Related Posts Plugin for WordPress, Blogger...
Keywords


மருக்கள் வராமல் தடுக்க சில மருத்துவ ஆலோசனைகள்.

View previous topic View next topic Go down

மருக்கள் வராமல் தடுக்க சில மருத்துவ ஆலோசனைகள்.

Post  ishwarya on Mon May 13, 2013 3:26 pm

மனிதர்களின் தோலில் எற்படும் மருக்கள், பபில்லோமா வைரசால் ஏற்படுகிறது. பொதுவாக மருக்கள் கைகளில் வரக்கூடியவை. கடின வகை உள்ளிட்ட பல்வேறு வகையான மருக்களும் உள்ளன. மருக்கள் வந்த இடத்தில் தோல் சற்று தடிமனாகவும், கடினமாதாகவும் காணப்படும். மருக்கள் எந்த வயதிலும், எந்த இடத்திலும் வரலாம். உடலில் தொடர் மருக்கள் சில நேரங்களில் ஏற்படும். அவைகளை உரிய சிகிச்சையின்றி அகற்றுதல் அரிது.

பொதுவாக குழந்தைகள் மற்றும் டீன்ஏஜ் வயதினருக்கு நோய் எதிர்ப்பு சக்தி குறையும்போது மருக்கள் உடலில் பரவும். மருக்கள் ஏற்படுத்தும் வைரஸ்கள் 50க்கும் மேற்பட்டவை உள்ளன. இவைகள் மரபு சார்ந்த வைரஸ்களாகும். இதில் குறிப்பிடத்தக்க வைரஸ்கள் வகைப்படுத்தப்பட்டுள்ளன. அவை ஒவ்வொன்றும் வெவ்வேறு தோற்றத்திலும், அளவிலும் மனித உடலில் காணப்படும்.

ஒருசில வைர‌ஸ்கள் கழுத்து பகுதியில் புற்றுநோயை உண்டாக்க கூடியது. இதில் குறிப்பிடத்தக்க வகையை 16 மற்றும் 18 வைரஸ்களை சொல்லலாம். இந்த மருக்கள் ஒரு மனித தோலில் இருந்து மற்றொரு தோலுக்கு எளிதில் பரவக்கூடியது. குறிப்பாக ஈரப்பாதமான சூழலில் வசிப்பவர்களுக்கு இந்த வைரஸ்கள் மருக்களை எளிதில் பரப்பி விடும். இவைகள் பல நேரங்களில் தீர்க்கப்பட முடியாமலும், வினோதமாகவும் காணப்படும்.

ishwarya

Posts : 24602
Join date : 01/02/2013

View user profile

Back to top Go down

View previous topic View next topic Back to top


 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum