Related Posts Plugin for WordPress, Blogger...
Keywords


முதுகு பிரச்சினையை தீர்ப்பது எப்படி?

View previous topic View next topic Go down

முதுகு பிரச்சினையை தீர்ப்பது எப்படி?

Post  ishwarya on Mon May 13, 2013 3:21 pm

கூறியதாவது:-

இந்த முள்ளெலும்புகளில் இடையிலிருந்து வெளிவரும் சில நரம்புகள் தான், கை, கால்களுக்கு செல்கின்றன. இந்த முள்ளெலும்புகளில் தேய்மானம் அல்லது சரியான முறையில் ஒன்றன் பின் ஒன்று பதியாமல் இருத்தல் ஆகிய காரணங்களால், இவற்றின் இடையே செல்லும் நரம்புகளில் பாதிப்பு ஏற்பட்டு, முதுகு வலி ஏற்படுகிறது. சிறு வயது குழந்தைகள், பெரும்பாலும் வலியால் அவதிப்படுவதில்லை.

இடைநிலைப் பள்ளி குழந்தைகள், புத்தகச் சுமை காரணமாக, முதுகு மற்றும் தோள் வலியால் அவதிப்படுகின்றனர். முதுகு அமைப்பிலேயே பாதிப்பு ஏற்படுவதால் அவதிப்படும் குழந்தைகள் மிகக் குறைவே. புத்தகம், தண்ணீர் பாட்டில் ஆகியவற்றுடன் பையை தோளில் மாட்டிக் கொள்ளும் போது, உடலின் புவியீர்ப்பு மையத்தில் மாறுபாடு ஏற்பட்டு, சதை மற்றும் தசைகளில் வலி ஏற்படுகிறது.

வகுப்பு நேரத்தில் பெஞ்சும் நல்ல முறையில் வடிவமைக்கப்படாமல் இருக்கும் குழந்தைகளுக்கு ஏற்ற உயரத்தில் அமையாமல், முதுகு பகுதிக்கு சரியான சாய் மானம் இல்லாமல் இருக்கும். வீட்டுப் பாடத்தை தரையில் அமர்ந்து எழுதுவது, முதுகை வளைத்தப்படி சோபாவில் அமர்ந்து எழுதுவது ஆகியவையும் முதுகு வலியை அதிகரிக்க செய்யும்.

ishwarya

Posts : 24602
Join date : 01/02/2013

View user profile

Back to top Go down

View previous topic View next topic Back to top


 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum