Related Posts Plugin for WordPress, Blogger...
Keywords


கால நிலையின் மாற்றத்தால் ஏற்படும் மூக்கடைப்பு.

View previous topic View next topic Go down

கால நிலையின் மாற்றத்தால் ஏற்படும் மூக்கடைப்பு.

Post  ishwarya on Tue May 21, 2013 2:29 pm

நம்முடைய மூக்கின் உட்பகுதி , தொண்டையின் உட்பகுதி, சைனஸ் எனப்படும் முக மற்றும் தலை எழும்புகளின் காற்று நிரம்பிய இடைவெளிகளின் உட்பகுதி என்பவை மிகவும் நுணுக்கமானவை. குறிப்பாக நாம் சுவாசிக்கும் போது காற்றோடு சேர்ந்து செல்லும் சில தூசி துணிக்கைகள்( கண்ணுக்குத் தெரியாத) இந்த பகுதிகளின் உட்புறத்திலே படும் போது அந்தப் பகுதியில் பல்வேறு மாற்றங்கள் ஏற்படலாம். இந்த மாற்றங்கள் உண்மையில் அந்த துணிக்கைகளின் பாதிப்பில் இருந்து நம்மை பாதுகாக்கவே ஏற்படுகிறது.



இவ்வாறு நம்மை பாதுகாக்க ஏற்படும் மாற்றங்களே நமக்கு சில அசௌகரியங்களை ஏற்படுத்தலாம். அதுவே அலர்ஜி (allergic reaction)எனப்படுகிறது. சில குறிப்பிட்ட காலப்பகுதியில் காற்றிலே சில துணிக்கைகள் அதிகமாக காணப்படும் (பொதுவாக தாவரங்களிலே இருந்து வரும் துணிக்கைகள்), இவ்வாறான காலப் பகுதியில் நமக்கு அதிகமாக இந்தப் பிரச்சினை ஏற்படலாம் . இவ்வாறு குறிப்பிட்ட காலத்தில் ஏற்படும் பிரச்சினை seasonal allergic rhinitis எனப்படுகிறது (இங்கே rhinitis எனப்படுவது மூக்கு சம்பந்தப்பட்டது என்பதைக் குறிக்கும்).

இவ்வாறான அலர்ஜிகள் ஏற்படும் போது மூக்கு, தொண்டை, சைனஸ் போன்ற பகுதிகளின் உட்புறம் வீங்கி நீர் தேங்குவதாலே மூக்கடைப்பு, தொண்டையில் சளி அடைப்பது போன்ற பிரச்சினைகள் ஏற்படுகின்றன. இதனால் ஏற்படுகின்ற அசௌவ்கரியத்தினால் நமது வேலைத்திறன் குறையும். மற்றும்படி பெரிதளவான பாதிப்புக்கள் இல்லை. ஆனாலும் சில பேரில் இந்த மாற்றம் ஏற்படுவதைத் தொடர்ந்து இலகுவாக கிருமிகள் தொற்றிக் கொள்ளலாம் இதனால் சுவாசப்பை தொற்று நோய்கள் (respiratory tract infection/ pnumonia) ஏற்படலாம்.



வெறுமனே அலர்ஜியால் ஏற்படும் அறிகுறிகள்...

1. மூக்கடைப்பு

2. மூக்கினால் நீர் வெளியேறுதல்

3. தொண்டை அடைப்பு

4. தொண்டை அரிப்பு

5. தலைப்பாரம்

6. தலையிடி

7. கண்ணிலே அரிப்பு ஏற்படுதல்



முக்கியமாக அறிந்து கொள்ள வேண்டியது வெறுமனே அலர்ஜியால் ஏற்படும் இந்த மாற்றங்களில் காய்ச்சல் ஏற்படாது. மேற்கூறிய பிரச்சனைகளோடு காய்ச்சல் ஏற்படடாலோ அல்லது மஞ்சள் நிற சளி , ரத்தம் கலந்த சளி ஏற்படடாலோ பிரச்சினை அலர்ஜியால் ஏற்பட்டதாக இருக்க சந்தர்ப்பம் குறைவு.



இந்தவகையான அலர்ஜியால் நமக்கு பெரிய பாதிப்புக்கள் ஏற்படாவிட்டாலும் அது ஏற்படுகின்ற அசௌகரியங்கள் சிலவேளைகளில்தாங்க முடியாததாக இருக்கும். இதை முற்று முழுதாக சுகமாக்க மருந்துகள் இல்லாவிட்டாலும் அசௌகரியங்களை இல்லாமல் செய்ய அல்லது குறைப்பதற்கும், மேலும் இது வரும் முன்னே தடுப்பதற்கும் சக்தி வாய்ந்த மருந்துகள் இருக்கின்றன.



பிரிட்டோன் (piriton) எனப்படும் மாத்திரையை எல்லோரும் அறிந்திருப்பீர்கள். இந்த வகையைச்சேர்ந்த மாத்திரைகளே இந்தப் பிரச்சினைக்கு முதற்படியாக பாவிக்கப்படுகிறது. ஆனாலும் இந்த மாத்திரை எடுக்கும் போது தூக்கம் வருவதால் வேலைக்கு செல்பவர்களுக்கு இது உதவாது. இப்போது இதே வகையான ஆனால் தூக்கம் ஏற்படுத்தாத நிறைய புதிய வகையான மாத்திரைகள் வந்துவிட்டன. அவற்றை எடுப்பதன் மூலம் நீங்கள் இந்தப் பிரச்சினையால் ஏற்படும் அசௌகரியங்களை குறைத்துக் கொண்டு உங்கள் வேலையில்கவனமெடுக்கலாம்.



அடுத்ததாக steroid எனப்படும் மருந்துகள் பாவிக்கப்படலாம். இவை உட்கொள்ளப்படும் போது வேறு பல பக்க விளைவுகளை ஏற்படுத்துவதால் , மூக்கிலே மட்டும் செலுத்தப்படும் spray வடிவிலே கிடைக்கின்றன. இவை இந்தப் பிரச்சனைகளை குறைப்பது மட்டுமல்ல அவை வருவதை தடுப்பதற்கும் பயன்படுகிறது. இந்தப் பிரச்சினை இருப்பவர்கள் எந்தக்காலத்தில் இது ஏற்படுகிறதோ அதற்கு முன்னமே இந்த மருந்தை (spray வடிவில் ) பாவிப்பதன் மூலம் இது ஏற்படாமல் தடுக்கலாம். இவை தவீர நன்கு நீராவி பிடித்தல் இந்தப் பிரச்சினையால் ஏற்படும் அசௌகரியத்தை மிகப் பெரிய அளவிலே குறைக்க பயன்படும்.




ishwarya

Posts : 24602
Join date : 01/02/2013

View user profile

Back to top Go down

View previous topic View next topic Back to top


 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum