Related Posts Plugin for WordPress, Blogger...
Keywords


தீக்காயம்

View previous topic View next topic Go down

தீக்காயம்

Post  ishwarya on Wed May 08, 2013 2:41 pm

தீவிர காயம்
சிகிச்சை முறை
10 நிமிடங்களுக்கு ஓடும் நீரில் காயத்தைக் காண்பிக்கவும்.
ஆம்புலன்ஸைத் தொடர்பு கொள்ளவும்.
பாதிக்கப்பட்டவரைக் கீழே படுக்க வைக்கவும். அவரை சௌகரியமான நிலைக்குக் கொண்டு செல்லவும்.
பத்து நிமிடங்களுக்கு ஒரு முறை அல்லது வலி தீரும் வரை நீரில் காயத்தைக் கழுவவும்.
கடிகாரம், நகை போன்ற தோலில் ஒட்டக்கூடிய பொருள்களை உடனடியாக அகற்றி விடுங்கள்.
நல்ல சுத்தமான முறையில் காயத்தை மூடி வைக்கவும்.

சிறிய காயங்கள்.
சிகிச்சை
பத்து நிமிடங்களுக்கு ஒரு முறை அல்லது வலி தீரும் வரை நீரில் காயத்தைக் கழுவவும்.
தபால் தலை அளவை விட பெரிய அளவில் காயம் ஏற்பட்டிருந்தால், மருத்துவ உதவி பெற வேண்டியது அவசியம். பெரிய தீக்காயங்களுக்கு உடனடி மருத்துவ சிகிச்சை அத்தியாவசியம்.

துணிகளில் தீப்பற்றிக் கொண்டால் -
பதற்றப்பட்டு ஓட வேண்டாம். அப்படிச் செய்தால் தீ வேகமாகப் பரவும்.
தீக்காயம் ஏற்பட்டவரை உடனடியாகத் தரையில் படுக்க வைக்கவும்.
சம்பந்தப்பட்டவரை கனமான கோட்டாலோ, போர்வையாலோ சுற்றவும். நைலான் வகைகளை கண்டிப்பாகப் பயன்படத்தக் கூடாது.
பற்றிக்கொண்ட தீ அணையாமல் எரிந்து கொண்டிருந்தால், கீழே படுக்க வைத்து உருட்டலாம்.
அனைத்து விதமான தீக்காயங்களுக்கும் பொதுவான விதிமுறைகள்
ஆயில்மெண்ட், க்ரீம், களிம்பு வகைகளை பயன்படுத்தவே கூடாது.
பிளாஸ்திரி வகைகளை பயன்படுத்தக் கூடாது.
கொப்புளங்களை உடைக்கக் கூடாது.

பெரியவர்களுக்கு ஏற்படும் திடீர் நோய்ப்பிடிப்பு
வலிப்பு நோய்
காக்கை வலிப்பு என்று பரவலாக அழைக்கப்படும் வலிப்பு நோய் ஏற்படும்போது உடலிலுள்ள பல தசைகள் சுருங்குகின்றன. மூளையில் ஏற்படும் மின் அதிர்வுகளின் விளைவு இது. வலிப்பு ஏற்படும்போது, நினைவு தப்பிப் போகும். பாதிக்கப்பட்ட நபர் மூர்ச்சையடைந்து விடுவார்.

வலிப்பு நோய் எதனால் ஏற்படுகிறது?
தலை காயத்தினால்
மூளை பாதிக்கும் நோய்களால்
மூளையில் பிராண வாயு, குளுகோஸ் அளவு குறையும்போது
விஷம் சாப்பிடுவதால், மது அருந்துவதால்

வலிப்பு நோய் திடீர் என்று தாக்கும். தாக்குவதற்கு முன்னால் சில அறிகுறைகளைக் கண்டுகொள்ளலாம். புதிய சுவை, புதிய வாசத்தை உணர முடியும். வலிப்பு எந்த வகையில் வந்தாலும் சரி, எப்போது வந்தாலும் சரி, உடனடியாக சில விஷயங்களை நாம் செய்தாக வேண்டும். முதலில், அவர்களுக்குக் காற்றோட்டம் தேவை. அதை ஏற்படுத்தித் தர வேண்டும். பிறகு, அவரது நாடித் துடிப்பையும் சுவாசத்தையும் சரிபார்க்க வேண்டும்.சுற்றியிருக்கும் பொருள்களால் சேதம் ஏற்படுவதைத் தவிர்க்க வேண்டும்.

கண்டுபிடிப்பது எப்படி?
பொதுவான காரணிகள்
திடீரென மயக்கமடைதல்
ஆர்ச் வடிவில் பின்புறம் வளைதல்
தாக்குப்பிடிக்க முடியாமல் திணறல்

வலிப்பு ஏற்பட்டால் கீழ்க்கண்ட மாற்றங்கள் நிகழும்
சத்தம் போட்டுக் கொண்டே திடீரென்று மயக்கமடைந்து கீழே விழுதல்.
அசைவில்லாமல் இருந்தல்
சுவாசம் தடைபடுதல்
திணறல், தாடைகள் இறுகுதல், இரைச்சலுடன் கூடிய சுவாசம், உதட்டையோ நாக்கையோ கடித்தல், கட்டுப்பாட்டை இழந்து விடுவது.
சில நிமிடங்களில் மீண்டும் சகஜ நிலைக்குத் திரும்புதல், என்ன நடந்தது என்பதையே உணராமல் இருத்தல்.
சோர்வடைந்து, உடனே தூங்குதல்.

முதலுதவி செய்பவரின் பணி
காயமடையாமல் பாதுகாக்க வேண்டும்.
நினைவு தப்பிப் போனால், அருகிலிருந்து கவனித்துக் கொள்ளுதல்.
உடனடியாக மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லுதல்

சிகிச்சை
சம்பந்தப்பட்டவர் கீழே விழ நேர்ந்தால், அவரைத் தாங்கிப் பிடித்தல்.
காற்றோட்டம் ஏற்படுத்தலாம். கும்பல் கூடாமல் பார்த்துக் கொள்ளுதல்.
கூரான பொருள்கள், சூடான பானங்கள் போன்றவை அருகில் இல்லாமல் பார்த்துக் கொள்ளுதல்.
எப்போது வலிப்பு ஆரம்பித்தது என்று குறித்து வைத்துக் கொள்ளுதல்.
அவரது தலையைப் பாதுகாக்க வேண்டும். முடிந்தால் தலையணையில் அவரது தலையைச் சாய்த்து வைக்கலாம்.
கழுத்துப் பகுதியில் உள்ள இறுக்கத்தைத் தளர்த்தலாம்.

ishwarya

Posts : 24602
Join date : 01/02/2013

View user profile

Back to top Go down

View previous topic View next topic Back to top


 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum