Related Posts Plugin for WordPress, Blogger...
Keywords


கொளுத்தும் கோடைக்கு‘கூல்’டிப்ஸ்

Go down

கொளுத்தும் கோடைக்கு‘கூல்’டிப்ஸ்

Post  ishwarya on Thu May 09, 2013 1:33 pm

கொளுத்தும் வெயிலுடன் கோடை நெருங்கி கொண்டிருக்கிறது. இப்போதே வெயிலின் உக்கிரம் தொடங்கி விட்டது. ஏப்ரல், மே மாதங்களில் இன்னும் அதிகமாகும். வியர்வை அதிகம் வெளியேறுவதால் உடலின் சக்திகள் உறிஞ்சப்பட்டு விடுவதால், உடல் எளிதில் சோர்வடையும். வெப்பத்தால் தோல் பாதிப்பு, சூட்டால் வருகிற தொல்லைகள் தலை தூக்கி பாடாய் படுத்தும். காட்டன் உடை, சீரகத் தண்ணீர், நோ டென்ஷன், அப்பப்போ ஜூஸ் போன்றவற்றை கடைபிடித்தால் போதும். கோடையிலும் எந்த தொல்லையுமின்றி ஜொலிக்கலாம் என்கிறார் டாக்டர் சசிகுமார். அவர் கூறுவது:
நம் உடலின் உச்சி முதல் உள்ளங்கால் வரை 3 மில்லியன் வியர்வை சுரப்பிகள் எல்லா காலத்திலும் வேலை செய்கின்றன. வெளியே இருக்கும் தட்ப வெப்பத்துக்கு ஏற்ப நம் உடலின் வெப்பத்தை தகவமைத்துக் கொள்ளவே இந்த சிஸ்டம். சாதாரணமாக 600 மில்லி முதல் 800 மில்லி வரை வியர்வை வெளியேறுகிறது. உள்ளங்கால், உள்ளங்கை பகுதியில் சிறிய அளவில் வியர்வை சுரப்பிகள் உள்ளன. தலை முடிப்பகுதி, முகம், நெற்றி, கழுத்து, முதுகு, அக்குள் மற்றும் உறுப்பு பகுதிகளில் பெரிய அளவிலான வியர்வை சுரப்பிகள் செயல்படுகின்றன.
வியர்வையில் உப்பு சத்து, சர்க்கரை, அமினோ அமிலம், சோடியம், பொட்டாசியம் போன்ற தாதுக்கள் வெளியேறுகின்றன. ஆண்களுக்கு 28 டிகிரி சென்டிகிரேடு வெப்பம் இருக்கும் பொது வியர்வை வெளிப்படும். பெண்களுக்கு 31 டிகிரி சென்டிகிரேடு வெப்பத்தில் வியர்வை வரும். உழைக்கும் போதும், உடற்பயிற்சி, பய உணர்வு, மனரீதியான பதற்றம் இருக்கும் போதும் வெளிப்படும்.
வழக்கமான வியர்வை நாற்றம் மெல்லியதாக இருக்கும். அப்படி இல்லாமல் முட்டை, வெங்காயம், கற்றாழை, மீன் போன்ற நாற்றம் உடல் வியர்வையில் இருந்து வெளிப்பட்டால் உடலில் ஏதோ பிரச்னை இருக்கிறது என்பதை அறிந்து கொள்ளலாம். இதுபோன்ற பிரச்னை உள்ளவர்கள் உடனடியாக டாக்டரை அணுக வேண்டியது அவசியம்.
வெயில் காலத்தில் காட்டன் தவிர மற்ற உடைகளை அணியும் போது வியர்வை உடலில் தேங்கி வியர்க்குருவை ஏற்படுத்துகிறது. வெயில் காலத்தில் பருத்தி உடைகளை அணிவதன் மூலம் இதை தடுக்கலாம். வியர்வை வெளியேறும் இடங்களில் பவுடரை பயன்படுத்துவதன் மூலம் அரிப்பை தடுக்க முடியும். சுத்தமான குளிர்ந்த நீரில் குளிப்பதன் மூலம் இதற்கு தீர்வு காணலாம்.
வெயில் காலத்தில் அதிகளவு வியர்வை வெளியேறுவதால், உடலுக்கு அதிக தண்ணீர் தேவைப்படும். அப்போது தண்ணீர் குடிக்காமல் விட்டால் கிட்னியில் கல், சிறுநீர் வெளியேறுவதில் பிரச்னை, தோல் உலர்ந்து போதல் போன்ற பிரச்னைகள் தோன்றும். அதிகம் தண்ணீர் குடிப்பது, பழங்கள் மற்றும் பழச்சாறுகள் எடுத்து கொள்வது ஆகியவற்றின் மூலம் தோல் பளபளப்பாக இருப்பதுடன் கோடையால் உடலில் உருவாகும் பிரச்னைகளில் இருந்தும் தப்பிக்கலாம். குறைவாக தண்ணீர் குடிக்கும் குழந்தைகளுக்கு Ôசம்மர் டயரியாÕ வரவும் வாய்ப்புள்ளது. எனவே கோடை செய்யும் அவஸ்தைகளில் இருந்து தப்பிக்க ஒரே மருந்து தண்ணீர் தான். இவ்வாறு கூறுகிறார் டாக்டர் சசிக்குமார்.
பாதுகாப்பு முறைகள்
வெயில் காலத்தில் தலையில் அதிக வியர்வை மற்றும் அழுக்கு படிவதன் காரணமாக பொடுகு தொல்லைகள் ஏற்படும். இதை தவிர்க்க அடிக்கடி தலைக்கு குளித்து சுத்தமாக வைத்து கொள்ளவும். முகம் மற்றும் தோல்பகுதியில் படியும் புழுதி, அழுக்கால் முகப்பரு, கரும்புள்ளி ஆகியவை ஏற்படலாம். சூரியனின் புற ஊதா கதிர்கள் நேரடியாக படுவதால் தோல் பிரச்னைகள் உருவாகும். இவற்றைத் தவிர்க்க சன்ஸ்கிரீன் லோஷன் உதவும். உதடுகளில் ஏற்படும் தோல் வறட்சியை தடுக்க பழத்தால் உருவாக்கப்பட்ட லிப் கிரீம்கள் பயன்படுத்தலாம். மேலும் நேரம் கிடைக்கும் போது முகத்தை குளிர்ந்த தண்ணீரால் கழுவலாம். அஜீரணம் மற்றும் வயிற்று வலி, சிறுநீர் கழிப்பதில் பிரச்னை இருந்தால் தண்ணீரில் சீரகம் போட்டு குடிக்கலாம். சீரகம் மற்றும் வெந்தயம் சிறிது தண்ணீரில் சேர்த்து கொதிக்க வைத்து வடிகட்டி மிதமான சூட்டில் குடிப்பதன் மூலம் இந்த மூன்று பிரச்னைகளுக்கும் உடனடி தீர்வு கிடைக்கும்

ishwarya

Posts : 24602
Join date : 01/02/2013

View user profile

Back to top Go down

Back to top


 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum