Related Posts Plugin for WordPress, Blogger...

அரை மணி நேர ஆரோக்கிய `மந்திரம்'

View previous topic View next topic Go down

அரை மணி நேர ஆரோக்கிய `மந்திரம்'

Post  ishwarya on Mon May 13, 2013 5:35 pm

பெண்கள் ஆரோக்கியமாக வாழ்வது ரொம்ப சிம்பிள். வீட்டில் எவ்வளவுதான் வேலைகள் இருந்தாலும், அந்த வேலைகளை கவனித்துவிட்டு வேகவேகமாக அலுவலகத்திற்கு ஓடினாலும் பெண்களால் ஆரோக்கியத்தை கவனித்துக்கொள்ள முடியும்.

அதற்கு தினமும் வெறும் 30 நிமிடங்கள் போதுமானது. இந்த அரை மணி நேர ஆரோக்கிய மந்திரத்தை செயல்படுத்த ஜிம்முக்கு போய்தான் ஆகவேண்டும் என்றில்லை. வீட்டிலேயே செய்து முடித்துவிடலாம். எப்படி?

* தினமும் வழக்கமான நேரத்தைவிட அரை மணி நேரம் முன்னதாக விழித்திடுங்கள். அந்த நேரத்தில் 20 நிமிடத்தை உடற்பயிற்சிக்காக ஒதுக்குங்கள். முதலில் நடை பயிற்சிக்கு செல்ல மனதளவில் தயாராகுங்கள்.

* நடை பயிற்சியை தொடங்குவதற்கு முன்னால் ஒன்று அல்லது இரண்டு கப் தண்ணீர் பருகுங்கள்.

* உடற்பயிற்சிக்காக ஒதுக்கும் அரை மணி நேரமும் கடுமையான பயிற்சி செய்யும் திட்டம் இருந்தால், முதலிலே ஒரு கப் பால் அல்லது ஒரு பழம் சாப்பிடுவது நல்லது. முதல் நாள் இரவில் 8 மணிக்கு சாப்பிடுகிறீர்கள் என்றால், மறுநாள் விழித்து உடற்பயிற்சி செய்ய செல்லும்போது கிட்டத்தட்ட பத்து மணி நேரம் ஆகியிருக்கும். அவ்வளவு நேரம் வயிறு காலியாக இருப்பது கடுமையான உடற்பயிற்சிக்கு ஏற்றதல்ல. அதனால்தான் ஒரு கப் பால் அல்லது ஒரு பழம் சாப்பிட்டுவிட்டு கடுமையான உடற்பயிற்சியை தொடரவேண்டும்.

* கடுமையான உடற்பயிற்சி பெண்களின் உடலுக்கு அவசியம் இல்லை. 20 நிமிடங்கள் வேகமாக நடந்து செல்லுங்கள் அல்லது மாடிப்படிகளில் நாலைந்து முறை ஏறி இறங்குங்கள்.

* பக்கத்து வீட்டு பெண்களையோ, உறவினர்களையோ உடன் அழைத்துச் சென்றபடி நடப்பது தப்பில்லை. ஆனால் குடும்பக் கதை, ஊர்க் கதை பேசுவதற்கு அந்த நேரத்தை பயன்படுத்தாதீர். பெண்கள் பேசிக்கொண்டே நடந்தால் அதன் பெயர் உடற் பயிற்சி அல்ல! ஊர் கதை பேசுதல்! உடற்பயிற்சியின்போது பேசாமல் கைகளை வேகமாக வீசி நடந்து செல்லுங்கள். நீங்கள் அரை மணி நேரமே உடற்பயிற்சிக்காக ஒதுக்குவதால் அந்த நேரத்தை முழுமையாக அதற்கு மட்டுமே பயன்படுத்துங்கள்.

ishwarya

Posts : 24602
Join date : 01/02/2013

View user profile

Back to top Go down

View previous topic View next topic Back to top


 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum