Related Posts Plugin for WordPress, Blogger...

வயிற்றின் நண்பன் தேன்

View previous topic View next topic Go down

வயிற்றின் நண்பன் தேன்

Post  ishwarya on Fri May 10, 2013 2:13 pm

இயற்கை அளித்த அருங்கொடை தேன். குழந்தைகள் இருக்கும் எல்லா வீடுகளிலும் தேனை வைத்திருப்பது அவசியம். 70 வகையான வைட்டமின் சத்துகள் இதில் அடங்கியுள்ளன. தேனில் உள்ள சத்துகள் உடலில் உள்ள ஜீரண பாதையில் சுலபமாக கிரகிக்கும். தேன் ஏழு வகைப்படும். ஆனால் ஒரு தேனீ எந்த செடியில் இருந்து தேனை சேகரிக்கிறதோ, அதன் மருத்துவ குணத்தை பெற்றுவிடுகிறது. கொம்பு தேன், மலைத்தேன், மரப்பொந்து தேன், மலைத்தேன், புற்றுத்தேன், புதிய தேன், பழைய தேன் என ஏழு வகை உள்ளன.

ஆனால், இவற்றில் மலையில் உள்ள மரம் செடிகளில் இருந்து சேரிக்கப்படும் தேனில் மூலிகை மருத்துவ குணம் சேர்ந்து இருப்பதால் மருந்து பொருட்களுடன் சேர்ந்து உண்பதற்கு ஏற்றது. பித்தம், வாந்தி, கபம் சம்பந்தமான நோய்கள் வாயுத்தொல்லை, ரத்தத்தில் கலந்துள்ள விஷ அணுக்களை நீக்கி சுத்தம் செய்யக்கூடிய சக்தி தேனுக்கு உண்டு. பொதுவாக தேனுடன் மருந்துகளை கலந்து கொடுப்பதால் ஜீரண பாதையில் வெகு விரைவில் மருந்து உறிஞ்சப்பட்டு விடும். ரத்த ஓட்டத்தில் மருந்து விரைவில் செயல்படும்.

மருந்துகளில் வீரியம் அதிகமாக இருந்தால், தேனை கலந்து சாப்பிடும் போது குடல்களுக்கு ஏற்படும் பின்விளைவுகளை தடுத்து நிறுத்திவிடும். தேன் சேர்த்து தயாரிக்கும் உணவுகள் மருந்து, நீண்ட நாள் கெடுவதில்லை. தேனில் சர்க்கரை சத்து அதிகமாக இருப்பதால் கடும் உழைப்பாளிகள், விளையாட்டு போட்டிகளில் ஈடுபடுவோர் அவ்வப்போது தேன் கலந்த பானம் பருகலாம். இதனால், உடலில் ஏற்படும் களைப்பு நீங்கும். தேனில் உள்ள குளுக்கோஸ் சத்து சிறிய ரத்த நாளங்களை சீராக விரிவடைய செய்து, ரத்த ஓட்டத்தை சீராக்கும். இதனால், இதயத்திற்கு ஏற்படும் பாதிப்பு தடுக்கப்படும். கண் நோய், தோல் நோய்களுக்கும் தேனை பயன்படுத்தலாம்.

தேனுடன் இஞ்சி, விதை நீக்கிய பேரிச்சம் பழம் இரண்டையும் ஊற வைத்து சாப்பிடுவதால் நோய் எதிர்ப்பு சக்தி பெருகுவதுடன், மலச்சிக்கல் ஏற்படுவதும் குறையும். ஒரே டம்ளர் வெந்நீர் அல்லது சூடுபடுத்தப்பட்ட பாலில் மூன்று டீஸ் பூன் தேன் கலந்து இரவு படுக்கைக்கு செல்லும் முன் அருந்தினால் தூக்கம் நன்றாக வரும். நோய் எதிர்ப்பு தன்மை பெருகி, உடல் ஆரோக்கியம் ஏற்படும். நாள்தோறும் 100 கிராம் தேன் கலந்த பானம் பருகினால், ரத்த சோகை ஏற்படுவது தடுக்கப்படும்.

தொடர்ந்து ஆறு வாரம் அருந்தினால் ரத்தத்தில் சிவப்பு அனுக்களின் எண்ணிக்கை அதிகரித்து ரத்த சோகை முற்றிலும் நீங்கி விடும். உடல் அழகையும், குரல் இனிமையையும் ஏற்படுத்தி தரும் குணம் தேனுக்கு உண்டு. வயிற் றுக்கு சிறந்த நன்பன் என்றால் அது தேன் தான். தினமும், 3 டீஸ்பூன் தேனை 100 மில்லி லிட்டர் வெந்நீரில் காலை அல்லது இரவு நேரத்தில் வெறும் வயிற்றில் அருந்தினால், வயிற்றுப்புண், இரைப்பை அலர்ஜி, ஈரல், பித்தப்பை நோய்கள் குணமாகும். குறிப்பாக அமிலத் தன்மையை கட்டுப்படுத்தி அல்சர் நோயை குணப்படுத்தும்.

சுத்தமான தேனை தேர்வு செய்வது எப்படி

சுத்தமான தேனில் மகரந்தம் கலந்திருக்கும். இடத்திற்கு இடம் இது மாறுபடும். இளம் மஞ்சள் நிறத்தில் இருக்கும். நாளடைவில் மங்கிய நிறத்திற்கு மாறிவிடும். ஆறு மாதத்திற்கு தேனை வைத்திருந்து சாப்பிடலாம். தேனில் உள்ள சர்க்கரை சத்து, வைட்டமின் சத்து, உலோகச்சத்து உடலுக்கு ஏற்றது. சில சமயங்களில் தேனில் கலந்துள்ள மகரந்தம் சிலருக்கு அலர்ஜியை ஏற்படுத்தும்.

தேன் கலப்படம் செய்யப்பட்டுள்ளதா என்பதை அறிய சிறிதளவு தேனில், தீக்குச்சியை சில விநாடிகள் ஊற வைத்து துடைத்து தீப்பற்ற வைக்க வேண்டும். குச்சி சீக்கிரம் எரிந்தால் தேனில் சர்க்கரை கலப்படம் இல்லை என்பதை அறியலாம். அல்லது மை உறிஞ்சும் காகிதத்தில், செய்திதாளில் சிறிதளவு தேனை ஊற்றி சில நிமிடங்கள் வைத்திருக்க வேண்டும். பேப்பர் தேனை உறிஞ்சாமல் இருந்தால் அது நல்ல தேன் என்பதை அறிந்து கொள்ளலாம்

ishwarya

Posts : 24602
Join date : 01/02/2013

View user profile

Back to top Go down

View previous topic View next topic Back to top


 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum