Related Posts Plugin for WordPress, Blogger...
Keywords


கேரளாவின் பாரம்பரிய சக்க புழுக்கு

View previous topic View next topic Go down

கேரளாவின் பாரம்பரிய சக்க புழுக்கு

Post  ishwarya on Wed May 08, 2013 2:55 pm

சக்க புழுக்கு கேரளாவின் பாரம்பரிய துணை உணவுகளில் ஒன்று. புழுக்கு என்றால் கூட்டு. சக்க புழுக்கு என்பது பலாக்காயில் செய்யப்படும் கூட்டு. ‘ஓண சத்ய’வில் மட்டுமின்றி, விஷு போன்ற பிற பண்டிகைக் காலங்களிலும், திருமண விருந்துகளில் கட்டாயம் இடம்பெறும். பலா இந்தியாவின் பொதுத்தன்மை மிகுந்த மர வகை. ஆனால், பல பகுதிகளில் பலாக்காயை சமைக்கும் வழக்கம் இல்லை. பழத்தை மட்டுமே பயன்படுத்துவர். தென்னிந்தியாவிலோ இலை, காய், விதை, சக்கை, நரம்பு என பலாவின் பல பாகங்களையும் உணவாக்குவதுண்டு.

பலா இலையை தொன்னையாகத் தைத்து, அதில் மாவு ஊற்றி அவித்தெடுக்கும் கொட்டே கடுபு கர்நாடகத்தின் பிரதான பண்டிகை பட்சணம். தமிழகத்தில் பலாக்காயை ஒவ்வொரு வட்டாரத்திலும் ஒவ்வொரு விதமாகச் சமைக்கிறார்கள். துவட்டல், பிரட்டல், பொரியல், வதக்கல் என ஏகப்பட்ட சூட்சுமங்கள் செய்கிறார்கள். பலாக்காய் அவியல் கொங்கு நாட்டு ஸ்பெஷல். செட்டி நாட்டில் பொடிமாஸ் ஃபேமஸ். பலாக்காயை குழைய வேக வைத்து, அம்மியில் வைத்து நன்கு தட்டி, உதிர்த்து, கடுகு, உளுந்து, வெங்காயம், காய்ந்தமிளகாய் போட்டு தாளித்து இறக்கினால் பொடிமாஸ். தஞ்சாவூர் பக்கம், பெரிது பெரிதாக பலாக்காயை வெட்டிப்போட்டு மணக்க, மணக்க குருமா செய்வார்கள்.

கேரளாவில் நேந்திரன் பழம் போலவே பலாவும். அன்றாட உணவில் ஏதாவது ஒரு விதத்தில் பலா இடம்பெற்று விடும். சீசனே பொய்த்தாலும் கவலைப்பட மாட்டார்கள். தயாராக வைத்திருப்பார்கள், சக்கை வற்றல்! பழுக்கும் நிலையில் இருக்கும் தேறிய காயைப் பிளந்து, அதன் சுளைகளை பெயர்த்து எடுத்து நீளநீள துண்டுகளாக, சிறிய அளவில் வெட்டி, லேசாக உப்பு சேர்த்து தேங்காய் எண்ணெயில் பொரித்து வைத்துக்கொள்வார்கள். பதம் மாறாமல் வைத்திருந்தால் பல காலம் ருசித்துச் சாப்பிடலாம்.

சக்க புழுக்குநீங்களும் செய்யலாம்!

என்னென்ன தேவை?
நடுத்தரமான பலாக்காய் -1
தேங்காய்ப்பூ -2 கப்
மிளகாய்த்தூள் -முக்கால் டீஸ்பூன்
பச்சை மிளகாய் -2
பூண்டு - 5 பல்
சீரகம்-கால் டீஸ்பூன்
மஞ்சள் தூள்-கால் டீஸ்பூன்
கடுகு, உளுந்து-தாளிக்கத் தேவையான அளவு
தேங்காய் எண்ணெய் -2 டேபிள்ஸ்பூன்
கறிவேப்பிலை, உப்பு -தேவையான அளவு.

எப்படிச் செய்வது?
பலாக்காயை தோல் நீக்கி, சிறுசிறு துண்டுகளாக வெட்டி, உப்பு சேர்த்து வேக வைத்துக் கொள்ளுங்கள். தேங்காய், பூண்டு, சீரகம், பச்சை மிளகாயையும் சேர்த்து நடுத்தரப் பதத்தில் அரைத்துக் கொள்ளுங்கள். வாணலியில் எண்ணெய் ஊற்றி, கடுகு, உளுந்து, கறிவேப்பிலை தாளித்து, வெந்த பலாக்காயோடு மஞ்சள்தூள், மிளகாய்த்தூள் போட்டு கிளறுங்கள். பின் அரைத்து வைத்துள்ள மசாலாவைப் போட்டு லேசாக தண்ணீர் ஊற்றி வேக வையுங்கள். வாசனை பரவியதும் இறக்கினால் சக்க புழுக்கு ரெடி!

கனிந்த பழச்சுளைகளை நன்கு வேகவைத்து, கருப்பட்டி அல்லது நாட்டு வெல்லம் சேர்த்து பஞ்சாமிர்த பதத்தில் இருப்பு வைத்துக் கொள்வார்கள். இதற்குப் பெயர் சக்கை வரட்டி. பலாப்பழ பாயசத்துக்கு இந்த உலகத்தில் எந்த இனிப்பும் இணையில்லை! பலாக்கொட்டை இரும்புச்சத்து மிகுந்தது. அதைக் கொண்டும் சாம்பார், கூட்டு, பொரியல், பொடிமாஸ் செய்கிறார்கள். மென்மையான இனிப்புச்சுவை கொண்ட இந்தக் கொட்டையை வேகவைத்து மாவாக்கி மலபார் பகுதிகளில் பக்கோடாவும் செய்கிறார்கள்.

பலாக் கொட்டைகளைச் சுட்டுத் தின்பதும் சுகமே. பலாவைக் கொண்டு கேரளாவில் செய்யப்படும் அயிட்டங்களில் சக்க புழுக்கு மிகச்சுவையான, வாசனையான துணைக்கறி. பொதுவாக, பலாக்காயை சமைக்கும்போது சில விஷயங்களை கவனத்தில் கொள்ளவேண்டும். காயை வேகவைக்கும் நீரை சமையலுக்கு பயன்படுத்தக்கூடாது. புளிப்பும் காரமும் சற்று மிகுதியாக பயன்படுத்திக் கொள்வது நல்லது.

ishwarya

Posts : 24602
Join date : 01/02/2013

View user profile

Back to top Go down

View previous topic View next topic Back to top


 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum