Related Posts Plugin for WordPress, Blogger...
Keywords


வலிப்பு நின்றவுடன் என்ன செய்ய வேண்டும்?

View previous topic View next topic Go down

வலிப்பு நின்றவுடன் என்ன செய்ய வேண்டும்?

Post  ishwarya on Wed May 08, 2013 2:40 pm

காற்றுக் குழாயை திறந்து சுவாசம் சீராக இருக்கிறதா என்று பார்க்கலாம்.
சுவாச மீட்பும் மார்பை அழுத்தம் செயலையும் செய்யத் தயாராக இருக்க வேண்டும்.
அவர் சீராக சுவாசித்துக் கொண்டிருந்தால் குணமடைவதற்குத் தோதான நிலையில் அவரைச் சாய்த்துப் படுக்க வைக்கவும்.
நாடித் துடிப்பு, சுவாசம் இரண்டையும் தொடர்ந்து கவனிக்கவும்.
எத்தனை நேரம் வலிப்பு நீடிக்கிறது என்று குறித்து வைத்துக் கொள்ளவும்.

கவனம்
நிலைமை மோசமாக இருந்தால் மட்டுமே அவரை வேறொரு பகுதிக்கு அழைத்துச் செல்லலாம்.
அவரது வாயில் எதையும் திணிக்கக் கூடாது.
பலவந்தப்படுத்தி அவரை அமைதிப்படுத்த முயற்சி செய்ய வேண்டாம்.

எச்சரிக்கை
கீழ்க்கண்ட முறையில் ஏதாவத நடந்தால் உடனடியாக ஆம்புலன்ஸைத் தொடர்பு கொள்ளவும்.
பத்து நிமிடங்களுக்கு மேலாக அவர் பேச்சு மூச்சின்றி இருந்தால்
ஐந்து நிமிடங்களுக்கு மேல் வலிப்பு தொடர்ந்தால்.
வலிப்பு வந்ததன் காரணத்தை அவர் உணராது போனால்.

மயக்கம்
மூளைக்குப் போய்ச் சேர வேண்டிய ரத்தம் போதிய அளவு போகாமல் போனால் மயக்கம் ஏற்படுகிறது. குறுகிய காலம் மட்டுமே இது ஏற்படும்.
மயக்கத்தால் பெரிய ஆபத்து இல்லை என்று சொல்லிவிட முடியாது. எதற்காக மயக்கம் ஏற்பட்டது என்பதை உணர முடியாத பட்சத்தில் உடனடி மருத்துவ உதவி பெற வேண்டியது அவசியம்.

எப்படிச் சமாளிக்கலாம்?
1. பின்புறமாக சாய வைக்கலாம். கால்களை உயர்த்தி விடுவது நல்லது.
2. காற்றுக் குழாயை சரிபார்க்கவும், வாந்தி வருகிறதா என்று கவனிக்கவும்.
3. சுவாசம், இருமல் போன்றவை இருக்கிறதா என்று பார்க்கவும். இல்லை என்றால் சிறிசிஸி-ஐத் தொடங்கவும். தகுந்த உதவி வரும் வரை அல்லது பாதிக்கப்பட்டவரின் நிலைமை சீராகும் வரை சிறிசிஸி -ஐத் தொடரவும்.
4. தலை மட்டத்தை விட உயரமாக காலை உயர்த்தவும். இப்படிச் செய்வதன் மூலம் ரத்த ஓட்டம் சீரடையும். இறுக்கமான உடைகளைத் தளர்த்துங்கள். ஒரு நிமிடம் அவகாசம் கொடுத்துப் பாருங்கள். விழித்துக் கொள்ளவில்லை என்றால் அவசர சிகிச்சைப் பிரிவை நாடவும்.

அதீத ரத்தப் போக்கு
பாதிக்கப்பட்டவரின் ரத்தப்போக்கை நிறுத்த முயற்சி செய்தவற்கு முன்னால் உங்கள் கைகளைச் சுத்தமாகக் கழுவிக் கொள்வது நல்லது. முடிந்தால், கையுறை அணிந்து கொள்ளுங்கள். கிருமிகள் தொற்றிக்கொள்வதைத் தவிர்க்கலாம். ஏதேனும் பாகங்கள் பிதுங்கி வெளியில் வந்து விட்டால் அவற்றை மீண்டும் உள்ளே தள்ள முயற்சிக்க வேண்டாம். கட்டு மட்டும் போட்டு வைக்கவும்.
தவிரவும், கீழ்க்கண்ட வழிமுறைகளைக் கடைபிடிக்கலாம்.
1. கீழே படுக்க வைக்கவும், உடலைவிடத் தலையைச் சற்றுத் தாழ்த்தி வைப்பது நல்லது. கால்களையும் கால்களையும் உயர்த்தி வைக்கவும். இப்படிச் செய்தால் ரத்தம் மூளைக்குள் வேகமாகப் பாய்ந்தோடுவதைத் தடுக்கலாம். எந்த இடத்திலிருந்து ரத்தம் பெருகுகிறதோ அந்த இடத்தைக் கொஞ்சம் உயர்த்தியது போல் தூக்கி வைத்தால் நல்லது.
2. கையுறை அணிந்து கொண்ட பின், காயத்திலுள்ள அழுக்குகளை நீக்கலாம், உள்ளேகுத்திக் கிடக்கும் பொருளை பலவந்தமாக இழுக்க முயலக்கூடாது. காயத்தை சுத்தப்படுத்த முயற்சிக்க வேண்டாம்.
3. ரத்தம் வரும் இடத்தை அழுத்திப் பிடிக்க வேண்டும். கட்டுப்போட்டு நிறுத்தலாம். அல்லது கையுறை அணிந்த கையால் அழுத்திப் பிடிக்கலாம்.
4. ரத்தப்போக்கு நிற்கும் வரை அழுத்திப் பிடிக்க வேண்டும்.
5. கட்டுப்போட்ட பின்னும் ரத்தப் போக்கு தொடர்ந்தால் கட்டைப் பிரிக்க முயற்சிக்க வேண்டாம்.
6. ரத்தப் போக்கு நிற்காத பட்சத்தில் குருதிக் குழாயை (ணீக்ஷீtமீக்ஷீவீமீs & ஸ்மீவீஸீs) அழுத்திப் பிடிக்கலாம். முழுங்கைக்கும் அக்குளுக்கும் இடைப்பட்ட பகுதியில் கைக்கு உண்டான குருதிக் குழாய் உள்ளது. காலுக்கான குருதிக் குழாய் முட்டிக்கும் இடுப்புக்கும் மத்தியில் உள்ளது. இவற்றை அழுத்திப் பிடிக்கலாம்.
7. ரத்தப் போக்கு நின்று விட்டதே என்பதற்காக போட்டு வைத்திருந்த கட்டைப் பிரிப்பத சரியல்ல. உடனடியாக அவரை மருத்துவமனைக்கு கொண்டு செல்ல வேண்டியது அவசியம்.

உட்புறமாக ரத்தக் கசிவு இருந்தால் அவசர சிகிச்சைப் பிரிவை அணுகுவதுதான் ஒரே வழி.
சில அறிகுறிகள் -
காது, மூக்கு, மலக்குடல், பெண்ணின் கருப்பை, வாய்க்குழாய் போன்ற பகுதிகளிலிருந்து ஏற்படும் ரத்தக் கசிவு.
இருமும்போதும், வாந்தி எடுக்கும்போது ரத்தம் வெளிப்படுதல்.
கழுத்தில், மார்பில், அடி வயிறு போன்றவற்றில் அடிபட்டால் ரத்தம் கசிதல்.
மார்பு, வயிறு, மண்டை ஓட்டை ஊடுருவி அடிபட்டால்
வயிற்றுத் தசைகள் இறுக்கமடைந்தால், சுருங்கினால்
எலும்பு முறிவு ஏற்பட்டால்
ஜீல்லிடும் தோல் பகுதி, தளர்ச்சி, சோர்வு, அதிர்ச்சி

ishwarya

Posts : 24602
Join date : 01/02/2013

View user profile

Back to top Go down

View previous topic View next topic Back to top


 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum