Related Posts Plugin for WordPress, Blogger...
Keywords


வருடத்திற்கு 58 முறை ‘அது’ அவசியமாம்… இல்லைன்னா பிரச்சினையாம்…

View previous topic View next topic Go down

வருடத்திற்கு 58 முறை ‘அது’ அவசியமாம்… இல்லைன்னா பிரச்சினையாம்…

Post  ishwarya on Mon May 13, 2013 1:04 pm

இந்தியாவில் ஆண்மைக்குறைபாட்டினால் விவாகரத்துக்கள் அதிகரித்து வருவதாக சமீபத்திய ஆய்வு ஒன்றில் அதிர்ச்சி தகவல் வெளியாகியுள்ளது. ஆண்டிற்கு 58 முறை சராசரியாக உறவில் ஈடுபடவேண்டும் என்று கூறும் நிபுணர்கள் இந்த எண்ணிக்கை குறைந்தால் உடல்ரீதியாக அல்லது மனரீதியாக பிரச்சினை இருக்கலாம் என்கின்றனர் நிபுணர்கள். மாறிவரும் உணவுப்பழக்கம்…

பணிச்சூழலினால் ஏற்படும் மனஅழுத்தம்… புகை மது போதை வஸ்து பயன்படுத்துவதினாலும் இன்றைய இளம் தலைமுறையினர் ஆண்மை குறைபாட்டிற்கு ஆளாகின்றனர். இதனால் திருமணவாழ்க்கையில் பாதிப்பு ஏற்பட்டு விவகாரத்து வரை தள்ளப்படுகின்றனர். செக்ஸ் தொடர்பான பாதிப்புகளுக்கு சிகிச்சை அளிக்கும் மருத்துவர்கள் அமைப்பான ‘ஆல்பா ஒன் ஆண்ட்ராலஜி குரூப்’ டெல்லியில் செயல்படுகிறது. இந்த அமைப்பு சமீபத்தில் நடத்திய சர்வேயில் இந்த அதிர்ச்சி தகவல் வெளியாகியுள்ளது. ஆய்வறிக்கை தகவல்களை படியுங்களேன் சர்வேயில் தெரியவந்த தகவல்கள் குறித்து ஆல்பா அமைப்பின் தலைவரும்

பிளாஸ்டிக் சர்ஜரி நிபுணருமான அனூப் திர் மற்றும் எண்டோகிரைனாலஜிஸ்ட் சி.எம்.பத்ரா ஆகியோர்இது குறித்து கூறியதாவது: ஆண்மைக்குறைபாட்டினால் பாதிப்பு ஆண்மை குறைபாட்டால் பாதிக்கப்பட்ட 2,500 பேரிடம் அவர்களது தாம்பத்ய வாழ்க்கை குறித்து கேள்விகள் கேட்டு பதில் பெறப்பட்டது. 40 வயதை கடந்தவர்களில் 50% பேரும், 40 வயதுக்கு கீழ் 10% பேரும் ஆண்மை குறைபாட்டால் பாதிக்கப்பட்டுள்ளனர். விவாகரத்து ஏன் ஏற்படுகிறது 2500 பேரில் சராசரியாக 5ல் ஒருவர் விவாகரத்து ஆனவர். 10 பேரில் ஒருவர் பொதுவான உடல்நிலை பாதிப்பு காரணமாக டைவர்ஸ் பெற்றவராக உள்ளார். ஆண், பெண் இருவருக்கும் அதிக பொறுமை,

முயற்சி, விட்டுக் கொடுத்தல் ஆகியவை இருந்தால்தான் மணவாழ்க்கை, தாம்பத்ய வாழ்க்கை சந்தோஷமாக அமையும். மனம் விட்டு பேசுங்களேன் ஆணுக்கோ, பெண்ணுக்கோ மணவாழ்க்கை திருப்தியாக இல்லை என்றால் அவர்களிடையே தகவல் பரிமாற்றம் மோசமாக இருக்கிறது என்ற அர்த்தம். தம்பதியர்கள் மனம்விட்டு பேசாத காரணத்தினாலும், முக்கியமாக செக்ஸ் உள்ளிட்ட விஷயங்களில் அவர்களது எதிர்பார்ப்புகள் பூர்த்தியாகாததும் முக்கிய காரணம். இத்தகைய மணவாழ்க்கையில்தான் விரிசல்கள் ஏற்படுகின்றன.

ஆண்டுக்கு 58 முறை அவசியம் திருமணமான தம்பதியர் சராசரியாக ஆண்டுக்கு 58 முறை (அதாவது, வாரம் ஒருமுறை என்பதைவிட கொஞ்சம் அதிகம்) செக்ஸ் வைத்துக் கொள்கின்றனர். இந்த எண்ணிக்கை ஒரேயடியாக குறைந்தால் உங்களிடமோ, பார்ட்னரிடமோ ஏதோ பிராப்ளம் என்று உறுதியாக சொல்லலாம். ஆண்மை குறைபாட்டினால் பாதிப்பு சராசரியாக 20 முதல் 30 சதவீத திருமணங்கள், ஆண்மை குறைபாடு காரணமாக விவாகரத்தில் முடிகின்றன. தனக்கு ஆண்மை குறைபாடு இருக்கிறது என்பதை ஒப்புக்கொள்ள ஆணின் ஈகோ தடுக்கிறது. மற்றவர்களை ஏமாற்றுவதோடு தன்னையும் ஏமாற்றிக் கொண்டு, சிகிச்சையை ஒத்திப்போடுகிறான். கடைசியில் வேறு வழியின்றி மணவாழ்க்கை முறிந்துபோகிறது. சிகிச்சையினால் சரி செய்யலாம் குறைவான உடல் உழைப்பு, உடற்பயிற்சியின்மை, டென்ஷன், மனஅழுத்தம், என நம் வாழ்க்கை முறை பெரிதாக மாறிவிட்டது. இதுதவிர சிகரெட், மது, உடல் பருமன் அதிகரிப்பு ஆகியவற்றாலும் ஆண்மை குறைபாடு ஏற்படுகிறது. மருத்துவ ரீதியாக சர்க்கரை நோயும் ஹைப்பர் டென்ஷனும் ஆண்மை குறைபாட்டை ஏற்படுத்துகின்றன. சர்க்கரை நோய் இல்லாதவர்களைவிட சர்க்கரை நோயாளிகள் 1015 ஆண்டுகள் முன்னதாகவே ஆண்மை குறைபாட்டால் பாதிக்கப் படுகின்றனர். ரத்த அழுத்தத்தை குறைக்க சாப்பிடும் மருந்து, மாத்திரைகளால் சர்க்கரை நோயாளிகளுக்கு ஆண்மை குறைபாடு ஏற்படுகிறது என்கின்றனர் மருத்துவர்கள். சத்தான உணவுகள் சாப்பிடுங்க ஆண்மை குறைபாட்டினை ஒரு நோயாக கருதி, மருந்து எடுத்துக்கொள்ள வேண்டுமே தவிர, மனம் ஒடிந்து போக கூடாது. சத்தான உணவுகளை உட்கொள்வதன் மூலம் இந்த குறைபாட்டினை நிவர்த்தி செய்ய முடியும்.

செலினியம் உப்பு உடலில் குறைவாக இருந்தால் ஃப்ரீரேடிக்கல் திரவம் அதிகம் வெளியாகி உயிரணுக்களை சேதப்படுத்திவிடும் எனவே இவற்றை தடுக்க செலினியம் அடங்கிய சத்தான உணவுகளை உண்ணவேண்டும். பழுப்பு பார்லி, அரிசி, முளைவிட்ட கோதுமை, கோதுமை பிரட், கைக்குத்தல் அரிசி, டர்னிப் கீரை, வெள்ளைப்பூண்டு, ஆரஞ்சு சாறு, ஆகிய ஏழு உணவுகளிலும்

செலினியம் என்ற அரிய தாது உப்பு போதுமான அளவு இருக்கிறது. இவை வைட்டமின் ‘இ’ யுடன் சேர்ந்து ஆன்ட்டி ஆக்ஸிடென்ட்டாக செலினியம் உப்பும் செயல்படுகிறது. இந்த வைட்டமினும் தாது உப்பும் சேர்ந்து உயிரணுக்களில் உள்ள மெல்லிய தோல்களையும், திசுக்களையும் நோய் எதுவும் தாக்காமல் பாதுகாக்கின்றன.

ishwarya

Posts : 24602
Join date : 01/02/2013

View user profile

Back to top Go down

View previous topic View next topic Back to top


 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum