Related Posts Plugin for WordPress, Blogger...
Keywords


உங்கள் புருவங்களை அழகாக பராமரிக்க சில டிப்ஸ்.

Go down

உங்கள் புருவங்களை அழகாக பராமரிக்க சில டிப்ஸ்.

Post  ishwarya on Mon May 13, 2013 6:36 pm

புருவங்களை எப்போதும் திரெடிங் முறையில் அகற்றுவதே மிகவும் நல்லது. சிலர் வாக்சிங் முறையிலும் அகற்றுவதுண்டு. வாக்சிங் செய்வதால் நாளடைவில் அந்த இடத்துத் தசைகள் சுருங்கித் தொய்ந்து போக அதிக வாய்ப்பு உள்ளது. எனவே வாக்சிங் முறையில் புருவங்களை நீக்க கூடாது .

* சிலர் பிளேடு உபயோகித்துப் புருவங்களை ஷேப் செய்வதும் உண்டு. இந்த முறை மிகவும் ஆபத்தானது. அப்படி அகற்றும் போது அந்த இடத்து முடிகள் மறுபடி வளரும் போது மிகவும் அடர்த்தியாக மற்றும் ஒழுங்கற்ற முறையில் வளரும். எனவே இவ்வாறு செய்ய கூடாது.

* புருவங்கள் நரைத்திருந்தால் மஸ்காராவை உபயோகித்து கருப்பாக்கிக் கொள்ளலாம். மஸ்காரா பிரஷ்ஷை லேசாகக் காய வைத்து நரையை மறைக்கத் தடவலாம். ஐ ப்ரோ பென்சில் உபயோகிப்பதை விட இப்படிச் செய்வது மிகவும் அழகாக, இயற்கையாக இருக்கும்.

* கண்களுக்கு அடிக்கடி ஐ பேட் உபயோகிக்கலாம். இது கண்கள் குளிர்ச்சி அடைவதற்கும், புருவங்களின் சீராக வளர்வதற்கும் உதவும்.

* புருவங்களின் வளர்ச்சிக்கு லாவண்டர், ரேஸ்மெரி, மாதிரியான அரோமா எண்ணெய்கள் மிகவும் சிறந்தவை. அவற்றை சூடு படுத்தாமல் அப்படியே மசாஜ் செய்ய உபயோகிக்க வேண்டும்.


ishwarya

Posts : 24602
Join date : 01/02/2013

View user profile

Back to top Go down

Back to top


 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum