Related Posts Plugin for WordPress, Blogger...

நீரிழிவு நோயாளிகளுக்கு ஏற்ற உணவுகள்

View previous topic View next topic Go down

நீரிழிவு நோயாளிகளுக்கு ஏற்ற உணவுகள்

Post  ishwarya on Fri May 10, 2013 2:51 pm

தற்போது நீரிழிவு நோயால் பாதிக்கப்படுபவர்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து கொண்டே வருகின்றது.

பழங்கள் மற்றும் காய்கறிகள் உடலுக்கு ஆரோக்கியத்தை தந்தாலும், நீரிழிவு நோயளிகளுக்கு சில நேரங்களில் அவை கெடுதலை விளைவிக்கும்.

ஏனெனில் நிறைய காய்கறிகளில் இரத்தத்தில் உள்ள சர்க்கரையின் அளவை அதிகரிக்கும் பொருள் உள்ளது.

உதாரணமாக, உருளைக்கிழங்கு, கேரட், பீட்ரூட் போன்ற காய்கள் அனைத்தும் உடலுக்கு மிகவும் சிறந்தவை. ஆனால், அது நீரிழிவு உள்ளவர்களுக்கு சிறந்தது அல்ல.

எனவே நீரிழிவு நோய் உள்ளவர்கள் எவ்வகையான காய்கறி, பழங்களை சாப்பிடலாம் என்பதை தெரிந்து கொண்டு அதற்கேற்றாற் போல் சாப்பிட வேண்டும்.

பாகற்காய்

நீரிழிவு நோயாளிகளுக்கு பாகற்காய் ஒரு வரப்பிரசாதம் என்று சொல்லலாம்.

ஏனெனில் இந்த பாகற்காய் ஜூஸை காலையில் எழுந்ததும் வெறும் வயிற்றில் குடித்து வந்தால், இரத்தத்தில் உள்ள சர்க்கரையின் அளவு கட்டுப்படும்.

வெந்தயக் கீரை

கீரை வகைகளில் வெந்தயக் கீரையை சாப்பிட்டு வந்தால், நீரிழிவைத் தடுக்கலாம்.

இந்த கீரையில் உள்ள லேசான கசப்பு சுவையானது, இரத்தத்தில் உள்ள குளுக்கோஸின் அளவை குறைக்கிறது.

சுரைக்காய்

இன்சுலின் குறைபாட்டினால் வரும் நீரிழிவை, சுரைக்காயின் சாற்றை எடுத்து காலையில் குடித்து வர சரியாகும்.

லெட்யூஸ்(Lettuce)

இந்த பச்சை இலைக் காய்கறியில் நார்ச்சத்து அதிகமாகவும், சர்க்கரையின் அளவு குறைவாகவும் உள்ளது. ஆகவே இதனை சாப்பிடுவது நல்லது.

காலிஃப்ளவர்

மற்ற காய்கறிகளைப் போன்று, காலிஃப்ளவர் இனிப்பு சுவையற்றது. ஆகவே இதனை அதிக அளவில் உணவில் சேர்த்து வந்தால், உடலானது நன்கு ஆரோக்கியமாக இருக்கும்.

பூசணிக்காய்

அனைவருக்குமே பூசணிக்காய் இனிப்பு சுவையுடையது என்பது தெரியும். ஆனால் அவற்றில் கிளைசீமிக் இன்டெக்ஸ் மிகவும் குறைவாக இருக்கும். எனவே தான் இது நீரிழிவு நோயாளிகளுக்கு ஏற்ற ஒரு காய்கறி.

பிரெஞ்சு பீன்ஸ்

பிரெஞ்சு பீன்ஸில் உள்ள ஊட்டச்சத்துக்கள், உடலில் இன்சுலின் அளவை அதிகரிக்கிறது. எனவே இதனை நீரிழிவு உள்ளவர்கள் உண்டால், நீரிழிவை தடுக்கலாம்.

ishwarya

Posts : 24602
Join date : 01/02/2013

View user profile

Back to top Go down

View previous topic View next topic Back to top


 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum