Related Posts Plugin for WordPress, Blogger...
Keywords


உதட்டின் மேல்பகுதி கருப்பா இருக்கா?

View previous topic View next topic Go down

உதட்டின் மேல்பகுதி கருப்பா இருக்கா?

Post  ishwarya on Sat May 11, 2013 12:19 pm

முகத்தில் கருப்பாக இருக்கும் இடங்களில் ஒன்று தான் உதட்டின் மேல்பகுதி. பெரும்பாலானோருக்கு இந்த பிரச்சனை இருக்கும். இதற்கு காரணம் அந்த இடங்களில் மெலனின் அளவுக்கு அதிகமாக இருப்பதே ஆகும்.

எனவே அத்தகைய மெலனின் அளவைக் கட்டுப்படுத்தவும், சூரியக் கதிர்களால் சருமத்தின் நிறம் மாறாமல் இருக்கவும், ஒருசில இயற்கை முறைகளை பின்பற்றி வந்ததால், உதட்டிற்கு மேலே இருக்கும் கருமையான சருமத்தை நீக்குவதோடு, எந்த ஒரு பக்கவிளையும் வராமல் தடுக்கலாம்.

* எலுமிச்சையில் உள்ள நன்மைகளில் ஒன்று தான் கருமையான சருமத்தை நீக்குவது. அதற்கு எலுமிச்சை சாற்றுடன் தேன் மற்றும் தயிர் கலந்து, கருப்பான இடத்தில் தடவி சிறிது நேரம் மசாஜ் செய்து வந்தால், சரும நோய்கள் போவதோடு, சருமமும் எண்ணெய் பசையுடன் பொலிவோடு பளிச்சென்று இருக்கும்.

* கடலை மாவு கருமையான இடத்தை வெள்ளையாக்குவதற்கு பெரிதும் உதவுகிறது. அதற்கு கடலை மாவுடன், மஞ்சள் தூள் மற்றும் மில்க் க்ரீம் சேர்த்து கலந்து, முகத்தில் தடவி, மசாஜ் செய்து வர வேண்டும். இவ்வாறு தொடர்ந்து செய்து வந்தால் சருமத்தில் உள்ள இறந்த செல்கள் நீங்கி, சருமம் பொலிவோடு இருக்கும்.

* வெள்ளரிக்காயின் சாற்றில் சிறிது எலுமிச்சை சாற்றை கலந்து, சருமத்தில் இருக்கும் கருமையான இடத்தில் தடவி, சிறிது நேரம் ஊற வைத்து, பின் குளிர்ந்த நீரில் கழுவினால், சில நாட்களிலேயே கருமை நிறம் படிப்படியாக மறைவதை காணலாம்.

* கருமையை போக்க ஓட்ஸ் ஸ்கரப் சிறந்ததாக இருக்கும். அதற்கு ஓட்ஸ், தக்காளி சாறு மற்றும் தயிர் சேர்த்து கலந்து, முகத்தில் தடவி ஸ்கரப் செய்து, 15 நிமிடம் ஊற வைத்து, பின் கழுவ வேண்டும்.

* தக்காளியை அப்படியே முகத்தில் தேய்த்தோ அல்லது அதன் சாற்றை எலுமிச்சை சாறு மற்றும் மஞ்சள் தூளுடன் சேர்த்து முகத்தில் தடவி வர வேண்டும். இவ்வாறு தொடர்ந்து செய்து வந்தால் நல்ல பலன் கிடைப்பதை காணலாம்.

ishwarya

Posts : 24602
Join date : 01/02/2013

View user profile

Back to top Go down

View previous topic View next topic Back to top


 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum