Related Posts Plugin for WordPress, Blogger...
Keywords


அழகை கெடுக்கும் வெள்ளை முடி.

Go down

அழகை கெடுக்கும் வெள்ளை முடி.

Post  ishwarya on Mon May 13, 2013 2:59 pm

வெள்ளை முடி வந்துவிட்டால் உடனே வயதாகிவிட்டதென்ற எண்ணம் அனைவரது மனதிலும் இருக்கிறது. ஆனால் உண்மையில் முடியின் வேர் பகுதியில் உள்ள மெலனின் என்னும் நிறமிப்பொருள், முடியின் நீளத்திற்கு உற்பத்தி செய்ய முடியாததால், முடியின் நிறம் மாறுபடுகிறது. மேலும் கூந்தல் வெள்ளையாவதற்கு பல காரணங்கள் இருக்கின்றன.

பெற்றோரின் மரபணுக்கள் மூலமாகவும் வெள்ளை முடிகள் வருகின்றன. அதாவது பெற்றோருக்கு வெள்ளை முடி சிறு வயதிலேயே வந்தால், அவர்களது குழந்தைகளுக்கும் சிறு வயதிலேயே வெள்ளை முடிகள் வந்துவிடுகின்றன. அவ்வாறு வந்தால், அந்த வெள்ளை முடியை தடுக்க முடியாது.

உடலில் வைட்டமின்கள் குறைவாக இருந்தாலும், முக்கியமாக வைட்டமின் பி12 குறைவாக இருந்தால், வெள்ளை முடிகள் வரும். அதற்காகத் தான் வைட்டமின் அதிகம் நிறைந்திருக்கும் உணவுகளை அதிகம் உண்ணச் சொல்கின்றனர். வைட்டமின் குறைபாட்டினால், உடலில் நோய்கள் மட்டும் வருவதில்லை. அதனால் அழகும் தான் கெடும்.

பெரும்பாலோனோருக்கு வெள்ளை மற்றும் கிரே முடிகள், அதிக மன அழுத்தம், ஆரோக்கியமற்ற வாழ்க்கை முறை அல்லது பரபரப்பான வாழ்க்கை முறையின் காரணத்தினாலும், வெள்ளை முடிகள் வருகின்றன. இதனை அனைத்து அழகியல் நிபுணர்களும் ஒப்புக் கொள்கின்றனர். ஆகவே இவை அனைத்தையும் விட்டு, ஆரோக்கியமான, மன அழுத்தமில்லாத வாழ்க்கை முறையில் வாழ்ந்து வந்தால், வெள்ளை முடிகள் வருவதைத் தடுக்கலாம்.


ishwarya

Posts : 24602
Join date : 01/02/2013

View user profile

Back to top Go down

Back to top


 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum