Related Posts Plugin for WordPress, Blogger...
Keywords


10 மே 2013 தின பலன்

View previous topic View next topic Go down

10 மே 2013 தின பலன்

Post  ishwarya on Fri May 10, 2013 12:12 pm

மேஷம்
மாலை 3.15 மணி வரை ராசிக்குள் சந்திரன் தொடர்வதால் திட்டமிடாத செலவுகளும், பயணங்களும் குறுக்கிட்டாலும் சாமர்த்தியமாக சமாளிப்பீர்கள். சொந்த-பந்தங்களால் அன்புத் தொல்லைகள் உண்டு. வியாபாரத்தில் வேலையாட்களின் ஒத்துழைப்பு சுமாராக இருக்கும். உத்தியோகத்தில் பணிகளை போராடி முடிக்க வேண்டி வரும். மாலைப் பொழுதிலிருந்து தடைகள் உடைப்படும் நாள். அதிர்ஷ்ட எண் : 7 அதிர்ஷ்ட நிறங்கள் : மயில்நீலம், பிங்க்

ரிஷபம்
குடும்பத்தினரை அனுசரித்துப் போங்கள். முக்கிய கோப்புகளை கையாளும் போது அலட்சியம் வேண்டாம். சகோதர வகையில் மனத்தாங்கல் வரும். தவிர்க்க முடியாத செலவுகள் அதிகரிக்கும். வியாபாரத்தில் சுமாரான லாபம் கிட்டும். உத்தியோகத்தில் மறைமுகப் பிரச்னைகள் வந்துச் செல்லும். மாலை 3.15 மணி முதல் ராசிக்குள் சந்திரன் நுழைவதால் எதிலும் நிதானித்து செயல்படப்பாருங்கள். அதிர்ஷ்ட எண் : 5 அதிர்ஷ்ட நிறங்கள் : ஆலிவ்பச்சை, ரோஸ்

மிதுனம்
இன்றையதினம் மனதில் பட்டதை பளிச்சென்று பேசி அனைவரையும் ஆச்சர்யப் படுத்துவீர்கள். கணவன்-மனைவிக் குள் அன்யோன்யம் பிறக்கும். ஆடம்பரச்செலவுகளை குறைப்பீர்கள். ஆன்மீகத்தில் ஈடுபாடு அதிகரிக்கும். வியாபாரத்தில் மகிழ்ச்சி தங்கும். பழைய சரக்குகளை புது யுக்தியால் விற்றுத்தீர்ப்பீர்கள். வெளிவட்டாரத்தொடர்பு அதிகரிக்கும். வாகனத்தை சீர்செய்வீர்கள். அதிர்ஷ்ட எண் : 2 அதிர்ஷ்ட நிறங்கள் : இளஞ்சிவப்பு, க்ரீம்வெள்ளை

கடகம்
குடும்பத்தினருடன் மனம் விட்டுப்பேசுவீர்கள். பிள்ளைகளின் உடல் நிலை சீராக இருக்கும். காசுபணம் தேவையான அளவு இருக்கும். சகோதர வகையில் உதவிகள் கிடைக்கும். உத்தியோகத்தில் பணிகளை விரைந்து முடிப்பீர்கள். வெளிவட்டாரத்தில் மதிக்கப்படுவிர்கள். குலதெய்வப் பிராத்தனை களை நிறைவேற்றுவீர்கள். அக்கம்-பக்கம் வீட்டாரின் அன்புத்தொல்லைகள் விலகும். அதிர்ஷ்ட எண் : 4 அதிர்ஷ்ட நிறங்கள் : அடர்சிவப்பு, கிரே

சிம்மம்
அடிமனதில் இருந்த பயம் விலகும். துணிச்சலுடன் சில முடிவுகளை எடுப்பீர்கள். அலைச்சல் தந்த வேலைகளை உடனே முடிப்பீர்கள். கணவன் – மனைவிக்குள் அனுசரித்து போவீர்கள். பணவரவு திருப்தி தரும். உடல் நிலை சீராகும். வெளிவட்டாரம் மகிழ்ச்சி தரும். ஆடம்பரச் செலவுகளை குறைப்பீர்கள். வியாபாரத்தில் மறைமுகப் போட்டிகளை வெல்வீர்கள். வாகனப்பழுது நீங்கும். அதிர்ஷ்ட எண் : 1 அதிர்ஷ்ட நிறங்கள் : ரோஸ், வைலெட்

கன்னி
மாலை 3. 15 மணி வரை சந்திராஷ்டமம் நீடிப்பதால் உணர்ச்சிவசப்பட்டு அவசர முடிவுகள் எடுக்க வேண்டாம். பிள்ளைகளின் வருங்காலம் குறித்து யோசிப்பீர்கள். சிலவற்றிற்கு உங்கள் அவசர முடிவுகள் தான் காரணம் என்பதை உணர்வீர்கள். வியாபாரத்தில் போட்டிகளை சமாளிப்பீர்கள். உத்தியோகத்தில் விமர்சனங்களை ஏற்றுக் கொள்வது நல்லது. மாலைப் பொழுதிலிருந்து எதிர்பார்ப்புகள் தடையின்றி முடியும் நாள். அதிர்ஷ்ட எண் : 2 அதிர்ஷ்ட நிறங்கள் : ஆரஞ்சு, ஊதா

துலாம்
குடும்பத்தில் ஆரோக்கியமான விவாதங்கள் வந்துப் போகும். வெளிவட்டாரத்தில் மதிக்கப்படுவீர்கள். மனைவிவழியில் ஒத்துழைப்பு அதிகரிக்கும். விலை உயர்ந்தப் பொருட்கள் வாங்குவீர்கள். புது ஏஜென்சி எடுப்பீர்கள். வியாபாரத்தில் சில தந்திரங்களை கற்றுக் கொள்வீர்கள். அலுவலகத்தில் மரியாதைக் கூடும். மாலை 3. 15 மணி முதல் சந்திராஷ்டமம் தொடங்குவதால் எதிலும் முன்யோசனையுடன் செயல்படப்பாருங்கள். அதிர்ஷ்ட எண் : 6 அதிர்ஷ்ட நிறங்கள் : இளஞ்சிவப்பு, பிங்க்

விருச்சிகம்
அதிரடி திட்டங்களை தீட்டுவீர்கள். பணவரவு திருப்திகரமாக இருக்கும். உங்களை தேடிவந்து சிலர் உதவி கேட்பார்கள். வியாபாரத்தில் மகிழ்ச்சி தங்கும். பிள்ளைகளின் ஆசைகளை பூர்த்தி செய்வீர்கள். ஆன்மீகவாதிகளின் சந்திப்பு நிகழும். உத்தியோகத்தில் மதிக்கப்படுவீர்கள். சக ஊழியர்களின் ஆதரவு கிட்டும். வெளியூர் பயணங்களால் ஆதாயம் உண்டு. அதிர்ஷ்ட எண் : 8 அதிர்ஷ்ட நிறங்கள் : ப்ரவுன், வெளிர் நீலம்

தனுசு
முகப்பொலிவு கூடும். அதிகாரப்பூர்வமாக செயல்பட்டு சில வேலைகளை முடிப்பீர்கள். குடும்பத்தில் கலகலப்பான சூழல் ஏற்படும். பிள்ளைகளால் பெருமையடைவீர்கள். ஆன்மீகத்தில் ஈடுபாடு அதிகரிக்கும். உத்தியோகத்தில் மேலதிகாரியின் பாராட்டை பெறுவீர்கள். சக ஊழியர்களின் ஆதரவு கிட்டும். ஆடம்பரச் செலவுகளை தவிர்ப்பீர்கள். உடல் ஆரோக்யம் திருப்திகரமாக இருக்கும். அதிர்ஷ்ட எண் : 7 அதிர்ஷ்ட நிறங்கள் : கிரே, இளஞ்சிவப்பு

மகரம்
இன்றையதினம் பளிச்சென்று பேசி எல்லோரையும் கவருவீர்கள். கணவன்-மனைவிக்குள் அன்யோன்யம் பிறக்கும். வருங்காலத்திற்கான முக்கிய முடிவுகளை எடுப்பீர்கள். உத்தியோகத்தில் சகஊழியர்களின் அதரவு கிட்டும். பிரபலங்களின் சந்திப்பு நிகழும். அரசுக் காரியங்களில் அனுகூலமான நிலைக் காணப்படும். தாய்வழி உறவினர்களால் இருந்துவந்த மனக்கசப்புகள் விலகும். அதிர்ஷ்ட எண் : 3 அதிர்ஷ்ட நிறங்கள் : ப்ரவுன், கிளிப்பச்சை

கும்பம்
இன்றையதினம் தைரியமான முடிவுகளை எடுத்து வெற்றி காண்பீர்கள். கணவன்-மனைவிக்குள் அன்யோன்யம் பிறக்கும். வெளிவட்டாரத்தில் மதிக்கப்படுவீர்கள். உத்தியோகத்தில் சக ஊழியர்களுக்கு மத்தியில் மதிக்கப்படுவீர்கள். ஆடம்பரச் செலவுகளை குறைப்பீர்கள். சகோதரவகையில் மகிழ்ச்சி தங்கும். அம்மாவின் உடல் நிலை சீராகும். உறவினர்கள், நண்பர்களின் சந்திப்பு நிகழும். அதிர்ஷ்ட எண் : 9 அதிர்ஷ்ட நிறங்கள் : சில்வர் கிரே, ஊதா

மீனம்
இன்றையதினம் மனக்குழப்பங்கள் விலகும். வெளியூரிலிருந்து உறவினர்கள், நண்பர்களின் வருகையுண்டு. குடும்பத்தினரின் எண்ணங்களை பூர்த்தி செய்வீர்கள். கன்னிப்பெண்களுக்கு உடல்நிலை சீராகும். உத்தியோகத்தில் வேலைபளு குறையும். எதிர்பார்த்த இடத்திலிருந்து உதவி கிடைக்கும். புண்ணிய ஸ்தலங்கள் சென்று வருவீர்கள். அரசாங்க வேலைகள் சுமுகமாக முடியும். அதிர்ஷ்ட எண் : 5 அதிர்ஷ்ட நிறங்கள் : மஞ்சள், வெளீர்நீலம்

ishwarya

Posts : 24602
Join date : 01/02/2013

View user profile

Back to top Go down

View previous topic View next topic Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum