Related Posts Plugin for WordPress, Blogger...
Keywords


கொல்லம் கடலைக்குருமா

Go down

கொல்லம் கடலைக்குருமா

Post  ishwarya on Wed May 08, 2013 2:54 pm

உலகளாவிய அளவில் கண்ணுக்குப் புலப்படாத விபரீத அரசியல் ஒன்று உண்டு. உலகின் சிறந்த உணவு, உலகின் சிறந்த விவசாயம், உலகின் சிறந்த மரபு என அனைத்தும் தங்களுக்கே உரியதென்ற மனப்பாங்கே அந்த அரசியலின் அடித்தளம். ஒரு நாடு வளமோடு திகழ்ந்தால் அது சில நாட்டாமை நாடுகளின் கண்களை உறுத்தும். அந்நாட்டின் பாரம்பரியத்தைக் குலைத்து, காலங்காலமாக கைகொள்ளும் வழிமுறைகளை களவாடி, அவற்றை தனதாக்கிக் கொள்வதற்காக சத்தமில்லாத சில யுத்தமுறைகளை அந்நாடுகள் கைகொள்ளும்.

ரசாயனங்களையும் விஷங்களையும் கொட்டினால் வழக்கத்தை விட அதிகமாக உற்பத்தி செய்யலாம், ஏற்றுமதி செய்து கணிசமாகப் பணம் பார்க்கலாம் என்று பிரசாரம் செய்து, மரபு வழி விவசாய முறைகளை குலைத்து, இந்திய விவசாயிகள் தலையில் கைவைத்து உக்கார்ந்த பிறகு, இயற்கை வழியில் விளைந்த உணவே சிறந்தது, அதை மட்டுமே இறக்குமதி செய்வோம் என்கிறார்களே... அதுதான் அந்த அரசியலின் வடிவம்.

இந்தியாவில் விளைந்த 10 ஆயிரத்துக்கும் மேற்பட்ட அரிசி ரகங்களை உதவாது என்று சொல்லி, ஹைபிரிட் ரகங்களுக்கு நம்மை பழக்கி, நம் பாரம்பரிய அரிசிகளை பிலிப்பைன்ஸுக்கும் அமெரிக்காவுக்கும் கொண்டு சென்றதும் அந்த அரசியலின் ஒரு வகைப்பாடுதான். நம்மூர் வேம்புக்கு காப்புரிமை பெற்றுக்கொள்வதும், நம்மூர் பாசுமதி அரிசியை அவர்களுடையது என்று உரிமை கொண்டாடுவதும், பல்லாயிரம் ஆண்டுகளாக நாம் மருந்தாகப் பயன்படுத்தும் மஞ்சளை தனக்கானதாக மாற்றிக் கொள்ள போராடுவதும் கூட அந்த விபரீத அரசியலின் விளைவுதான். இந்தியாவில் வழக்கொழிந்து விட்ட உணவுப் பொருட்கள் மேலை நாடுகளில் சர்வசாதாரணமாக புழக்கத்தில் உள்ளன.

நீங்களும் செய்யலாம்!
கருப்புக்
கொண்டைக்கடலை -300 கிராம்
தேங்காய் -1
சோம்பு -1 டீஸ்பூன்
பச்சை மிளகாய் -2
பெரிய வெங்காயம் -2
தக்காளி - 2
தேங்காய் எண்ணெய் -தேவையான அளவு
பட்டை -தேவையான அளவு
உப்பு -தேவையான அளவு
மஞ்சள்தூள்-சிறிதளவு
கொத்தமல்லி, கறிவேப்பிலை-சிறிதளவு.

எப்படிச் செய்வது?

கொண்டைக்கடலையை முதல்நாள் இரவே ஊறவைத்துக் கொள்ளுங்கள். மறுநாள், லேசாக உப்பு சேர்த்து அவித்துக் கொள்ளுங்கள். தேங்காயை துருவி, அதோடு பச்சைமிளகாய், பாதியளவு சோம்பு சேர்த்து அரைத்துக் கொள்ளுங்கள். வெங்காயம், தக்காளியை சிறிதாக நறுக்கிக் கொள்ளுங்கள். வாணலியை அடுப்பில் வைத்து, எண்ணெய் ஊற்றி, பட்டை, சோம்பு, கறிவேப்பிலை போட்டுத் தாளித்து, தக்காளி, வெங்காயத்தைப் போட்டு வதக்குங்கள். வெங்காயம் பொன்னிறமானதும், அரைத்து வைத்துள்ள கலவையைப் போட்டு, மஞ்சள்தூள், உப்பு சேர்த்து சிறிதளவு தண்ணீர் ஊற்றி கொதிக்க விடுங்கள். கொதி வந்ததும் அவித்து வைத்துள்ள கடலையைக் கொட்டுங்கள். ஒரு கொதி வந்ததும் இறக்கிவிடுங்கள். கொல்லம் கடலைக்குருமா ரெடி.

பழ வியாபாரி, நல்ல பழங்களை விற்பனை செய்துவிட்டு தன் தேவைக்காக அழுகல் பழங்களை எடுத்து வைத்துக் கொள்வது போல, இந்தியாவில் உற்பத்தியாகும் பொருட்களில் முதல் தரமானவை எல்லாம் வெளிநாடுகளுக்கு சென்று விடுகிறது. டீயில் கூட டஸ்ட் (கழிவு) டீதான் நாம் பயன்
படுத்துகிறோம். கொல்லம் கடலைக்குருமாவின் சுவையைப் பற்றிப் பேசும்போது, தேவையில்லாத இந்த கசப்பு ஏன் என்று கேட்கலாம்.
கொண்டைக்கடலைக்கும் காப்புரிமை கோரி அமெரிக்கா விண்ணப்பித்திருப்பது பலருக்குத் தெரியாது.

கொண்டைக்கடலையின் பூர்வீகம் தெற்காசியா. இந்தியா தவிர, பாகிஸ்தான், துருக்கி நாடுகளிலும் விளைகிறது. உடம்பின் கொழுப்பைக் குறைக்க, கொண்டைக்கடலை அருமருந்து. நுரையீரல், இதயம் தொடர்பான நோய்களையும் போக்கவல்லது. மெலிந்த உடலை குண்டாக்கும் சக்தி இதற்கு உண்டு. இதுபோன்ற மருத்துவ காரணங்களால் இதன்மீது கண் வைத்திருக்கிறது அந்நாடு.

கேரளாவின் பாரம்பரிய உணவில் கொண்டைக்கடலை பிரதானமானது. பலவிதங்களில் அதைப் பயன்படுத்துகிறார்கள். புட்டு, ஆப்பத்துக்கு சைடிஷாக கடலைக்குருமா பயன்படுத்துகிறார்கள். பிற பகுதிகளில் வெள்ளைக் கொண்டைக்கடலை. கொல்லத்தில் மட்டும் கருப்புக்கடலை உபயோகித்து செய்கிறார்கள். சுவையிலும் சத்திலும் கொல்லம் கடலைக்குருமாவே முன்நிற்கிறது. கேரளத்தின் அடையாளங்களில் ஒன்றான இது ரசனையான சைடிஷ்.

ishwarya

Posts : 24602
Join date : 01/02/2013

View user profile

Back to top Go down

Back to top


 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum