Related Posts Plugin for WordPress, Blogger...
Keywords


கர்ப்பகால சந்தேகங்கள் – விளக்கங்கள்

Go down

கர்ப்பகால சந்தேகங்கள் – விளக்கங்கள்

Post  ishwarya on Mon May 13, 2013 12:42 pm

கர்ப்பம் உறுதியான நாள் முதல், பிரசவதேதி வரை, கர்ப்பிணிகளை தேடிவருகிற மூட நம்பிக்கைகளுக்கு அளவே இருக்காது. இதுதவிர இளம்தாய்மார்களிடம் பிரசவகாலம் வரையில் தோன்றும் சந்தேகங்கள் ஏராளம். அம்மாவிடம், மாமியாரிடம், அண்டை அயலாரிடம் கேட்டுத் தெளிவுபெற்றாலும், விடை சிக்காத எத்தனையோ கேள்விகள், சதாநேரமும் உள்ளத்தை போட்டு அரித்து கொண்டிருக்கும்.

* `அதிகமாக வாந்தி எடுத்தால், குழந்தை தலை நிறைய முடியோடு பிறக்கும்’ என்கிறார்களே, உண்மையா?

கர்ப்ப காலம் பற்றி சொல்லப்படும் எத்தனையோ பொய்-வதந்திகளில் இதுவும் ஒன்று. அதாவது குழந்தையின் முடி அழகு பற்றிய கற்பனையில் தாய் இருப்பாள். இதனால் அவளுக்கு வாந்தி பற்றிய நினைப்பு இருக்கது என்பதற்காக இப்படி சொல்கிறார்களோ என்னவோ? ஆனால், குழந்தையின் முடிக்கும் தாயின் வாந்திக்கும் எந்த தொடர்பும் இல்லை.

*`பிறக்கும் குழந்தை ஆணா, பெண்ணா?’ என்பது எப்போது-எப்படி தீர்மானிக்கப்படுகிறது?

உங்களுக்கு ஒரு விஷயம் தெரியுமா? `குழந்தை ஆணா, பெண்ணா?’ என்பதை தீர்மானிப்பதே, கணவன்தான். அதாவது சினைமுட்டையின் உள்ளே செல்லும் ஆணின் உயிரணுவில் உள்ள குரோமோசோம்தான், குழந்தையின் பாலினத்தை தீர்மானிக்கிறது. அதுவும் உயிரணுவும் சினைமுட்டையும் சேரும் அந்த நொடியிலேயே! `பெண் குழந்தை பெற்றெடுத்தாள்’ என்பதற்காகவே மனைவியை வெறுக்கும் கொடிய மனம்கொண்ட கணவர், இனிமேலாவது திருந்துவது நல்லது.

* `ஆண் குழந்தை என்றால் சீக்கிரமே பிறந்துவிடும்’ என்கிறார்களே, உண்மையா?

`பத்து மாத பந்தம்’ என்று பெருமையாக சொல்லிகொண்டாலும் கருப்பை ஒரு கருவை சுமப்பது, மொத்தம் 9 மாதம்-ஒரு வாரம்தான்! இதுகூட கரு உருவாவதற்கு முன்பு மாதவிலக்கு ஆன நாளிலிருந்து, தோராயமாக எடுத்துக் கொள்ளப்படும் ஒரு கணக்குதான். இதில் ஆண் குழந்தை, பெண் குழந்தை என்று எந்த வித்தியாசமும் கிடையாது. எந்தவித பாகுபாடும் இல்லாமல்தான், இயற்கை இரு வகை குழந்தைகளையும், சமமான நாட்கள், தாயின் வயிற்றில் இருக்க செய்கிறது.

* கருவைச் சுமந்திருக்கும் பெண்கள் மல்லாக்க படுத்தால், கருவை நஞ்சுக்கொடி சுற்றிக்கொள்ளும் என்கிறார்களே, உண்மையா? எப்படி படுக்க வேண்டும்?

மல்லாந்த நிலையில் படுக்கக்கூடாது என்பது சரிதான். ஆனால், அதற்காக கூறப்படும் காரணம் தான் சரியல்ல. மல்லாந்த நிலையில் படுத்தால், கனமான கருப்பை இதயத்துக்கு ரத்தம் எடுத்து செல்லும் ரத்தகுழாய்களை அழுத்தும். அப்போது இதயத்துக்கு தேவையான ரத்தம் போய் சேராமல் `பி.பி’ இறங்கும். இதனால் தலைசுற்றி மயக்கம் வரும். இடது பக்கமாக ஒருக்களித்து படுப்பதே தாய்-சேய் இருவருக்கும் நல்லது.

* எந்த வயதில் கருத்தரித்தால், தாய்க்கும் சேய்க்கும் நலம்?

21 வயது முதல் 35 வயதுவரைதான், கருவுறுதலுக்கான சரியான காலகட்டம். அப்போதுதான் கருப்பை உள்ளிட்ட அத்தனை உறுப்புகளும் முழுமையான வளர்ச்சி அடைந்திருக்கும். கருவுறுதலுக்கு கைகொடுக்கும் ஆரோக்கியமான சினைமுட்டைகள், மாதாமாதம் சீறிவருவது-இந்த வயதில்தான்! 35 வயதுக்கு பிறகு கருத்தரிப்பது, தாய்க்கு அசவுகரியம். பிறக்கும் குழந்தையும் உடல்நல கோளாறுகளோடு பிறக்க வாய்ப்புண்டு.

* மாதவிலக்குக்கு பிறகு எந்தெந்த நாட்களில், தாம்பத்ய உறவு வைத்துக்கொண்டால், கரு தங்கும்?

மாதவிலக்கு ஆன தினத்தில் இருந்து 14-15வது நாள்தான், அந்த சுபயோக திருநாள். அப்போதுதான் சினைப் பையில் இருந்து, சினை முட்டைகள் வெடித்து வெளியே வரும். மாதத்துக்கு ஒரு தடவை வெளிவரும் இந்த சினை முட்டை, ஒரே ஒரு நாள்தான் உயிரோடு இருக்கும். அதற்குள் தாம்பத்ய உறவு நடந்தால்தான், பெண்ணின் வஜினாவை சென்றடையும் உயிரணு, சினை முட்டையோடு ஐக்கியமாகி கருவாக உருவாகும்.

இதில் ஆச்சரியமான விஷயம் என்னவென்றால்- சினைமுட்டை வெடிக்கும் அந்த நாளில், சம்பந்தப்பட்ட பெண்ணுக்கு செக்ஸ் உணர்வு அதிகமாக இருக்கும். அதை வைத்தும் இன்றுதான் `அந்த’ நாள் என்பதை முடிவுசெய்யலாம்.

ishwarya

Posts : 24602
Join date : 01/02/2013

View user profile

Back to top Go down

Back to top


 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum