Related Posts Plugin for WordPress, Blogger...
Keywords


ஒரு வாழைப்பழம் 4 அப்பிளுக்கு சமம்

View previous topic View next topic Go down

ஒரு வாழைப்பழம் 4 அப்பிளுக்கு சமம்

Post  ishwarya on Tue May 21, 2013 6:09 pm

‘தினசரி ஒரு அப்பிள் மருத்துவர் தேவையில்லை’ என்பது ஆங்கில அறிவுரை. அந்த அப்பிள் நான்குக்கு ஒரு வாழைப்பழம் சமம் என்று புதிய ஆய்வில் தெரியவந்துள்ளது. வாழைப்பழத்தின் மகத்துவம் காலம் காலமாக தெரிந்ததுதான். எனினும், இப்போதைய சூழ்நிலையில் மனித ஆரோக்கியத்தில் அதன் பங்கு பற்றி டில்லியை சேர்ந்த உணவியல் நிபுணர்கள் சிலர் ஆய்வு நடத்தினர். அவர்கள் கூறியதாவது, வாழைப்பழம் சாப்பிட்டால் நிறைகூடும் என்பது சிலரது எண்ணம். அது உண்மையல்ல. ஏனெனில், 0 வீதம் கொழுப்பு கொண்டது வாழை.



மாறாக, அதிக உணவு சாப்பிடும் ஆர்வத்தையும் குறைத்து, ஒட்டுமொத்த உடல் இயக்கத்துக்கு வாழைப்பழம் உதவுகிறது. உணவின் கல்சியம், மக்னீசிய சத்துக்களை உடலில் முழுமையாக சேர்க்கிறது. கோதுமை, சோளம், சிவப்பு அரிசி, பருப்புகள், உருளைக்கிழங்கில் உள்ள சத்துக்கள் வாழைப்பழத்தில் உள்ளன. அப்பிளுடன் ஒப்பிட்டால், ஒரு வாழைப்பழத்துக்கு 4 அப்பிள்கள் தான் சமம். ஏனெனில், அப்பிளைவிட புரோட்டின், கார்போஹைட்ரேட்ஸ், பொட்டாசியம், விற்றமின் சி, இரும்பு, பொஸ்பரஸ் ஆகியவை வாழைப்பழத்தில் பல மடங்கு அதிகம். வாழைப்பழத்தில் 100 கலோரிகளே உள்ளதால் உடல் நிறை அதிகரிக்காது. எனவே, தினசரி 2 வாழைப்பழம் சாப்பிட்டு வந்தால் இளமை, ஆரோக்கியம் நிச்சயம் என்று ஆய்வில் நிபுணர்கள் தெரிவித்தனர்.




ishwarya

Posts : 24602
Join date : 01/02/2013

View user profile

Back to top Go down

View previous topic View next topic Back to top


 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum