Related Posts Plugin for WordPress, Blogger...
Keywords


இயற்கை உணவிலும் ரசாயனமா?

View previous topic View next topic Go down

இயற்கை உணவிலும் ரசாயனமா?

Post  ishwarya on Wed May 08, 2013 5:05 pm

யாகும் 10 கோடி டன் காய்கறிகளை, பூச்சி தாக்குதலில் இருந்து பாதுகாக்க,6,000 டன் பூச்சிக் கொல்லி மருந்து பயன்படுத்தப்படுகிறது.

* உணவு வகைகளை, பூச்சி தாக்குதலில் இருந்து பாதுகாக்க, குறிப்பிட்ட அளவு பூச்சிக் கொல்லி மருந்துகளையும் ரசாயனப் பொருள்களையும் பயன்படுத்திக் கொள்ள உணவு கட்டுப்பாட்டு ஆணையம் அனுமதித்துள்ளது. ஆனால், நடைமுறையில் அளவுக்கு அதிகமாக ரசாயனம் சேர்க்கப்படுகிறது.

* மத்திய வேளாண் அமைச்சகம், 2009ல் நடத்திய ஆய்வில், காய்கறி, பழங்களில் அனுமதிக்கப்பட்ட அளவை விட அதிகமாக இருப்பது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

* 60 கிலோ எடையுள்ள ஒருவரது உடலில், நாள்தோறும் 0.48 மில்லி கிராம் வரை பூச்சிக் கொல்லி மருந்து சேர்ந்தால் பாதகம் இல்லை என அளவிடப்பட்டுள்ளது.

* தட்டுப்பாடு இல்லாமல், உணவுப் பொருள்கள் கிடைக்க வேண்டுமானால், பூச்சிகளிலிருந்து விளை பொருள்களை பாதுகாப்பது அவசியம்தான். இதற்காக, பூச்சிக் கொல்லி மருந்துகள் உலகம் முழுவதும் பயன்படுத்தப்பட்டு வருகின்றன.

* ஆனால், இந்தியாவில் தான், ஒரு வரைமுறை இல்லாமல் அளவுக்கு அதிகமாக பயன்படுத்தப்படுகிறது. இதைக் கண்காணிக்க அமைப்புகள் இல்லை.

* உயிர் வாழ உணவு அவசியம், ஆனால், அந்த உணவே உயிரைப் பறிக்கும் எமனாக மாறுவதை மத்திய, மாநில அரசுகள் அனுமதிக்கக் கூடாது.

* பழக் கடைகளில் வைக்கப்பட்டிருக்கும் ஆப்பிள் பழங்கள், பார்க்க, “பளபள’ என, அழகாக இருக்கும். ஆனால், அதன் மேலே பூசப்பட்டிருக்கும் மெழுகின் ஆபத்து பலருக்கு தெரியாது.

* பிரேசில் நாட்டில் உள்ள ஒரு வகை பனை மரத்திலிருந்து எடுக்கப்படும் மெழுகை மட்டுமே பழங்கள், காய்கறிகளில் பூசுவதற்கு, உலக சுகாதார மையம் அனுமதித்துள்ளது.

* இந்த மெழுகுக்கு பதிலாக, செயற்கையாக தயாரிக்கப்படும் ரசாயன மெழுகை பயன்படுத்துகின்றனர். இது, உடல் நலத்துக்கு தீங்கு விளைவிக்கக் கூடியது.

கடைகளில் வாங்கும் பழங்கள், காய்கறிகள் பார்ப்பதற்கு அழகாக இருக்கிறதா என்று பார்த்து வாங்காதீர்கள்.

ishwarya

Posts : 24602
Join date : 01/02/2013

View user profile

Back to top Go down

View previous topic View next topic Back to top


 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum