Related Posts Plugin for WordPress, Blogger...
Keywords


வீரட்டேசுவரர் திருக்கோயில்

View previous topic View next topic Go down

வீரட்டேசுவரர் திருக்கோயில்

Post  ishwarya on Wed May 22, 2013 6:10 pm

மூலவர் - வீரட்டேசுவரர்

உற்சவர் - அந்தகாசுர வதமூர்த்தி

அம்மன் - பெரியநாயகி, சிவானந்த வல்லி

தீர்த்தம் - தென்பெண்ணை

பழமை - 1000 வருடங்களுக்கு முன்

இத்தலத்து முருகப்பெருமான் குறித்து அருணகிரிநாதர் திருப்புகழ் பாடல்கள் பாடியுள்ளார். நாயன்மார்களில் இருவரான மெய்ப்பொருள் நாயன்மார், நரசிங்க முனைய நாயனார் ஆகியோர் அவதரித்த ஊர் இது. சுவாமி மூலஸ்தானத்தில் பைரவ சொரூபமாக உள்ளாராம். எனவே பில்லி சூன்யம்,வைப்பு போன்ற தோசங்களை இவர் நிவர்த்தி செய்வதாக ஐதீகம்.

சந்நிதியின் பிரகாரத்தில் இருக்கும் இந்த அம்மன் இங்கு சிறப்பு பெற்றவர். சாந்த சொரூபியாக நமக்கு இருப்பது போலவே, கண்கள் இருபுறமும் வெள்ளையாகவும், நடுவில் கருப்பு கருவிழியுடனும் சாந்தமாக சிரித்த முகத்துடன் இயற்கையாக இருப்பது போலவே இருக்கிறார். இவரை வழிபட்டால் திருமணத் தடை நீங்குகிறது.

கஷ்டங்கள் நீங்கும். வேலை வாய்ப்பு தடை கல்யாணத் தடை ஆகியவை விலக விசேடமாகப் பிரார்த்தனை செய்து கொள்வது வழக்கமாக உள்ளது. எலுமிச்சம் பழ விளக்கு பூஜை செவ்வாய், வெள்ளி, ஞாயிறு ஆகிய கிழமைகளில் இராகு கால பூஜை செய்கிறார்கள். சுந்தரர், சேரமான் இருவரும் வான்வழியாகக் கயிலை செல்லும்போது, அவ்வை இந்த தலத்தில் பூஜை செய்து கொண்டிருந்தார்.

தானும் கயிலை செல்ல எண்ணி, அவசரமாக பூஜை செய்தாராம். உடனே விநாயகர் காட்சி தந்து பொறுமையாக பூஜை செய்ய அருளினார். “சீதக் களப” எனத் தொடங்கும் விநாயக அகவல் பாடி பூஜை செய்து முடித்தார். சுந்தரர், சேரமான் ஆகியோர் கயிலை சென்றடையும் முன்பே, விநாயகர் விசுவரூபம் கொண்டு தன் துதிக்கையால் அவ்வையாரை கயிலையில் சேர்த்தார்.

அந்த கணபதிதான் இவர். இவர் விசுவரூபம் எடுத்ததாலேயே பெரிய யானைக் கணபதி என்று பெயர் பெற்றார். முருகன் அசுரனை கொன்றதால் பிரம்மகத்தி தோசம் நீங்க பூமியில் சிவபூஜை செய்ய வேண்டினார். ஏற்ற இடம் எந்த இடம் என்று உணர்த்த அம்பாள், தன் கையிலிருந்த வேலை எறிந்தாள். திருக்கையிலிருந்து வேல் விழுந்ததால், இந்த இடம் “திருக்கை வேலூர்” என்றாயிற்று.

அதுதான் “திருக்கோவிலூர்.” முருகன் சிவனை பூஜை செய்த தலம் இது. சுக்கிரன் சாப விமோசனம் பெற்ற தலம் இது. அம்பாள் திரிபுர பைரவி உற்பத்தி தலம் இது. சப்த மாதாக்கள் உற்பத்தியான தலம் இது. 64 பைரவர்கள் 64 பைரவிகள் உற்பத்தியான தலம் இது. இவர் அருணகிரிநாதரால் திருப்புகழ் பாடப் பெற்றவர்.


ishwarya

Posts : 24602
Join date : 01/02/2013

View user profile

Back to top Go down

View previous topic View next topic Back to top


 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum