Related Posts Plugin for WordPress, Blogger...
Keywords


கொளுத்தும் கோடை வெயில்- சமாளிப்பது எப்படி

View previous topic View next topic Go down

கொளுத்தும் கோடை வெயில்- சமாளிப்பது எப்படி

Post  ishwarya on Sat May 11, 2013 1:51 pmcf97c6d5-ccee-46c7-a228-001751a5c3ca_S_secvpfதமிழகத்தில் கோடை காலம் தொடங்கி விட்டது. மதுரை, கோவை, திருச்சி, சேலம் உள்ளிட்ட பல மாவட்டங்களில் 100 டிகிரி பாரன்கீட் அளவுக்கு வெயில் கொளுத்துகிறது. சென்னையிலும் வெயில் சுட்டெரிக்கிறது. மாலையில் கடல்காற்று வீசத் தொடங்கியதும் வெப்பம் தணிந்தாலும் புழுக்கமும், வியர்வையும் ஒருவித அசவுகரியத்தை ஏற்படுத்துகிறது.

ஆண்களின் பாடு ஓரளவுக்குப் பரவாயில்லை. ஆனால், பெண்கள் எப்போதுமே உடல் முழுக்க மூடிக் கொண்டிருக்கும் ஆடைகளை அணிவதால்… தோல் பிரச்சினைகள் தொடங்கி, சிறுநீர் கோளாறுகள் வரை இந்த வெயில் பெண்களைத்தான் கூடுதலாக வாட்டி எடுக்கும். அப்படி வரும் வெயில்கால நோய்களில் இருந்து நம்மைத் தற்காத்துக்கொள்ள சில வழிமுறைகளை கையாள வேண்டும்.

வெயில் காலத்தில் வியர்வை அதிகமாக சுரப்பதால், நீரோடு சேர்ந்து சோடியம் குளோரைடு போன்ற உப்புச் சத்துக்களும் உடலிலிருந்து வெளியேறுகின்றன. இவை உடலின் மேற்பரப்பில் படிவதால்தான் அரிப்பு ஏற்படுகிறது. எனவே, வெளியில் போய் உள்ளே வந்ததும், சற்றே வியர்வை அடங்கிய பிறகு, வியர்வையில் நனைந்த பாகங்களை நன்றாகக் கழுவிவிட்டால், அரிப்பு ஏற்படாது.

அப்படியே விட்டுவிடும் பட்சத்தில் அரிப்பு உருவாகி, அதனை சொறியும்போது கிருமித்தொற்று ஏற்படுகிறது. இதன் தொடர் விளைவாக… பங்கஸ், வியர்க்குரு, தடிப்பு என ஏதாவது ஒரு பிரச்சினையால் தோல் பாதிக்கப்படுகிறது. வெயில் காலங்களில் கதராடை மற்றும் இறுக்கம் அதிகம் இல்லாத உடைகளை அணியலாம். வெயிலால் உண்டாகும் பெரிய அளவிலான பாதிப்பு…

தோலுக்கும், சிறுநீரகத்துக்கும்தான். தோலில் ஏற்படும் கிருமித்தொற்று கிட்னி அலர்ஜியை உண்டாக்கும். உடலின் மேற்பரப்பில் படியும் சோடியம், தோலில் வறட்சியை ஏற்படுத்தும். முகத்திலும் லேசான கறுமை ஏற்படும். அதனால், சூரிய ஒளியின் தாக்கத்தைக் குறைக்கக்கூடிய கிரீம்களைப் பயன்படுத்தலாம். குளிக்கும்போது கடலை மாவு, பாசிப்பயறு மாவு என வறட்சியைத் தாங்கக்கூடிய பொருட்களைப் பயன்படுத்தலாம்.

முகத்தில் கிருமித்தொற்று ஏற்படாதபடி தடுக்க மஞ்சள் பூசுவது நல்லது. உடலின் நீர் இழப்பை ஈடுகட்டும்விதமாக இளநீர், தர்பூசணி, மோர், பழச்சாறுகளையும் நிறைய பருகலாம். வியர்வையோடு வெளியேறும் உப்புச் சத்துக்களை ஈடுகட்ட, தண்ணீரில் சிறிதளவு உப்பு சேர்த்துப் பருகலாம். குளிர்ச்சிக்காக இஷ்டம் போல கண்டவற்றையும் வாங்கிப் பருகாமல்… தண்ணீர் மற்றும் இயற்கையே கொடையாக தந்திருக்கும் குளிர்ச்சி தரும் பொருட்களைப் பயன்படுத்தினாலே போதும்…

வெயிலின் அபாயத்தில் இருந்து முழுவதுமாக நம்மை தற்காத்துக் கொள்ள முடியும்!” வெப்பத்தின் தாக்கம் அதிகமாய் இருக்கும்போது தவிர்க்க முடியாமல் சுகாதாரமற்ற சாலையோர பானக்கடையில் குளிர்பானங்களை அருந்துவது கூடாது. அது கோடைகால நோய்களை வீட்டுக்கு அழைத்து வந்துவிடும்.

10 முதல் 15 சதவீதம் வரையிலான மக்களுக்கு ஏதேனும் ஒரு நோய் வெயில் காலத்தில் வந்து விடுவதாக ஆய்வுகள் தெரிவிக்கின்றன. வெயில் காலங்களில் அடிக்கடி உடலுக்கு ஓய்வு கொடுப்பது அவசியம். வெயிலில் அலையும் வேலை செய்பவர்கள் அடிக்கடி நிழலான இடங்களில் சற்று அமர்ந்து ஓய்வு எடுத்து தண்ணீர் குடித்து விட்டு வேலையை தொடர்வது நல்லது.

தொப்பியோ, நல்ல குளிர் கண்ணாடியோ அணிவதன் மூலம் வெப்பத்தில் இருந்து தற்காலிகமாக தப்பிக்கலாம். இந்திய ஆயுர்வேதிக் அறிவுரைகளை பார்த்தால் தினமும் இரண்டு முறை குளிப்பது, மேல்நாட்டுப் பானங்களை ஒதுக்கிவிட்டு இளநீர், நன்னாரி சர்பத், மோர், தண்ணீர், எலுமிச்சை பானம், பார்லி தண்ணீர் போன்றவற்றையே பரிந்துரைக்கிறது.

அதிகம் காய்கறிகளையும், பழங்களையும், பானங்களையும் உணவாக கொள்ள வேண்டும். அதிக கொழுப்புள்ள உணவுகளையும், இனிப்பு வகைகளையும் வெயில் காலங்களில் தவிர்க்க வேண்டும். வெயில் காலங்களில் மது அருந்துபவர்கள் அதை நிறுத்துவதும் மிகவும் நல்லது. காரணம் மது உடலிலுள்ள ஈரப்பதத்தை குறைத்து ஆபத்தான சூழலை உருவாக்கி விடும்.

போதைப் பொருட்களையும் அறவே நிறுத்த வேண்டும். காலணி பயன்படுத்தும் போது காட்டன் சாக்ஸ் பயன்படுத்துவது நல்லது. இது தேவையற்ற வியர்வை தேங்கி நோய்களில் இருந்தும் அலர்ஜிகளில் இருந்தும் நம்மை பாதுகாக்கும். வெயில் காலம் என்பது தவிர்க்க முடியாதது.

ஆனால் வெயிலினால் வரும் நோய்கள் நிச்சயம் தடுக்கக் கூடியவையே. வெயில் காலத்தில் கவனிக்க வேண்டிய சிறு சிறு விஷயங்களை கவனித்து நடந்தால், வெயில் காலம் என்பது அச்சுறுத்தலாக இல்லாமல் அமைதியாக கடந்து செல்லும்.

ஓசோன் பாதிப்பால் வெப்பம் அதிகரிப்பு…….. பூமியில் மழைகாலம், குளிர்காலம், கோடைகாலம், இலையுதிர் காலம் என 4 பருவ நிலை மாற்றங்கள் சுழற்சியாக நடைபெற்று வருகிறது. பூமியானது தன்னைத்தானே சுற்றியபடி சூரியனையும் சுற்றி வருகிறது. அப்போது சூரியனை பூமி நெருக்கும் போது சூரியனின் கதிர் வீச்சு நேரடியாக பூமியின் மீது விழுகிறது.

அதை விண்வெளியில் உள்ள ஓசோன் மண்டலம் தடுத்து கதிர்வீச்சின் தாக்கத்தை குறைக்கிறது. ஆனால் பூமியில் ஏற்படும் சுற்றுச் சூழல் மாசு ஓசோன் மண்டலத்தை பாதிக்கச் செய்கிறது. ஓசோன் மண்டலத்தில் ஏற்பட்ட சிறிய ஓட்டை ஆண்டுக்கு ஆண்டு பெரிதாகிக் கொண்டே போகிறது. இதனால் சூரியனில் இருந்து வெளிப்படும் புர ஊதாக்கதிர்கள் நேரடியாக பூமியை தாக்குகிறது.

எனவேதான் கோடைகாலத்தில் வெப்பம் அதிகரிக்கிறது. இதுமற்ற பருவகால வெயிலை விட கூடுதல் கதிர்வீச்சால் பல்வேறு பாதிப்பை ஏற்படுத்திவிடுகிறது. இப்போது ஓசோன் மண்டலம் மேலும் பாதிப்படைந்து வருவதால் வெயிலின் தாக்கத்தை நம்மால் சமாளிக்க முடியாமல் அவதிப்படுகிறோம். வெயிலை கண்டு பயந்து வீட்டுக்குள் முடங்கி விடுகிறோம்.

ஓசோன் மண்டலம் பாதிப்பால் பூமியின் கால நிலையில் மாற்றம் ஏற்படுகிறது. துருவப் பிரதேசங்களில் உள்ள பனிப்பாறைகள் வெப்பத்தால் உருகி கடல் நீர்மட்டம் அதிகரிக்கிறது. இதனால் மழை, காலங்களில் அதிக மழையும், புயல் சேதங்களும் ஏற்படுகிறது. நம்நாட்டில் காடுகள், வனப்பகுதிகள் குறைந்து கொண்டே வருகிறது. மரங்கள் வெட்டப்படுகின்றன.

பெரிய மரத்தை வெட்டிப் போட்டு விட்டு சிறிய மரக்கன்று நடுவதால் ஒரே நாளில் அது ஈடுகட்டி விடாது. அந்த மரக்கன்றை பேணி பாதுகாத்து வளர்க்க வேண்டும். கிராமப் புறங்களை விட நகர்ப்பகுதியில் வெப்பம் அதிகமாக இருக்கும். காரணம் இங்குள்ள தொழிற்கூடங்களும், போக்குவரத்தும் முக்கிய காரணம். அதிகமான மக்கள் தொகை பெருக்கத்தால் நெருக்கமான குடியிருப்புகள்.

தொழிற்சாலைகள் வாகனங்கள் வெளியேற்றும் நச்சு கழிவுகளால் வெப்பம் அதிகரித்துக் கொண்டே போகிறது. கிராமங்களில் வெப்பத்தை கிரகித்துக் கொள்ளும் தன்மை படைத்த சாலைகள் இருபுறமும் மண்பரப்புடன் உள்ளன. ஆனால் நகரங்களில் நிலப்பரப்பை தார்போட்டு மூடிவிடுகிறோம். அது வெப்பத்தை பூமிக்குள் செல்ல விடாமல் வெளியே திருப்பி அனுப்புகிறது.

மேலும் நகர்ப்புறங்களில் பயன்படுத்தப்படும் குளிர் சாதன பெட்டிகள், குளிர் சாதன எந்திரங்கள் அதிக அளவில் வெப்பத்தை வெளியிடுகின்றன. நகரங்களில் மரங்கள் செடிகள் வைக்க கூட இடம் இல்லாமல் நெருக்கடியான குடியிருப்புகள். ஆனால் கிராமங்களில் அந்த நிலை இல்லை. மரங்கள் செடிகள் நிறைந்து காற்றோட்டமான இயற்கை சூழலில் வீடுகள்.

மரங்கள் நிறைந்து இருந்தால் அது வெப்பத்தை உள்ளிழுத்து ஆவியாகாமல் தடுக்கும். நகரங்களில் அதற்கு வழியில்லை. எனவே வெப்பத்தை குறைக்க மரங்களை அதிகம் வளர்க்க வேண்டும். குளிர்சாதன பெட்டிகள் பயன்பாட்டையும், வெப்பம் தரும் ஒளி விளக்குகளின் பயன்பாட்டையும் குறைந்து பூமி வெப்பம் அடைவதை தடுக்க வேண்டும்.

யாரை அதிகம் பாதிக்கும்………………. கோடை வெயில் வயதானவர்களையும், சர்க்கரை நோய், இதய நோய், குறைந்த ரத்த அழுத்தம் உள்ளவர்களையும் அதிகம் பாதிக்கும். சிலருக்கு வெயில் காலங்களில் ஒவ்வாமை நோய்கள் வருவதுண்டு. அவர்கள் அதற்குரிய முன்னேற்பாடு நடவடிக்கைகள் மேற்கொள்வது அவசியம். வெயில் காலத்தில் புழுதி பறக்கும்.

ஆஸ்துமா போன்ற நோயாளிகள் புழுதி நிறைந்த இடங்களுக்கு செல்வதை தவிர்க்க வேண்டும். வெயிலில் அதிக நேரம் அலைவதும் நேரடியாக சூரிய ஒளியில் நிற்பதும் பல கண் நோய்களுக்கும் காரணமாகி விடுகிறது.

சூரியனில் இருந்து வெளிப்படும் புற ஊதாக்கதிர்கள் கண்களை பாதித்து கண்ணுக்குள் நோயின் வேர்களை பாதித்து விட்டால் அது நீண்ட நாட்களுக்கு வெளியே தெரியாமல் இருந்து பிற்காலங்களில் பார்வையையை பாதித்து விடும்.

கண்களை குளிர்ச்சியாக வைத்திருக்க வேண்டும். இதற்காக வெள்ளரிக்காயை சிறுசிறு மெல்லிய வட்ட வடிவில் வெட்டி கண்களில் சிறிது நேரம் வைத்துக் கொள்ளலாம்.

ishwarya

Posts : 24602
Join date : 01/02/2013

View user profile

Back to top Go down

View previous topic View next topic Back to top


 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum