Related Posts Plugin for WordPress, Blogger...
Keywords


இளமையில் கண்டுக்கலே வயதான பின் டென்ஷன்

View previous topic View next topic Go down

இளமையில் கண்டுக்கலே வயதான பின் டென்ஷன்

Post  ishwarya on Wed May 08, 2013 2:00 pm

குழந்தைப் பருவத்தில் இருந்தே கொழுப்பு அதிகம் இருந்தால் உடனே கவனித்து விடுவது தான் நல்லது. இல்லாவிட்டால், வயதான காலத்தில் பாடாய்படுத்தி விடும். ரத்த அழுத்தம், சர்க்கரை நோய்க்கு, இளம் வயது தவறு தான் காரணம்.

இளைய வயது குஷித்தனம், எதிலும் கட்டுப்பாடில்லா வாழ்க்கை எல்லாம், பல்வேறு பிரச்னைகளை விளைவிக்கும் என்பது உலக மருத்துவர்கள் பல முறை உறுதி செய்து விட்டனர்.

குழந்தை பருவத்தில், நொறுக்குத் தீனியும், அடிக்கடி எதையாவது உண்ணும் பழக்கம், டி.வி முன் நீண்ட நேரம் இருக்கும் குழந்தைகளின் உடல் எடை அதிகரிப்பதை கண்கூடாக பார்க்கலாம்.

குழந்தை பருவத்தில் அதிக எடை உள்ள குழந்தைகளின் ஆரோக்கியம் வாலிப பருவத்தில் பல்வேறு பிரச்னைகளை ஏற்படுத்தலாம். அவர்களால் சாதாரண வேலையை கூட வாலிபப் பருவத்தில் செய்வது கடினமாகிவிடுகிறது. நடைப்பயிற்சியானது குழந்தைப்பருவம் முதல் முதியோர் வரை உடல் ஆரோக்கியமாக இருக்க உதவும் என்பது மட்டும் நிச்சயம்.

பழமொழி படி நடங்க

ஆயுளை நீடிக்க உணவை குறை ஒருவேளை உண்பவன் யோகி. இருவேளை உண்பவன் போகி. மூன்று வேளை உண்பவன் ரோகி. பசித்து புசிப்பதும் அளவறிந்து உண்பதும் நீண்ட ஆயுளைத் தரும்.

ishwarya

Posts : 24602
Join date : 01/02/2013

View user profile

Back to top Go down

View previous topic View next topic Back to top


 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum