Related Posts Plugin for WordPress, Blogger...
Keywords


நிருதீஸ்வரர் கோவில்

View previous topic View next topic Go down

நிருதீஸ்வரர் கோவில்

Post  ishwarya on Wed May 22, 2013 5:59 pm

தலவரலாறு.........

எப்போதும் வற்றாத நீர் பெருக்கையுடைய காவிரி நதி பாயும் நாடான சோழ நாட்டை வளவநாடு, சென்னிநாடு, அபயநாடு, கிள்ளிநாடு, செம்பியர் நாடு, பொன்னி நாடு என பல்வேறு சிறப்பு பெயர்களால் அழைப்பர். சோழ நாட்டில் உள்ள பழமை வாய்ந்த கோவில்களில் ஒன்று தான் நிருதீஸ்வரர் தலமாகும்.

இத்தலத்தில் இறைவனாக நிருதீசுவரரும், இறைவியாக தர்மசம்வர்த்தினியும் வீற்றிருந்து பக்தர்களுக்கு அருள்பாலித்து வருகின்றனர். இத்தலம் திருவாரூர் மாவட்டம் நீடாமங்கலத்தில் இருந்து கும்பகோணம் செல்லும் வழித்தடத்தில் அமைந்துள்ளது. மும்மூர்த்திகளில் ஒருவரான பிரம்மா படைப்பு தொழிலுக்கு அதிபதியாக விளங்குகிறார். படைப்பு கடவுளான பிரம்மா படைப்பு தொழிலை செய்வதோடு மட்டும் நின்று விடுவதில்லை. நாம் செய்கிற அனைத்து காரியங்களையும் கண்கா ணிக்க ஒரு படையையே வைத்து இருக்கிறார். இவரின் கண்காணிப்பு படையினர் எட்டு திசைகளிலும் இருந்து நம்மை பாதுகாத்து வருகின்றனர்.

ஆதலால் தான் இவர்களை அஷ்டதிக்கு பாலகர்கள் என்று அழைக்கின்றனர். இவர்கள் நாம் செய்யும் பாவம், புண்ணியம் என எந்தவொரு காரியமாக இருந்தாலும் அதை அப்படியே பிரம்மாவிடம் கூறுவர். கிழக்கில் இந்திரன், தென் கிழக்கில் அக்னி, மேற்கில் வருண பகவான், வடமேற்கில் வாயு பகவான், வடக்கில் குபேரன், வட கிழக்கில் ஈசான், தெற்கில் எமன், தென்மேற்கில் நிருதி பகவான் என அனைவரும் அழகுற வீற்றிருந்து நம்மை கண்காணித்து வருகின்றனர்.

மனிதர்களின் செயல்கள் அனைத்திற்கும் சாட்சியாக திகழும் அஷ்டதிக்கு பாலகர்கள் ஒரு முறை செயலற்று திகைத்து போய் நின்றார்கள். ஆம்... சிவபெருமான் ஆலகால விஷத்தை உண்ட போது அஷ்டதிக்கு பாலகர்கள் மட்டுமின்றி திருமால், பிரம்மா, இந்திரன் என அனைவரும்தங்கள் தொழிலை மறந்து திகைத்து நின்றனர்.

இவ்வாறு உலகின் அனைத்து செயல்பாடுகளும் ஸ்தம்பித்து அப்படி நின்று விட தேவர்களும், முனிவர்களும் சிவனிடம் ஓடி வந்து கதறினர். பிறகு சிவனின் ஆணைப்படி சிவபூஜையில் இறங்க முடிவு செய்தனர். பின்னர் காசியாரண்யம் என்கிற சேத்திரத்தை சுற்றி வந்து, அவரவர் திசைக்கு சென்றனர். நீடாமங்கலம் அருகே உள்ள ஆலங்குடி என்ற பகுதியை தான் காசியாரண்யம் என அழைத்தனர்.

இந்த தலத்திற்கு அருகில் சுமார் 1 கிலோ மீட்டர் தொலைவில் பூளைவன நத்தம் என்றொரு கிராமம் உள்ளது. பூளைவன நத்தம் என்ற பெயர் நாளடைவில் மருவி தற்போது புலவர் நத்தம் என்று அழைக்கப்படுகிறது. வங்கனார் என்னும் சங்கப்புலவர் இந்த தலத்தின் பெருமையை உலகிற்கு உணர்த்தியதால் அந்த புலவரின் நினைவாகவும் இப்பகுதி புலவர் நத்தம் என அழைக்கப்படுகிறது.

காசியாரண்யம் என்ற தலத்தை சுற்றி அஷ்டதிக்கு பாலகர்கள் சென்றனர். ஆரண்ய தலத்தில் இந்திரன் தீர்த்தத்தை உருவாக்கி சிவலிங்க பிரதிஷ்டை செய்து வழிபட்டான். எனவே இங்கே உள்ள தீர்த்தம் இந்திர தீர்த்தம் என்று அழைக்கப்படுகிறது.

அதேபோல் பூனாயிருப்பு பகுதியில் அக்னி பகவான் (அக்னி தீர்த்தம்), நரிக்கு டியில் எமன் (எம தீர்த்தம்), பூந்தோட்டத்தில் வருண பகவான் (வருண தீர்த்தம்), மருதூரில் வாயு பகவான் (வாயு தீர்த்தம்), கீழ அமராவதியில் குபேரர் (குபேர தீர்த்தம்), சித்தன் வாழூரில் ஈசான்யர் (ஈசான்ய தீர்த்தம்), பூளை நத்தத்தில் நிருதி பகவான் (நிருதி தீர்த் தம்) என அனைவரும் தீர்த்தக்குளத்தை அமைத்து, சிவலிங்க பிரதிஷ்டை செய்து இழந்த தொழிலை மீண்டும் பெற்றதாக தலவரலாறு கூறுகிறது.

இழந்த செல்வங்கள்..........

புலவர் நத்தம் என்ற கிராமத்தில் நிருதி பகவான் சிவலிங்கத்தை பிரதிஷ்டை செய்து வழிபட்டதால் இங்குள்ள இறைவன் நிருதீசுவரர் என அழைக்கப்படுகிறார். இங்குள்ள தீர்த்தம் நிருதி தீர்த்தம் என்று அழைக்கப்படுகிறது. இங்குள்ள இறைவி நாமம் தர்மசம்வர்த்தினி. தங்கள் இழந்த செல்வத்தை பெற வேண்டி இங்குள்ள இறைவனையும், இறைவியையும் வழிபாடு செய்கின்றனர்.

இங்குள்ள நிருதி தீர்த்தத்தில் நீராடி, இறைவனுக்கு வில்வ இலையை சாற்றி, வஸ்திரம் அணிவித்து வழிபட்டால் நாம் இழந்த கல்வி செல்வம், தொழில்செல்வம், பொருட்செல்வம் உள்பட அனைத்து செல்வங்களும் நமக்கு கிட்டும் என்பது ஐதீகம். அதேபோல இங்குள்ள இறைவியை வழிபட்டால் அனைத்து செல்வங்களும் கிட்டும்.

தல சிறப்புகள்............

நாம் செய்யும் செயல்களை எல்லாம் கண்காணித்து வரும் அஷ்டதிக்கு பாலகர்களில் ஒருவரான நிருதி பக நிருதி பகவான்வான் சிவபெருமானை வணங்கி, தான் இழந்த தொழிலை திரும்ப பெற்றதலம். பாடகச்சேரி சுவாமிகள் உள்பட பல ஆன்மிக சான்றோர்கள் வழிபட்ட தலம் என்பன போன்ற பல்வேறு சிறப்புகளை பெற்றுள்ளது இத்தலம்.

இவ்வாறு சிறப்புகள் பெற்ற இந்த தலத்தில் பழங்காலத்தில் எண்ணற்ற விழாக்கள் நடைபெற்றுள்ளன. இந்த விழாக்களில் தஞ்சை, திருவாரூர், நாகப்பட்டினம், திருச்சி உள்பட தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் உள்ள எண்ணற்ற பக்தர்கள் வந்து கலந்து கொண்டுள்ளதாக வரலாற்றில் கூறப்பட்டுள்ளது. தற்போது இந்த கோவிலில் மகா சிவராத்திரி, பிரதோஷ வழிபாடு, திருவாதிரை உள்பட பல்வேறு விழாக்கள் நடைபெற்று வருகின்றன.

கும்பாபிஷேகம்............. இத்தலத்தில் சுவாமி, அம்பாள், விநாயகர், முருகன், நிருதி குரோதன பைரவர், தட்சிணா மூர்த்தி, சண்டிகேஸ்வரர் உள்பட பல்வேறு சன்னதிகள் உள்ளன. பழம்பெருமை வாய்ந்த இந்த ஆலயத்தில் சுமார் 30 ஆண்டுகளுக்கு முன்பாக கும் பாபிஷேகம் நடைபெற்று உள்ளது.

தற்போது இத்தலத்தில் கும்பாபிஷேகம் நடத்த முடிவு செய்யப்பட்டது. அதன்படி திருப்பணி வேலைகள் மும்முரமாக நடைபெற்று வருகின்றன. வருகிற மே மாதம் 12-ந் தேதி கும்பாபிஷேகம் நடைபெறுகிறது.

தல அமைவிடம்......

திருவாரூர் மாவட்டம் நீடாமங்கலத்தில் இருந்து கும்பகோணம் செல்லும் வழித்தடத்தில் நீடாமங்கலத்தில் இருந்து சுமார் 4 கிலோ மீட்டர் தொலைவிலும், கும்பகோணத்தில் இருந்து சுமார் 17 கிலோ மீட்டர் தொலைவிலும் இத்தலம் அமைந்துள்ளது. இத்தலத்திற்கு செல்ல கும்பகோணம், நீடாமங்கலத்தில் இருந்து அடிக்கடி பஸ் வசதி உள்ளது.


ishwarya

Posts : 24602
Join date : 01/02/2013

View user profile

Back to top Go down

View previous topic View next topic Back to top


 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum