Related Posts Plugin for WordPress, Blogger...
Keywords


சுத்தம்.....சுகாதாரம்....

Go down

சுத்தம்.....சுகாதாரம்....

Post  ishwarya on Wed May 22, 2013 2:51 pm

ஆரோக்கியம் என்பது இன்றைய பல சூழல்களில் நமக்கு சவால் தான். சுகாதாரக் கேடுள்ள சில இடங்களை நாம் பார்க்க நேரும்போது முடிந்தவரை அந்த இடத்தில் இருந்து நாம் விரைவில் வெளிவரவே முயற்சிப்போம். குறிப்பாக பொது இடங்களில் உள்ள கழிப்பறை களை பார்த்ததுமே கண்ணைக் கட்டும்.

குடல் குமட்டிக் கொண்டு வாய் வரை வந்து போகும். ஆரோக்கியம் பற்றி கொஞ்சமும் அக்கறைப்படாதவர்கள் பெருகி விட்டதே இதற்குக் காரணம். ஒவ்வொரு வித ஆரோக்கியக் குறைவும் ஒவ்வொரு வித நோயைக் கொண்டு வரும் என்பது இவர்களுக்கும் தெரியும். ஆனால் எங்கோ பொது இடத்தில் தானே இம்மாதிரியான குறைபாடுகள்.

அந்த இடத்திற்கு நாம் அடிக்கடி போகவா போகிறோம் என்பதான அலட்சிய மனோபாவம் ஆரோக்கியக்குறைவை சரி செய்யும் குறைந்த பட்ச முயற்சிகளைக் கூட எடுக்க விடாமல் நம்மில் பலரையும் கட்டிப் போட்டு விடுகிறது. கழிவு நீர்க்குழாய் உடைந்து ரோட்டில் சாக்கடை நீர் ஆறாக ஓடுகிறது.

அதன் குடலைப் புடுங்கும் நாற்றத்தை சகித்துக் கொண்டு காலையும் மாலையும் அந்த வழியாக கடக்கும் மனிதர்கள் எத்தனை எத்தனை பேர்! அத்தனை பேர் மனதிலும் முதலில் எரிச்சல் எட்டிப் பார்க்கும். அடுத்ததாக எங்கே அந்த சாக்கடை நம் உடைகளை பாழ்படுத்தி விடுமோ என்ற பயம் எட்டிப் பார்க்கும்.

ஒருவழியாக போராடி அந்த சாக்கடைப் பகுதியை கடந்து விட்டால் அப்புறமாய் அதை மறந்தே போவோம். இப்படி தெரு என்றால் அலட்சியம் காட்டும் நாம், இதுவே நம் வீடு என்னும் பட்சத்தில் சுத்தம் சுகாதாரம் பேணிக் காப்போம். ஆனால் இதில் கூட பலருக்கு எந்த மாதிரியான ஆரோக்கியக் குறைபாட்டை எப்படி சரி செய்வது என்பதில் குழப்பம் வரும்.

பிளாட்டுகளில் வசிக்கும் பலரும் தங்களை வீட்டுக்குள் மூடி வைத்துக் கொண்டு ஆரோக்கியத்தை வாசலோடு நிறுத்தி விடுகிறார்கள். திறந்து வைக்கிற உங்கள் வீட்டு ஜன்னலில் இருந்து தான்முதல் ஆரோக்கியம் தொடங்குகிறது. காற்றடித்தாலும், மழை பொழிந்தாலும், வெயிலடித்தாலும் நாம் முதலில் செய்யும் காரியம் வீட்டைச் சுற்றியி ருக்கும் ஜன்னலை மூடுவது.

இது வீட்டை பாதுகாப்பது போல தோன்றினாலும், எப்போதும் ஜன்னலை மூடி வைத்திருப்பது ஒரு தவறான விஷயம். நோய்க்கிருமிகள் அறைக்குள் சுற்றிச் சுற்றி பெருகி நம்மை தாக்கும். ஜன்னலை திறந்து வைப்பதினால் சுத்தமான காற்றும் சூரிய வெளிச்சமும் அறை முழுக்க சுற்றி யிருக்கும். நோய்க்கிருமிகளை வெளியேற்றும்.

அதனால் அறையின் ஜன்னலை பெரும்பாலும் திறந்து வைத்திருப்பதே நல்லது. பெரும்பாலான கிருமிகள் சூரிய வெப்பத்தில் மறைந்து விடும். தூய்மையான காற்றில் நல்ல பிராணவாயு நிறைந்திருக்கும். அது அறையெங்கும் பரவி நம்மை சுறுசுறுப்பாக இயங்க வைக்கும். இப்போது சுற்றி இருக்கும் சுற்றுச்சூழல் மாசுகளால் பிராணவாயு தட்டுப்பாடாக இருக்கிறது.

அதன் விளைவாக நுரையீரல் பாதிக்கப்பட்டு பலவித நோய்கள் தோன்றுகிறது. போதாக்குறைக்கு நாம் அன்றாடம் பயன்படுத்தும் பொருட்களிலுள்ள ரசாயனம், கரியமில வாயு வெளியிடும் பொருட்கள் இவற்றால் வீட்டின் தூய்மை கெட வாய்ப்பிருக்கிறது. சிலர் செருப்புக்காலுடன் வீட்டுக்குள் வந்து விடுவார்கள்.

இதனால் காலணிகளில் ஒட்டிக்கொண்டிருக்கும் பல நோய் தொற்றுக் கிருமிகள் வீட்டுக்குள் வருகிறது. அதனால் காலணிகளை வீட்டுக்குள் ஒருபோதும் கொண்டு வரக் கூடாது. வீட்டை சுத்தப்படுத்திய பின் அறையில் ரூம் ஸ்ப்ரே அடிப்பது பல வீடுகளில் வழக்கம். ஆனால் ரூம் ஸ்ப்ரேக்களில் பெரும்பாலும் கடுமையான ரசாயனப் பொருட்களே சேர்ந்திருக்கிறது.

அது அறையில் பரவியிருக்கும் தூய்மையான காற்றை மாசுபடுத்தி விஷமாக்கி விடுகிறது. அதற்கு மேல் நாம் பயன்படுத்தும் கொசு மருந்து, ஸ்ப்ரே போன்றவை காற்றோடு கலந்து வெகு நேரம் மூச்சை திணற அடிக்கிறது. அது சுவாசிக்கும் போது உள்ளே சென்று தீய விளைவுகளை ஏற்படுத்துகிறது.

இயற்கையான முறையில் அறையை வாசனையாக வைக்க நல்ல மலர்களை வாங்கி துளைகளுள்ள மூங்கில் கூடைகளில் வைத்து விட்டால் அறையெங்கும் வாசம் பரவும். அறையை மூடி வைத்துவிட்டு சமைப்பதால், சமையல் எரிவாயுவில் உள்ள கார்பன் மோனோ ஆக்சைடு, நைட்ரஜன் வாயுக்கள் வெளிப்பட்டு பெருமளவு காற்றில் கலந்துவிடும்.

இந்த வாயுக்கள் காற்றோடு கலந்து உடலில் சேரச்சேர உடற்சோர்வு, மூச்சுத்திணறல், கண்ணெரிச்சல், இருமல், போன்ற பல உபாதைகள் ஏற்படும். அதனால் கேஸ் எரியும் போது கண்டிப்பாக ஜன்னல்கள் திறந்திருக்க வேண்டும். சமைக்கும் போது எக்ஸ்ஹாஸ்ட்ட்ட் பேன்கள்களை பயன்படுத்த வேண்டும். வீட்டுக்குள் கிருமிகள் தேங்காமல் பார்த்துக் கொண்டாலே அது ஆனந்தம் விளையாடும் வீடு தானே!

ishwarya

Posts : 24602
Join date : 01/02/2013

View user profile

Back to top Go down

Back to top


 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum