Related Posts Plugin for WordPress, Blogger...
Keywords


விக்கல் நல்லதா கெட்டதா?

View previous topic View next topic Go down

விக்கல் நல்லதா கெட்டதா?

Post  ishwarya on Mon May 13, 2013 3:10 pm

நமது வயிற்றையும், மார்புப் பகுதியையும் `உதரவிதானம்' என்ற ஒரு பகுதி பிரிக்கிறது. சிலநேரங்களில் அதன் தசைநார்கள் திடீரென்றும், தன்னிச்சையாகவும் சுருங்கி விரிகின்றன. அப்போது ஏற்படுவதுதான் விக்கல். விக்கல் நமது உடலுக்குத் தேவையான, பயனுள்ள ஒன்றா என்றால், `இல்லை' என்பதுதான் பதில்.

பெரும்பாலான விக்கல்கள் காரணம் இல்லாமலே தோன்றுகின்றன. அவ்வாறே தாமாகவே நின்றுவிடுகின்றன. ஓரிரு நிமிடங்களுக்கு மேல் விக்கல் நீடிப்பது அரிது. விக்கல் ஏற்படும்போது ஒருவருக்கு நிமிடத்துக்கு 4 முறை முதல் 60 தடவை வரை விக்கல் ஏற்படக்கூடும்.

குறைந்த அளவு மட்டும் நீடிக்கும் இத்தகைய விக்கல்களுக்கு எவ்வித மருத்துவச் சிகிச்சையும் தேவையில்லை. ஆனால் சிலருக்குச் சில நாட்கள் வரை இந்த விக்கல் விட்டுவிட்டுத் தொடரலாம். அதற்கு ஏதாவது காரணம் இருக்கும். அப்படிப்பட்ட நேரங்களில் உடனடியாக மருத்துவரை அணுகுவதுதான் நல்லது.

ishwarya

Posts : 24602
Join date : 01/02/2013

View user profile

Back to top Go down

View previous topic View next topic Back to top


 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum