Related Posts Plugin for WordPress, Blogger...
Keywords


மண்டை ஒட்டில் துளை போடும் மருத்துவம்.!

View previous topic View next topic Go down

மண்டை ஒட்டில் துளை போடும் மருத்துவம்.!

Post  ishwarya on Mon May 13, 2013 6:21 pm

hic) மனிதனின் மண்டை ஒடு என்பதால் அவர் 5000 ஆண்டுகளுக்கு முன்பு வாழ்ந்திருக்க வேண்டும் என்று தீர்மானிக்கப்பட்டது.

இந்த மண்டை ஒட்டிற்கு உரியவர் துளை போடப்பட்ட பிறகு உயிர் வாழ்ந்திருக்கலாம் என்றும் தீர்மானிக்கப்பட்டது. பழைய கற்காலத்திலும் (Mesolithic) இந்த வகை சிகிச்சை நடந்ததற்கான சான்று கிடைத்துள்ளது. 1966ல் உக்கிரேயின் நாட்டில் 7,620 ஆண்டுகளுக்கு முன்பு வாழ்ந்த மனிதனின் மண்டை ஓடு மீட்கப்பட்டது.

அதில் துளை போடப்பட்டிருந்தது. பழைய காலச் சமயச் சடங்குகளிலும் மண்டை ஒட்டில் துளை போடும் வழக்கம் இருந்திருக்கலாம் என்று நிபுணர்கள் சந்தேகிக்கின்றனர். சித்த வைத்தியம் எனப்படும் தமிழர்களுக்குச் சொந்தமான வைத்திய முறையில் சத்திர சிகிச்சையும் இடம் பெற்றிருக்கிறது. சுமார் ஆயிரம் ஆண்டு காலம் அந்நியர்களான மொகலாயர்களும் ஆங்கிலேயர்களும் ஆட்சி செய்ததால் தமிழர்களுடைய புராதன மருத்துவம் அரச ஆதரவின்றி வீழ்ச்சி அடைந்தது.

சித்த வைத்தியம் பதினெண் சித்தர்களால் அருளப்பட்டது. போகர் தேரையர் போன்ற மருத்துவச் சித்தர்கள் மண்டை ஓட்டைத் திறந்து மூளை அறுவைச் சிகிச்சை (Brain Surgery) செய்திருக்கலாம் என்று எண்ண இடமிருக்கிறது. அறுவைக்கு முந்திய மயக்க மருந்து கொடுக்கும் வழக்கமும் இருந்ததற்கான வரலாற்றுச் சான்றுகள் கிடைத்துள்ளன.

ishwarya

Posts : 24602
Join date : 01/02/2013

View user profile

Back to top Go down

View previous topic View next topic Back to top


 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum