Related Posts Plugin for WordPress, Blogger...
Keywords


பேரிடர் சமயங்களில் பேருதவியாய் இருக்கும் முதலுதவி பற்றி தெரிஞ்சுகோங்க!

View previous topic View next topic Go down

பேரிடர் சமயங்களில் பேருதவியாய் இருக்கும் முதலுதவி பற்றி தெரிஞ்சுகோங்க!

Post  ishwarya on Wed May 08, 2013 2:19 pm

சமீபத்தில் சென்னையில் நிலநடுக்கம் ஏற்பட்டது. ஏறக்குறைய அனைத்து பகுதியிலும் இந்த நிலநடுக்கம் உணரப்பட்டது. வீடு மற்றும் அலுவலக கட்டிடங்கள் லேசாக குலுங்கியதால், பலரும் தெருவுக்கு ஓடிவந்தனர். சுனாமி பீதி ஏற்பட்டதால் கடற்கரையிலிருந்து பொதுமக்கள் அப்புறப்படுத்தப்பட்டனர். இந்த நிலநடுக்கம் பெரிய அளவில் எந்த பாதிப்பையும் ஏற்படுத்தவில்லை.

இது ஒருபுறம் இருந்தாலும், சிலர் வீம்புக்கென்றே கட்டிடங்களை விட்டு வெளியில் வராமல் உள்ளேயே அமர்ந்திருந்தனர். அப்படியே கட்டிடங்களுக்கு வெளியில் நின்றிருந்தவர்களும், ‘இப்ப பெரிய நிலநடுக்கம் வந்து இந்த கட்டிடம் இடிஞ்சு விழுந்தா எப்படி இருக்கும்‘ என்று ஜோக் அடித்துக் கொண்டிருந்தனர். இன்னும் சிலர் போலீஸ் தடையை மீறி கடலில் குளிக்க முயற்சி செய்தனர்.

அந்தளவுக்குதான் நம்மக்களிடையே விழிப்புணர்வு இருக்கிறது. இதே பெரிய அளவில் நிலநடுக்கம் ஏற்பட்டிருந்தால் அதன் பாதிப்பு பயங்கரமாக இருந்திருக்கும் என்பதை நாம் உணர வேண்டும். இது போன்ற சிறிய நிலநடுக்கங்கள் இயற்கை நமக்கு தரும் எச்சரிக்கை. இதனால், பேரிடர் சமயங்களில் நம்மையும் நம்மை சுற்றியிருப்பவர்களையும் காப்பாற்றுவது குறித்து தெரிந்து கொள்வது மிகவும் அவசியம்.

இதுதவிர திடீர் தீ விபத்து, விபத்தில் சிக்குபவர்களுக்கு அளிக்க வேண்டிய முதலுதவி பற்றி தெரிந்து கொண்டால் நிச்சயம் பல உயிர்களை காப்பாற்ற முடியும். இது போன்ற முதலுதவிகளை எவ்வாறு செய்வது என்பது பற்றி இலவசமாக கற்றுத் தருகிறது செயின்ட் ஜான் ஆம்புலன்ஸ் சேவை மையம். எழும்பூர் நெடுஞ்சாலையில் உள்ள இந்த சேவை மையத்தின் சேர்மன் வடிவேல் முகுந்தன் கூறுகையில், ‘செயின்ட் ஜான் ஆம்புலன்ஸ் சேவை மையம் 1000 ஆண்டுகளாக பல்வேறு சேவைகளை செய்து வருகிறது.

பல நாடுகளில் கிளைகள் உள்ளன. இந்தியாவில் முதன்முதலாக கடந்த 1912ல் டெல்லியில் தொடங்கப்பட்டது. நாங்கள், ஸ்டூடன்ஸ் மிஷன், இயற்கை மிஷன், ஹைவே மிஷன் போன்ற திட்டங்களை செயல்படுத்தி வருகிறோம். ஸ்டூடன்ஸ் மிஷன் திட்டத்தின் மூலம் பள்ளி மாணவர்களுக்கு முதலுதவி பற்றி கற்றுத்தருகிறோம்.

6ம் வகுப்பு முதல் 8ம் வகுப்பு வரை ஒரு பாடத்திட்டமாகவும், 9ம் வகுப்பு முதல் 12ம் வகுப்பு வரை ஒரு பாடத்திட்டமாகவும், கல்லூரி மாணவர்களுக்கு ஒரு பாடத்திட்டமாகவும் எளிய முறையில் வகுக்கப்பட்டுள்ளது. சேவை மனப்பான்மை உடையவர்கள் அனைவருமே எங்களிடம் முதலுதவி பயிற்சி பெறலாம்‘ என்றார். தொடர்புக்கு: 044-28194630, 28191707.

நிலநடுக்கம் ஏற்பட்டால்...

நிலநடுக்கம் என்று உணர்ந்தவுடன் கட்டிடத்தை விட்டு வெளியேறலாம்.
சமைத்துக் கொண்டிருந்தால் கேஸை மூடிவிடவும்.
மின்சார மெயின் ஸ்விட்சை ஆஃப் செய்துவிடவும்,
செல்லப்பிராணிகள் இருந்தால் அதை கையில் தூக்காதீர்கள். அவைகளை கட்டிப்போடாமல் இருந்தால் போதும். கையில் தூக்கினால் பயத்தில் கடித்துவிட வாய்ப்பதிகம்.
வாகனத்தை ஓட்டிக் கொண்டிருந்தால் பாதுகாப்பான இடத்தில் நிறுத்திவிடுங்கள்.
மின்கம்பங்கள், மேம்பாலங்கள், கட்டிடம், மரங்கள் மற்றும் டிரான்பார்மர் ஆகியவற்றின் அருகில் நிற்காதீர்கள்.
வீட்டிற்குள் இருந்தால் கனமான மேஜை, சமையலறை மேடை ஆகியவற்றின் அடியில் அமர்ந்து கொள்ளுங்கள்.

ishwarya

Posts : 24602
Join date : 01/02/2013

View user profile

Back to top Go down

View previous topic View next topic Back to top


 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum