Related Posts Plugin for WordPress, Blogger...
Keywords


உங்களுக்கு `சிக்ஸ்பேக்’ அடைய ஆசையா? சில குறிப்பு .

Go down

உங்களுக்கு `சிக்ஸ்பேக்’ அடைய ஆசையா? சில குறிப்பு .

Post  ishwarya on Tue May 21, 2013 1:54 pm

சினிமா கதாநாயகனைப் போல் `சிக்ஸ்பேக்’ அடைய ஆசையா? பெண்கள் கட்டழகு பெற விரும்புகிறீர்களா? அப்படியானால் கஷ்டப்பட்டு பெரிய எடை தூக்க வேண்டிய அவசியமில்லை, சிறிய எடையைத் தூக்கிப் பயிற்சி செய்தாலே போதும். ஒரு புதிய ஆய்வு கூறும் தகவல் இது.



தசைகள் உருவாக்கத்தில் பெரிய எடைகளைவிட, சிறிய எடைகள் அதிகப் பலன் தருகின்றன என்கின்றனர், இந்த ஆய்வை மேற்கொண்ட கனடா மெக்மாஸ்டர் பல்கலைக்கழக ஆய்வாளர்கள்.

கஷ்டப்பட்டு சிலமுறை அதிக எடையைத் தூக்குவதைவிட, குறைந்த எடையை அதிக முறை தூக்குவது, தசை திரட்சியை உருவாக்கும் என்று இவர்கள் கண்டுபிடித்திருக்கிறார்கள். இந்த ஆய்வில் பங்கேற்ற முன்னணி ஆய்வாளரான நிக்கோலஸ் பர்ட், “வழக்கமாகக் கூறப்படும் தீவிரமான எடைப் பயிற்சிக்கு மாறாக, சிறிய எடையைத் தூக்குவது, தசை உருவாக்கச் செயல்பாட்டை நன்றாகத் தூண்டும், அதிக தசைகள் உருவாகவும் வைக்கும்” என்கிறார் இவர்.



ஆனால் இதில் கவனிக்க வேண்டிய விஷயம் ஒன்று இருக்கிறது. தற்போது, அதிக எடை தூக்குபவர்கள் அப்பயிற்சியை சிறிது நேரமே செய்ய முடியும் என்பதால் ஜிம் நேரம் விரைவாக முடிந்துவிடுகிறது, ஆனால் சிறிய எடையை அதிக நேரம் தூக்கலாம் என்பதால் கூடுதல் நேரம் உடற்பயிற்சிக் கூடத்தில் இருக்க வேண்டியிருக்கும்.



இருந்தபோதும், தசைகள் உருவாக்கத்துக்கு அதிக தீவிரம் அல்லாத குறைந்த எடைப் பயிற்சிதான் சிறப்பானது என்று அடித்துக் கூறுகிறார், பர்ட். சிறிய எடையைத் திரும்பத் திரும்ப அதிக முறை தூக்குவதால், தசை உருவாக்கச் செயல்பாட்டுத் தூண்டல் பல நாட்களுக்கு நீடித்திருக்கும் என்கிறார் இவர். எனவே, இனிமேல் கஷ்டப்படாமல் புத்திசாலித்தனமாக எடை தூக்குங்க!




ishwarya

Posts : 24602
Join date : 01/02/2013

View user profile

Back to top Go down

Back to top


 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum