Related Posts Plugin for WordPress, Blogger...
Keywords


2 முறை பிரஷ்... நாள் முழுக்க பிரெஷ்

View previous topic View next topic Go down

2 முறை பிரஷ்... நாள் முழுக்க பிரெஷ்

Post  ishwarya on Thu May 09, 2013 1:37 pm

பொலிவான முகம், நிறத்துக்கு ஏற்ற உடை, ஸ்டைலான பேச்சு என பார்த்த நொடியில் சென்டம் மார்க் போட வேண்டும் என்ற எதிர்பார்ப்பு ஒவ்வொருத்தரிடமும் இருக்கும். இவர்களில் 50 சதவீதத்துக்கும் அதிகமானோர் புற அழகில் செலுத்தும் கவனத்தை அகத்தில் கோட்டை விடுவது அபத்தம். இவர்கள் வாயில் இருந்து வீசும் துர்நாற்றம் சென்டம் மார்க்கை ஜீரோ நிலைக்கு மாற்றி விடும். எல்லா விஷயத்துக்கும் மற்றவரிடம் பேசியாக வேண் டிய சூழலில் இருப்பதால் வாயை கவனிப்பது முக்கியம் என்கிறார் ஈறு அறுவை சிகிச்சை நிபுணர் அருண்குமார் பிரசாத்.

பல் பிரச்னைகள் எதுவும் பரம்ப ரைப் பிரச்னை கிடையாது. வாய் துர்நாற்றம் பிரச்னைக்கு முழுக்க முழுக்க அவரவரே காரணம். பல் மற்றும் ஈறுகளில் படியும் அழுக்கின் காரணமாகத் தான் பல் சொத்தை மற்றும் வாய் துர்நாற்றம் போன்ற பிரச்னைகள் உருவாகிறது.

பற்களில் ஆரம்பத்தில் சிறு கரும்புள்ளி போல அழுக்கு படியும். இது முதலில் சாப்ட் நேச்சராக இருக்கும். இதனை சரிவர சுத்தம் செய்யாமல் விடும்போது கடினமான அழுக்காக மாறி விடும். இதனை பல் துலக்குவதன் மூலம் சரி செய்ய முடியாது. பல்லில் படிந்த அழுக்கை அப்படியே விட்டு விட்டால், அந்த கரும்புள்ளி பெரிதாகிவிடும். சாப் பிடும் போது கூசும். அந்த இடத்தில் உணவுத்துகள்கள் மாட்டிக் கொண்டு அடிக்கடி இம்சைப் படுத்தும். இதன் எல்லை தான் பல் வலி. சிறிய அள விலான அழுக்கு, பல்வலி எனும் பெரிய பிரச்னையாகும் வரை கண்டு கொள்ளாமல் இருப்பது தான் நாம் செய்யும் மிகப்பெரிய தவறு. சிறிய புள்ளி உருவாகும் போதே கவ னித்து அடைத்து விடுவது நல்லது. இதே அழுக்கு ஈறுகளில் படிவதன் அடையாளம் தான் பல்லில் இருந்து ரத்தம் வடிவது. ஈறு பிரச்னையை கவனிக்காமல் விட்டால் சீழ் கட்டி கள் உருவாகி வயிற்றையும் தாக்க வாய்ப்புள்ளது.
வாய் நாற்றத்துக்கு இன்னொரு காரணம் குடல் புண் மற்றும் குடல் புழுக்கள். வாயை சுத்தமாக வைத்துக் கொள்ளாவிட்டாலும் இந்த சங்கடத்தையும் சகித்துக் கொள்ள வேண்டும். எனவே வாய் நாற்றம் உள்ளவர்கள் டாக்டரை அணுகி அதற்கான கார ணத்தை கண்டறியுங்கள். வயிற்றில் பிரச்னை இருந்தால் அதை சரி செய்வதன் மூலம் மட்டுமே இப்பிரச்னைக்கு தீர்வு காண முடியும், என்கி றார் ஈறு அறுவை சிகிச்சை நிபுணர் டாக்டர் அருண்குமார் பிரசாத்.

பாதுகாப்பு முறை:

தினமும் கட்டாயம் 2 முறை பல் துலக்கவும். பல் துலக்க பயன்படுத்தும் பிரஷ்சை 2 மாதங்களுக்கு ஒரு முறை மாற்றவும். அனைவருக்குமே சாப்ட் வகை பிரஷ்கள் ஏற்றதாக இருக்கும். பல் சொத்தை அல்லது பல் பிரச்னை என்றவுடன் குழந்தைகள் சாக்லேட் சாப்பிட தடா போடுகிறோம். ஆனால் அப்படி தடை செய்ய தேவையில்லை. சாப்பிடும் போது பல்லில் ஒட்டிக் கொள்ளாத சாக்லேட் வகைகளை அனுமதிக்கலாம்.

பற்களில் சாக்லேட் ஒட்டினால் உடனடியாக வாய் கொப்பளித்து சுத்தம் செய்து கொள்ள குழந்தைகளை பழக்க வேண்டும். 14 வயது வரை பற்கள் விழுந்தாலும் மீண்டும் முளைக்க வாய்ப்புள்ளது. இந்த சமயத்தில் பல் சொத்தை ஏற்பட்டாலும் சிலர் கண்டுகொள்வதில்லை. பால் பல்லில் சொத்தை ஏற்பட்டு அந்த இடத்தில் உள்ள பல் விழுந்து விடும்போது புதிய பல் முளைப்பதிலும் சிக்கலை ஏற்படுத்தும்.

பற்களில் சொத்தை எந்த வயதில் ஏற்பட்டாலும் உடனடியாக சிகிச்சை எடுக்க வேண்டியது அவசியம். வலியின்றி விரைவில் குணமாகக் கூடிய நவீன லேசர் சிகிச்சைகள் தற் போது உள்ளன. அதேபோல் பல் மற் றும் ஈறு பகுதியில் அழுக்கு படிவது தெரிந்தால் சாப்டாக இருக்கும் போதே சரி செய்ய வேண்டியது அவசியம். அதேபோல் வாய் நாற்றத்தை தவிர்க்கவும் பல்வேறு மருத்துவ சிகிச்சைகள் உள்ளன. எனவே காலை முதல் மாலை வரை பிரஷ்ஷாக உணர வாயை கவனிக்க வேண்டியதும் அவசியம் என்கிறார் டாக்டர் அருண்குமார் பிரசாத்.

ishwarya

Posts : 24602
Join date : 01/02/2013

View user profile

Back to top Go down

View previous topic View next topic Back to top


 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum