Related Posts Plugin for WordPress, Blogger...

நலநடுக்கத்தில் பாதிக்கப் பட்டவர்களுக்கு...

View previous topic View next topic Go down

நலநடுக்கத்தில் பாதிக்கப் பட்டவர்களுக்கு...

Post  ishwarya on Wed May 08, 2013 2:28 pm

* படுகாயம் அடைந்தவர்கள் யாரேனும் இருந்தால் அவர்களை அடிக்கடி இடம் மாற்றாதீர்கள். காயமும், விளைவுகளும் விபரீதமாகி விடக் கூடும்.

* முதியோர்களையும், குழந்தைகளையும் கவனியுங்கள். அவர்களுக்கு தெம்பூட்டுங்கள்.

* நிலநடுக்கம் மீண்டும் வரக் கூடும் எனும் எண்ணம் இருக்கட்டும். அவசரப்பட்டு வீட்டுக்குள் நுழைந்துவிடாதீர்கள். இரண்டாவது நடுக்கத்தில் வீடுகள் விரைவாய் உடையக் கூடும்.

* ஷூவோ, செருப்போ அணிந்து கொள்ளுங்கள். கண்ணாடி, கம்பி, கல் போன்றவை குத்தி காயம் ஏற்படுவதைத் தடுக்கலாம்.

* இடிபாடுகளைச் சுற்றி வேடிக்கைக் கூட்டம் போடுவது, சாலைகளை அடைத்துக் கொண்டு கும்பல் சேர்வது இவற்றை தவிருங்கள். மீட்பு பணிகள் தாமதமாகக் கூடும்.

* மீண்டும் வீட்டுக்குள் நுழைந்தாலும் கவனமாய் இருங்கள். கீறல்கள் இருக்கிறதா என கவனியுங்கள். வீட்டிலுள்ள பொருட்கள் எப்போது வேண்டுமானாலும் விழலாம். அதிலும் கபோடுகள் திறக்கும் போது இரட்டைக் கவனம் தேவை.

* நெருப்பு பற்ற வைக்காதீர்கள், காஸ் எங்கிருந்தாவது கசியலாம். எரிபொருட்கள் சிதறிக் கிடக்கலாம் ! கவனம் தேவை.

* மின் வயர்களைத் தொடுவதோ, மின் சுவிட்களைப் போடுவதோ, வேண்டாம்.

* ஒருவேளை நீங்கள் இடிபாடுகளிடையே மாட்டிக் கொண்டு விட்டால் பயப்படாதீர்கள். அவசரப்பட்டு வெளியே வர முயலாதீர்கள். அது ஆபத்தை அதிகரிக்கும். மிரண்டு போய் கத்தாதீர்கள். கத்தினால் நச்சுவாயுவைச் சுவாசிக்கவும், இருக்கும் சக்தியை இழக்கவும் அது காரணமாகிவிடும்.

* அருகிலிருக்கும் சுவரில் கைகளால் தட்டி ஒலி எழுப்புங்கள். கையில் ஒருவேளை விசில் இருந்தால் நல்லது! ஊதுங்கள் !

* ஒருவேளை நீங்கள் கடற்கரை அருகில் இருந்தால் கவனம் தேவை. பெரிய அலை வரக்கூடும்

* மிக முக்கியமாக விஷயம். எதையும் ஊதிப் பெருசாக்கி பரபரப்பையும், கிலியையும் மக்களிடையே கிளப்பி விடாதீர்கள் !

இந்த சின்னச் சின்ன விஷயங்களைக் கருத்தில் கொண்டால், பெரிய பெரிய நடுக்கங்களைக் கூட தைரியமாய் எதிர்கொள்ளலாம்.

ishwarya

Posts : 24602
Join date : 01/02/2013

View user profile

Back to top Go down

View previous topic View next topic Back to top


 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum