Related Posts Plugin for WordPress, Blogger...

மழைக்கால மேக்கப் டிப்ஸ்

View previous topic View next topic Go down

மழைக்கால மேக்கப் டிப்ஸ்

Post  ishwarya on Sat May 11, 2013 1:04 pm

கோடை காலமோ, குளிர்காலமோ சீசனுக்கு ஏற்ப மேக் அப் போட்டால் மட்டுமே அழகு அதிகரிக்கும். இல்லை எனில் முகத்தின் இயற்கையான அழகே மாறிவிடும். இதோ மழைக்காலத்திற்கு ஏற்ப மேக்கப் போட சில எளிய குறிப்புகள்…

தூசி, அழுக்குகள் அதிகம் படியும் இடம் முகம் எனவே முதலில் முகத்தை பேஸ் வாஷ் கொண்டு கழுவ வேண்டும். பின், கிளென்சர் பயன்படுத்தி முகத்தை சுத்தப்படுத்தி விட்டு, ஐஸ் கட்டிகள் வைத்து, முகத்தில், 10 முதல் 15 நிமிடங்கள் தேய்க்க வேண்டும். இது முகத்தில், அதிகமாக வியர்ப்பதை குறைக்க உதவுவதோடு, நாம் போடும் மேக்-அப் கலையாமல், பிரஷ்ஷாக வைத்திருக்க உதவும்.

மழைக்காலத்தில், மேக்-அப் செய்வதற்கு முன், பவுண்டேஷன் மற்றும் பேஸ் கிரீம்கள் பயன்படுத்துவதைத் தவிர்க்க வேண்டும். தேவைப்பட்டால், தண்ணீரில் கரையாத பவுண்டேஷன்களாக பயன்படுத்தலாம். சிறிதளவு பவுடர் மட்டும் பூசலாம். மழைக்காலத்தில் மாய்சரைசர் பயன்படுத்த மறந்து விடாதீர்கள்.

மாய்சரைசர் தோலில் ஏற்படும் நீர் இழப்பு மற்றும் பரு போன்றவற்றை தவிர்க்க உதவும். மழைக்காலத்தில் கூந்தலை பராமரிப்பது மிகவும் சிரமமான ஒரு விஷயம். கூந்தலில் ஏற்படும், அதிகப்படியான ஈரப்பதம், வியர்வை மற்றும் மழையில் நனைதல் போன்றவற்றால், அவை வலுவற்று காணப்படுகிறது.

மழைக்காலத்திற்கு, கூந்தலுக்கு அதிகமாக, ரசாயன சாதனங்கள் பயன்படுத்துவதைத் தவிர்க்க வேண்டும். மிதமான ஷாம்புகள் பயன்படுத்தி, குளிக்கலாம். தலையை சற்றே தளர்வாக பின்னலாம். இறுக்கமான பேன்டுகள் போடுவதோ, தலையை ப்ரீஹேர் விடுவதோ கூடாது

ishwarya

Posts : 24602
Join date : 01/02/2013

View user profile

Back to top Go down

View previous topic View next topic Back to top


 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum