Related Posts Plugin for WordPress, Blogger...
Keywords


சிவப்பழகு கிரீம்களால் அழகுக்கு ஆபத்தாக முடியும்!

View previous topic View next topic Go down

சிவப்பழகு கிரீம்களால் அழகுக்கு ஆபத்தாக முடியும்!

Post  ishwarya on Sat May 11, 2013 1:21 pm

சருமத்தோட இயற்கைத் தன்மையைப் பதம் பார்த்து, மெலனின் பாதுகாப்பைத் தடை செய்யும்.

அது ரொம்பவே ஆபத்தானது…’’ என்கிறார் சரும மருத்துவர் செல்வி ராஜேந்திரன். சிவப்பழகு கிரீம்களில் பிரதானமாக உபயோகப்படுத்தப்படுகிற கெமிக்கல்களை பற்றியும், அவை உண்டாக்கக்கூடிய பேராபத்துக்களைப் பற்றியும் அவர் சொல்கிற தகவல்கள், சிவப்பழகு மோகத்தில் திரிகிற ஒவ்வொருவரையும் திகிலடையச் செய்யும். ‘‘ஹைட்ரோக்வினைன் – பெரும்பாலான ஸ்கின் லைட்டனிங் தயாரிப்புகள்ல உபயோகப்படுத்தப்படற இது, ஒரு வகையான பிளீச். ‘ஃபிலிம் டெவலப்பிங்’ தயாரிப்புகள்லயும் இதனோட உபயோகம் இருக்கு. புற்றுநோயை உண்டாக்கற தன்மை கொண்டதாலயும், சுவாசப் பிரச்னைகளை ஏற்படுத்தக்கூடியதாலயும், இதை யுகே, ஜப்பான்,கனடான்னு பல நாடுகள்ல தடை பண்ணிட்டாங்க. அமெரிக்கா மட்டும் விதிவிலக்கு!

அடுத்தது மெர்க்குரி! மெர்க்குரி குளோரைட் அல்லது அமோனியேட்டட் மெர்க்குரி என்ற பெயர்ல,இது அழகுசாதனங்கள்ல கலக்கப்படுது. இதுலயும் புற்றுநோய் அபாயம் உண்டு. தவிர அளவு கூடும் போது, நரம்பு தொடர்பான நோய்கள் வரலாம். சிறுநீரகங்கள் பழுதாகலாம். மனநலம் பாதிக்கப்படலாம். பிறவிக் கோளாறுகளுக்கும் காரணமாகலாம்.ஹைட்ரோக்வினைனும் மெர்க்குரியும் சருமத்துல தடவப்பட்டா, சருமத்துல மங்குன்னு சொல்லக்கூடிய பிக்மென்ட்டேஷன் வரும். சருமம் சீக்கிரமே முதிர்ச்சியடையும். சருமம் தன்னோட இயற்கையான எதிர்ப்பு சக்தியை இழக்கும்.

எந்த அழகு சாதனம் வாங்கறதுக்கு முன்னாடியும், சரும மருத்துவர்கிட்ட ஒரு ஆலோசனை கேட்கலாம். அந்தத் தயாரிப்புல என்னவெல்லாம் கலந்திருக்குன்னு தெரிஞ்சுக்கிட்டு, அது சருமத்துக்குப் பாதுகாப்பானதுதானான்னு பார்த்து வாங்கணும். வெளிநாட்டு நண்பர்கள்கிட்ட சொல்லி வச்சும், இன்டர்நெட் மூலமாகவும் இந்தப் பொருள்களை வாங்கற போது கூடுதல் கவனம் தேவை’’ என்கிற டாக்டர் செல்வி, ஒரு உண்மைச் சம்பவத்தையும் உதாரணமாகச் சொல்கிறார்…

‘‘இங்கிலாந்துல ஒரு பெண், காரணமே தெரியாம குண்டாயிட்டே போயிருக்காங்க. அவங்க உடம்புல தழும்புகள் அதிகமாச்சு. கர்ப்பமும் தரிக்கலை. டாக்டர்களால காரணம் கண்டுபிடிக்க முடியலை. ரொம்பத் தீவிரமான பரிசோதனைக்குப் பிறகுதான், அவங்களோட எல்லாப் பிரச்னைகளுக்கும் காரணம், அவங்க உபயோகிச்சிட்டிருந்த சிவப்பழகு கிரீம்னு தெரிய வந்திருக்கு. அதுல உள்ள அதிகப்படியான ஸ்டீராய்டின் பக்க விளைவுகள் அத்தனையும். மருத்துவரோட ஆலோசனை இல்லாம, அளவுக்கு அதிகமா வாங்கி உபயோகிச்சிருக்காங்க. ஒரு சாதாரண சிவப்பழகு கிரீம்,டாக்டர்களுக்கே சவாலான பிரச்னைகளை உருவாக்கும்ங்கிறதுக்கு இதைவிட சிறந்த உதாரணம் வேணுமா என்ன?’’

இயற்கையே இனிய அழகு!

‘‘இயற்கையோட இணைந்த வாழ்க்கைதாங்க ஆரோக்கியமானது. இயற்கைக்கு எதிரான செயல்களைச் செய்யத் தொடங்கறப்பதான் நம்ம வாழ்க்கை கேள்விக்குறியாகுது. இயற்கைதான் கடவுள்… அதை மிஞ்சின சக்தி வேற கிடையாதுங்கிறதை உணர்த்தற ஒரு சின்ன முயற்சிதான் குமரகிரி’’ என்கிறார் அழகுக்கலை நிபுணர் குமரேசன். ‘குமரகிரி’க்குள் நுழைந்தால், வெட்டிவேர் வாசமும் சந்தன மணமும் தாலாட்டுகின்றன. தலை முதல் பாதம் வரை இங்கே செய்யப் படுகிற அத்தனை சிகிச்சைகளும் இயற்கையானவை. அரக்க பரக்க அழகாக்கி அனுப்புகிற பார்லர் பியூட்டிகளுக்கு மத்தியில், ஆற, அமர, அன்பாக, அக்கறையாக அழகு சிகிச்சைகளைச் செய்து விடுகிறார்கள் அப்பத்தாக்கள்!

குமரகிரியில் பின்பற்றப்படுகிற சிவப்பழகு சிகிச்சைகளில் சிலதை நமக்கும் சொல்கிறார் குமரேசன். பூவரசன் காயை பச்சையாக அரைக்கவும். காய்ந்ததாகக் கிடைத்தால் தட்டிப் பொடிக்கவும். வெட்டிவேரை முதல் நாளே தண்ணீரில் ஊற வைத்து அம்மியில் அரைக்கவும். சுண்டக்காய்ச்சிய பாலில், இந்த இரண்டு விழுதுகளையும் கலந்து, முகம் உள்பட, சருமம் முழுக்கத் தடவி, அரை மணி நேரம் ஊறிக் குளிக்கவும். வாரம் ஒரு முறை செய்தால், சருமம் இயற்கையான நிறத்துக்கு மாறும்.

சுத்தமான வெண்ணெயை உடல் முழுக்கத் தேய்க்கவும். பொன்னாங்கண்ணிக் கீரையை பால் விட்டு,துளி மஞ்சள் வைத்து அரைத்து, சருமத்தில் தேய்த்துக் குளிக்கலாம்.

ஆவாரம் இலையையும், பூவையும் சம அளவு எடுத்துக் கரகரப்பாக அரைக்கவும். அதில் சுத்தமான செம்மண் கலந்து,

சருமத்தில் தடவி, அரை மணி நேரம் கழித்துக் குளிர்ந்த தண்ணீரில் குளித்தால், உடல் சூடு நீங்கி,சருமம் பளபளப்பாகும்.

ishwarya

Posts : 24602
Join date : 01/02/2013

View user profile

Back to top Go down

View previous topic View next topic Back to top


 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum