திரைகளைக் குறைத்திடலாம்.
சாந்தி ஆசனம் முடியும் சமயம் ஓம் சாந்தி மூன்று முறை சொல்லி மறுபடி ஒருக்களித்துப் படுத்து பின் மெதுவாக அமர்ந்து எழ வேண்டும்.பவன முக்தாசனம், கைவிரல்கள், கால் விரல்கள் மடக்கும் பயிற்சிகள், கழுத்துபயிற்சிகள், விருச்சிகாசனம், கபாலபதி, சீத்களி, பத்மாசனம், வஜ்ராசனம், எளிய நாடி சுத்திகள் அனைத்தும் மன அமைதி தரும் பயிற்சிகளாகும். இப்பயிற்சிகளை அறிய ஆசிரியரின் தினம் ஒரு யோகா நூலை நாடலாம்.

சாந்தி ஆசனம் செய்யும் முன் ஒரு டம்ளர் குடிநீர் அருந்தி செய்யவும். இத்துடன் நெற்றி, கண்ணிற்கு ஈரத்துணி பட்டியும் போடலாம்.சிற்பரஞ் சோதி சிவானந்தக் கூத்தனைச் சொற்பதமாம் அந்தச் சுந்தரக் கூத்தனைப் பொற்பதிக் கூந்தனைப் பொற்றில்லைக் கூத்தனை அற்புதக் கூத்தனை யாரறி வரே.

ishwarya

Posts : 24602
Join date : 01/02/2013

View user profile

Back to top Go down

Back to top


 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum