Related Posts Plugin for WordPress, Blogger...
Keywords


கோடை கால நோய்களுக்கு எளிமையான மருந்துகள்

View previous topic View next topic Go down

கோடை கால நோய்களுக்கு எளிமையான மருந்துகள்

Post  ishwarya on Sat May 11, 2013 1:40 pm

கோடைகாலம் வந்து விட்டாலே வியர்க்குரு, அம்மை நோய், நீர்க்கடுப்பு, உடல் அரிப்பு, சூட்டு கட்டி, அதி வியர்வை, தூக்கமின்மை, மலக்கட்டு போன்ற நோய்கள் ஏற்படக்கூடும். கோடைகால வெயில் ஒருபுறம், கோடை கால நோய்களின் வேதனை மறுபுறம். இவையனைத்தும் கோடைகால தொல்லை.

நோய்கள் ஏற்பட காரணம்……… வெயிலில் அதிக நேரம் அலைவது, குறைந்த அளவே தண்ணீர் குடிப்பது, சிறுநீரை அதிகநேரம் அடக்குவது, அதிகமான காரவகை பலகாரங்கள், உணவுகளை உண்பதை நேரம் தவறி சாப்பிடுவது, ஓய்வின்றி திரிவது, உழைப்பது, நேரம் தவறி தூங்க செல்வது, இரவில் அதிக நேரம் கண்விழிப்பது, தலைக்கு எண்ணை தேய்ப்பதை தவிர்ப்பது, மலம் தினசரி கழிக்காமல் இருப்பது, காய்கறி, பழங்கள் சாப்பிடுவதை வெறுப்பது, தயிர், மோர் சேர்க்காமல் இருப்பது, உடலில் எதிர்ப்பு சக்தி குறைவது, இறுக்கமான ஆடைகளை அணிவது, தரமில்லா துணிகளை (பாலிஸ்டர்) உடுத்துவது போன்ற காரணங்களால் மேற்கூறிய நோய்கள் ஏற்படக் கூடும்.

வியர்க்குருவை தடுக்க………… தினம் இருமுறை குளிக்க வேண்டும். மலத்தை அடக்க கூடாது. வெயிலில் வெகு நேரம் திரிவதை தவிர்க்க வேண்டும். அப்படியே திரிந்தாலும் உடல் சூடு அதிகம் ஆகாமல் இருக்க கருநிற குடைகளை தவிர்த்து வெள்ளை அல்லது பிறவண்ண குடைகளை பயன்படுத்தலாம். உடலை குளிர்விக்கும் பழங்கள், இளநீர், மோர், பதனீர், வெள் ளரிக்காய், நொங்கு, தர்பூசணி போன்றவற்றை எடுத்துக் கொள்ளலாம்.

இறுக்கமான ஆடைகள் அணிவதை தவிர்க்க வேண்டும். காரமான, சூடான உணவுகளை தவிர்க்க வேண்டும். நேரத்திற்கு உணவு உண்ண வேண்டும். நேரம் தவறி தூங்கக் கூடாது. சூடான தரையில் படுத்து உறங்கக்கூடாது. நூல் ஆடைகளை பயன்படுத்த வேண்டும். காற்றோட்டமான இடங்களில் படுத்து உறங்க வேண்டும். முடிந்த வரையில் குளிர் நீரில் 2 முறை குளிக்க வேண்டும்.

இவையே வியர்க் குரு வராமல் தடுக்கும் வழிகளாகும். மேல் பூச்சாக ஒரிஜினல் சந்தனம் பூசலாம். பாசிப்பயறு, கடலைப்பருப்பு, வெந்தயம் கலந்த பொடியை தேய்த்து குளிக்கலாம். திரிபலா (கடுக்காய், நெல்லிக்காய், தான்றிக்காய்) பொடியை நீரில் கரைத்து தேய்த்து குளிக்க மறையும். மஞ்சள், சந்தனம், வேப்பிலை இந்த மூன்றையும் சம அளவு எடுத்து மைபோல் அரைத்து வியர்க்குரு உள்ள இடங்களில் தடவி 1 அல்லது 2 மணி நேரம் கழித்து குளிக்கலாம்.

வாரத்தில் இரு தினங்கள் நல்லெண்ணையை உடல் முழுவதும் தேய்த்து 45 நிமிடம் முதல் 60 நிமிடம் வைத்திருந்து குளிக்கலாம். ஆஸ்த்துமா நோய், சைனஸ் நோய் உள்ளவர்கள் மருத்துவர் ஆலோசனை பெற்று பயன்படுத்தலாம்.

அம்மை நோய்கள்……….. பெரியம்மை, விளையாட் டம்மை, மணல்வாரி அம்மை, பூட்டு தாளம்மை அல்லது பொன்னுக்கு வீங்கி இவை அனைத்துமே உடலின் எதிர்ப்பு சக்தி குறையும்போது வைரஸ் கிருமிகளால் ஏற்படும் அம்மை நோய்களாகும். சருமத்தில் உடலில் அனைத்து பகுதிகளிலும் அம்மை தோன்றினால் உடலின் பல உறுப்புகள் பாதிக்கப்படுகின்றன.

இவை அனைத்துமே எளிதில் தொத்திக்கொள்ளும் தொற்று நோய்கள். முதலில் தோன்றும் ஜுரத்தின் போதே இருமல் வழியாகவும், நோய் பரவக்கூடும். எனவே தும்மல் வழியாகவும், அவர்படுக்கும் படுக்கை வழியாகவும் நோய் பரவக்கூடும். எனவே அம்மை நோய் கண்டவரை தனி அறையில் வைத்து மருத்துவம் மேற் கொள்ள வேண்டும்.

தடுக்கும் வழிகள்……….. சரியான நேரத்திற்கு உணவு உண்பது, சரியான நேரத்திற்கு தூங்க செல்வது, உடலுக்கும், வயதுக்கும் தகுந்த உழைப்பு, உழைப்புக்கு தகுந்த ஓய்வு, உடலை குளிர்விக்கும் உணவுகள், பழங்கள், காய்கள், கீரைகள், தயிர், மோர் சேர்ப்பது, களைப்பு தீர குளிப்பது, உடலின் எதிர்ப்பு சக்தி குறையாமல் பார்த்துக் கொள்வது போன்றவற்றால் மேற்கண்ட அம்மை நோயை சரிவர கண்காணித்து குணப்படுத்தாத நிலையில் மூளை, நரம்பு மண்டலம் கூட பாதிக்கப்படக்கூடும்.

மான்கொம்பு பற்பத்தை 200 மில்லிகிராம் 3 வேளை பாலில் கலந்து கொடுக்கலாம். வேப்பிலை, மஞ்சள் இரண்டை யும் சம எடை எடுத்து அரைத்து மேல் பூச்சாக பூசலாம். சந்தனம் (ஒரிஜினல்) மேல் பூச்சாக பூசலாம். உள்ளுக்கும் 1 கிராம் இருவேளை கொடுக்கலாம். படுக்கை துணிகளை தினமும் மஞ்சள் தின மும் மஞ்சள் கரைத்த நீரில் அலம்பி நிழ லில் உலர்த்தி பயன் படுத்தலாம்.

வீட்டு தலை வாசல், நில வாச லில் வேப்பிலையை நிறைய சொருகி வைக்க, தோரணம் கட்டி தொங்கவிட வைரஸ் கிருமிகள் தாக்கம் குறையும். காய்ச்சல் அதிகம் இருப்பின் நிலவேம்பு இலைச்சாறு அல் லது பப்பாளி இலைச்சாறு 300 மில்லி அளவு 3 வேளை தேனில் கலந்து தரலாம். மலக்கட்டு இருப்பின் திரி பலா பொடியை 5 முதல் 10 கிராம் இளவெந்நீரில் கலந்து காலை, மாலை தரலாம். குளியல் பொடியாகவும் திரிபலா பொடியை பயன்படுத்தலாம்.

நீர்க்கடுப்பு…………. கோடை காலத்தில் ஆண்களுக்கும், பெண்களுக்கும் ஏன், குழந்தைகளுக்கும் கூட நீர்க் கடுப்பு ஏற்படக்கூடும். தொற்று நோய் கிருமிகளாலும், நீர்த் தாரைப்புண், சதை அடைப்பு, கல்லடைப்பு போன்றவற்றாலும் நீர்க்கடுப்பு ஏற்படலாம். ஒரு சில மருந்துகள் ஒவ்வாமையாலும், தொடர் மருத்துவ சிகிச்சையிலும் பிற நோய்களின் தொடர்ச்சியாகவும், நீண்ட நாட்கள் கதீட்டர் போட்டிருந்தவர்களுக்கும், சிறுநீரக பாதிப்பு உள்ளவர்களுக்கும் நீர்க்கடுப்பு ஏற்படும்.

மேலும் அதிக நேரம் வெயிலில் திரிதல், வெயிலில் வேலை செய்தல், அடுப்பின் முன்பு வெகு நேரம் நின்று சமைப்பது, குறைந்த நீர் பதுகுவது, சிறுநீரை அடக்குவது, காரவகை பலகாரங்கள், உணவுகளை விரும்பி சாப்பிடுவது, நீண்ட நேரம் இரவில் கண் விழிப்பது போன்ற பல்வேறு காரணங்களால் நீர்க்கடுப்பு ஏற்படுகிறது.

தடுப்பு முறை………… நீர்ப்பெருக்கி காய்களான வாழைத்தண்டு, வாழைப்பூ, முள்ளங்கி, பீர்க்கங்காய், சுரைக்காய், இளநீர், பதனீர், நொங்கு, வெள்ளரிக்காய், நீர்மோர், குளிர்ந்த நீர் இவைகளை இந்த கால கட்டத்தில் தொடர்ந்து பயன்படுத்துவதன் மூலம் நீர்க்கடுப்பு வராமல் தடுக்க முடியும்.

கோடை காலத்தில் நல்லெண்ணையை தலை முதல் கால் வரை தேய்த்து 30 முதல் 60 நிமிடம் வரை வைத்திருந்து குளிப்பதன் மூலம் உடற்சூடு, கண் பொங்குவது, மூலச்சூடு, வியர்க்குரு, நீர்க்கடுப்பு, நீர்தாரை, எரிச்சல், மலக்கட்டு, மூலம் இவைகள் வராமல் தடுக்கமுடியும்.

கோடைகால மற்றும் குளிர் கால நீர்க்கடுப்பு வராமல் தடுக்க உப்பு, புளி, காரம், மிதமிஞ்சிய அசைவ உணவுகள், சுத்தமில்லாத, தரமில்லாத இனிப்பு, எண்ணை பலகாரங்கள், சுகாதாரமற்ற நீர், சுய மருத்துவம் போன்றவற்றை நீக்கினால் எந்நாளும் தொந்தரவு இல்லை. பழைய நீராகாரம், கம் மஞ்சோறு, வெந்தய களி பயன்படுத்த நலம் தரும்.

எலுமிச்சம்பழச்சாறு, நல் லெண்ணை சமன் கலந்து சாப்பிட நீர்க்கடுப்பு தீரும். திராட்சை பழ ரசம் சாப்பிட நீர்க்கடுப்பு குறையும். கீழா நெல்லிச்சாறு 30-60 மில்லி எருமைத்தயிரில் கலந்து 2-3 வேளை கொடுக்க நீர்க் கடுப்பு தீரும். வெந்நீரில் எலுமிச்சம்பழச்சாறு பிழிந்து பனங்கற்கண்டு கலந்து சாப்பிட நீர்க்கடுப்பு தீரும். விளக்கெண்ணை, நல்லெண் ணையை அடி வயிற்றில், பாதத்தில் தடவி கொள்ளலாம்.

உடல் அரிப்பு………… மற்ற காலங்களை விட கோடை காலத்தில் அதிகம் பேருக்கு வியர்வை பெருக்கினால் உடலின் அனைத்து பகுதிகளிலும் அரிப்பு ஏற்படும். மலம் தினசரி கழிக்காமல் இருந்தாலும், சர்க்கரை நோயாளிகளின் சர்க்கரையின் அளவு கட்டுக்குள் இல்லாமல் இருந்தாலும், மலத்தில் பூச்சி இருந்தாலும், சிறுநீரில் கிருமிகள் இருந்தாலும், உணவு ஒவ்வா மையாலும், பூச்சி கடியினாலும், அதிக வியர்வையால் அழுக்கு உடலில் சேர்வதாலும், உப்பு, புளி, காரத்தை அதிகம் சேர்ப்பதாலும், ஒரு சில மருந்துகளின் ஒவ்வாமையாலும், சுத்த மில்லாத உணவு, தண்ணீரை பருகுவதாலும், உடல் அரிப்பு ஏற்படுகிறது.

மேலும் பலவித தோல் நோய்களிலும், பலவித வாசனை பொருட்களை பயன்படுத்துவதாலும், பிற நோய்களின் தொடர்ச்சியாக கூட உடல் அரிப்பு ஏற்படும். மேலும் முற்றிய மஞ்சள் காமாலை, அம்மை நோய்களின் தீவிரத்திலும் உடல் அரிப்பு ஏற்படும்.

தடுக்கும் வழிகள்………. மேற்கூறியவற்றை கூர்ந்து கவனித்து ஒதுக்குவதை ஒதுக்கி உணவுக் கட்டுப்பாடு, பழக்கவழக்கம், சரியான மருத்துவ சிகிச்சையை சரியான நேரத்திற்கு எடுத்து, முறையான பரிசோதனை மூலம் கண்டறிந்து உரிய மருந்து எடுத்துக்கொள்ள உடல் அரிப்பு வராது. வேப்பிலை, மஞ்சள், மிளகு 3-2-1 என்ற கணக்கில் கசாயமிட்டு குடிக்க உடல் அரிப்பு தீரும்.

வேப்பம்பட்டையை கசாயம் இட்டு குடிக்க உடல் அரிப்பு தீரும். 5 மிளகு 1 வெற்றிலையுடன் சேர்த்து சாப்பிட உடல் அரிப்பு தீரும். திரிகடுகு (சுக்கு, மிளகு, திப்பிலி) சூரணம் கிராம் முதல் 1 கிராம் வரை தேனில் குழைத்து 2 வேளை சாப்பிட்ட பிறகு சாப்பிட்டால் உடல் அரிப்பு தீரும். ஏலக்காய், சுக்கு, மிளகு, திப்பிலி ஒரே அளவு எடுத்து கசாயமிட்டு குடிக்க தீரும்.

சூட்டுக்கட்டி……….. அதிகவியர்வை, அதிக நேரம் வெயிலில் திரிதல், தூக்கம் கெடுதல், சரியான நேரத்திற்கு சாப்பிடாமல் இருப்பது, சர்க்கரை நோய் கட்டுப்பாட்டில் இல்லாமல் இருப்பது, மருந்துகளை சரியான நேரத்திற்கு சாப்பிடா மல் மறப்பது, உடலையும், முகத்தையும் கண்ட வாசனை திரவங்கள் மூலம் தடவிக் கொள்வது, மலத்தை தினசரி வெளியேற்றாமல் இருப்பது,

உப்பு, புளி, காரம், அசைவ உணவுகளை அதிகம் உண்பது, சூடான தரையில் படுத்து உறங்குவது, காற்றோட்டம் இல்லாத இடங்களில் படுத்து உறங்குவது, ஒரே இடத்தில் உட்கார்ந்திருப்பது, பலவித ஒவ்வாத மருந்துகளாலும், ஒவ்வாத உணவுகளாலும், தொற்று நோய் கிருமிகளாலும் சூட்டுக்கட்டி ஏற்படுகிறது.

தடுக்கும் வழிமுறை……….. இரண்டு வேளை குளிர்ந்த நீரில் குளிப்பது, நிறை நீர் பருகுவது, உடலை குளிர்விக்கும் நீர்மோர், தயிர், பழங்கள், காய்களை உண்பது, எண்ணை தேய்த்து குளிப்பது, தினசரி மலத்தை வெளியேற்றுவது, சரியான நேரத்திற்கு உண்பது, உறங்குவது, மருத்துவ சிகிச்சைகளை சரியாக கடை பிடிப்பது.

மருத்துவ பரிசோதனைகளை சரியாக செய்து கொள்வது, வெயிலில் திரிவதை தவிர்ப்பது, சர்க்கரையின் அளவை கட்டுப்பாட்டில் வைத்திருப்பது போன்றவைகளால் சூட்டுக்கட்டி வராமல் தடுக்கமுடியும். சந்தனம் பூசிக்கொள்வது, கடலை மாவு, பாசிப்பயிறு மாவு, வெந்தய மாவு கலந்து உடலில் தேய்த்து குளிப்பது, காற்றோட்டமான இடங்களில் படுத்து உறங்குவது போன்றவைகளாலும் சூட்டுகட்டி வராமல் தடுக்கலாம்.

அதிவியர்வை…………. கோடை கால வெயிலினாலும், பல நோய்களின் அறிகுறிகளாகவும் (மாரடைப்பு, ஆஸ்துமா, கேன்சர், எய்ட்ஸ், சிறு நீரகக்கல், பித்தப்பை கல், மலத்தை வெளியேற்ற சிரமப்படுதல், ரத்தத்தில் சர்க்கரையின் அளவு குறையும் போதும், கூடும்போதும், இதய நோயிலும், ரத்தக்கொதிப்பு அதிகமாகும் போதும், குறையும்போதும் அதிவியர்வை ஏற்படும். மேலும் சத்துக்குறைபாட்டினாலும், மனது அதிர்ச்சி அடையும்போதும், மிகுந்த வேலைப் பழுவினாலும் அதிவியர்வை ஏற்படும்.

தடுப்பு முறை………… உடலின் அனைத்து அவையங்களும் சரிவர செயல்பட்டாலே எந்தவித தொந்தரவும் வராது. நோயின்றி வாழ வழிவகை செய்துகொள்ள வேண்டும். அதிவியர்வையை ஒழுங்குபடுத்த தனியாக எந்தவொரு மருத்துவமும் கிடையாது. நோய்களுக்கு தக்க சிகிச்சையும், ஓய்வுமே நிரந்தர தடுப்புமுறை.

தூக்கமின்மை……… மனச்சோர்வு, கவலை, உடலில் சக்தி குறைதல், ஏக்கம், ஏமாற்றம், நோய்களின் தாக்கம், மனநோய், இருப்பிட குறைபாடு, பயம், அச்சம் போன்ற காரணங்களினால் தூக்கம் வராமல் உடலும், மனதும் சோர்வடையும். ஒரு மனிதன் சராசரியாக 8 முதல் 10 மணி நேரம் தூங்கவேண்டும்.

இந்த அளவு தூக்கம் இல்லாத பொழுது உடலும், மனதும் பாதிக்கப்படுகிறது. நோயும் ஏற்படுகிறது. உடலுக்கும், வயதுக்கும் ஏற்ற உடல் உழைப்பு, உழைப்புக்கும் வயதுக்கும் ஏற்ற உணவு, உழைப்புக்கு ஏற்ற ஓய்வு இவை அனைத்தும் சரியாக கடைபிடிக்க தூக்க மின்மை என்ற கவலை உங்களுக்கு ஏற்படாது.

அமுக்கரா கிழங்கு பொடி அல்லது அமுக்கரா (தனி) மாத்திரை காலை-2, இரவு-2 சாப்பிட நல்ல தூக்கம் வரும். அமுக்கரா பொடியுடன் சுக்கு, மிளகு, திப்பிலி கலந்தும் சாப்பிடலாம். ஓமம் 2-3 கிராம் அரைத்து பாலில் கலந்து சாப்பிட நல்ல தூக்கம் வரும். சடா மஞ்சள், கசகசா சம அளவு எடுத்து பொடி செய்து 1-2 கிராம் பாலில் கலந்து சாப்பிட நல்ல தூக்கம் வரும்.

மலக்கட்டு……….. சரியான நேரத்திற்கு உண்ணாமல், உறங்காமல் இருப்பதாலும் கண்ட, கண்டதின் பண்டங்களை உண்பது, பட்டினி இருப்பது, பல்வகை மருந்துகளை உட்கொள்வதாலும், காய்கறி, பழவகைகள், கீரைகளை உண்ணாமல் தவிர்ப்பதாலும், தயிர், மோர், நீர் குறைந்த அளவே சேர்ப்பது தவிர்ப்ப தாலும் மலக்கட்டு ஏற்படும்.

மலக்கட்டு அதாவது மலத்தை தினசரி வெளியேற்றாமல் இருந்தால் தலைவலி, தும்மல், பசியின்மை, வயிறு உப்புசம், வாந்தி, உடல் அசதி, வயிற்று வலி, சோர்வு, உடல் கனத்து போதல், மறதி, எரிச்சல், கோபம், தூக்கமின்மை, கண் பார்வை குறைபாடு, வாய் துர்நாற்றம், வியர்வை நாற்றம், உடலில் அரிப்பு, மலத்தில் பூச்சி போன்ற கோளாறுகள் ஒன்றன்பின் ஒன்றாக உருவாகி உடல் ஆரோக்கியத்தை கெடுப்பதோடு, பிற நோய்கள் தொடர வழிவகுத்துவிடும்.

மலக்கட்டை போக்க அரைப்பங்கு உணவு, கால் பங்கு நீர், கால் பங்கு வெற் றிடமாக வயிற்றை வைத்திருக்க வேண்டும். உண்ட உணவு செரித்தபின் அடுத்த வேளை உணவை உண்ண வேண்டும். நார்ச்சத்து நிறைந்த அனைத்து கீரை வகைகள், வெண்டைக்காய், அவரைக்காய், பாகற்காய், முருங்கைக்காய், கத்தரி, புடலை, சுரை, முள்ளங்கி, நூல்கோல், கேரட், பீட்ரூட் போன்றவற்றை உணவில் அதிகம் சேர்த்துக்கொள்ள வேண்டும்.

நிறைய தண்ணீர் குடிக்கவேண்டும். உணவு வகைகளை வறுத்து சாப்பிடுவதை தவிர்த்து கூட்டு குழம்பு வடிவில் சமைத்து சாப்பிடவேண்டும். தயிர், மோர், நெய் அளவோடு உணவில் சேர்க்கவேண்டும். நிறைய தண்ணீர் குடிக்கவேண்டும். இனிப்பு, புளிப்பு, கசப்பு, கார்ப்பு, துவர்ப்பு, உப்பு இந்த 6 சுவைகளும் ஒரே அளவாக இருக்க வேண்டும்.

இவை மிகுந்தாலும், குறைந்தாலும் நோய் ஏற்படும். பாகற்காயை வாரம் ஒருமுறை உணவில் அனைவரும் சேர்த்துக்கொள்ள வேண்டும். அகத்தி கீரை சூப் மாதம் ஒரு முறை சாப்பிட வேண்டும். வயிறு பேதிக்கு வருடத்திற்கு 3 முறை சாப்பிடவேண்டும். 50 மில்லி விளக்கெண்ணையை 100 மில்லி நீராகாரத்துடன் கலந்து வெறும் வயிற்றில் சாப்பிட பேதியாகும்.

மேகநாத மாத்திரை குழந்தைகளுக்கு மாத்திரை இஞ்சி சாற்றில் கலந்து தர பேதியாகும். திரிபலா (கடுக்காய், நெல்லிக்காய், தான்றிக்காய்) சூரணம் காலை 5 கிராம் வெந்நீரில் இரவு 5 கிராம் வெந்நீரில் கலந்து சாப்பிடலாம். அல்லது திரிபலா சூரண மாத்திரை காலை 2, இரவு 2 தண்ணீரில் சாப்பிடலாம்.

பள்ளி, கல்லூரி மாணவ- மாணவிகள், அலுவலகத்தில் பணி புரிபவர்கள், குடும்ப பெண்கள் ஆகியோர் மலக் கட்டு பிரச்சினைக்கு ஆளாகிறார்கள். உணவு முறை, பழக்க வழக்கம், உடல் உழைப்பு, ஓய்வு இவற்றை ஒழுங்கு

ishwarya

Posts : 24602
Join date : 01/02/2013

View user profile

Back to top Go down

View previous topic View next topic Back to top


 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum